05/05/2024
பேரன்புடையீர்!
வணக்கம். உலகெங்கும் உள்ள இலுப்பையூர் மக்கள் பேராவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும், இலுப்பையூர் அருள்மிகு மகா மாரியம்மன் குடியழைப்பு விழா - 2024, வழக்கமான உற்சாகத்துடனும், கோலாகலத்துடனும் வருகின்ற மே மாதம் 10 ஆம் தேதி (சித்திரைத் திங்கள் 27 ஆம் நாள்) வெள்ளிக்கிழமை, அக்ஷய திரிதியை பொன்னாளில் தொடங்கி, மே மாதம் 14 ஆம் தேதி செவ்வாய் கிழமை வரை நடைபெற இருக்கின்றது.
குடி அழைப்பு விழாவிற்கு இலுப்பையூர் இளைஞர் அணியினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு நிகழ்ச்சிகள்:
*12/05/2024 ஞாயிற்றுக்கிழமை: மாலை 06.30 மணி - இரவு 10.00 : தஞ்சை ஶ்ரீ கிருஷ்ணா இசைக்குழுவினர் வழங்கும் இன்னிசை மழை*
*13/05/2024 திங்கட்கிழமை: அருள்மிகு செல்வ விநாயகர் மற்றும் அருள்மிகு மகா மாரியம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம்*
*13/05/2024 திங்கட்கிழமை: இரவு 10.00 மணியளவில் தொடங்கும் அம்மன் திருவீதி உலாவிற்கு வானவேடிக்கை மற்றும் கேரளா கொல்லம் உலகப் புகழ் தேவகலா தாம்போலம் கலைக்குழுவினரின் அதிரடி தப்பாட்டம்.*
குடியழைப்பு விழாவிலும், அனைத்து சிறப்பு நிகழ்ச்சிகளிலும் கிராம பொதுமக்கள், உற்றார், உறவினர் மற்றும் பக்த கோடி பெருமக்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்துக் கொண்டு, அம்மன் திருவருளை பெறுமாறு பணிவன்புடன் கொள்கிறோம்.
மேற்கண்ட நிகழ்ச்சிகளை வெகுசிறப்பாக நடத்துவதற்கு கிராமப் பொதுமக்கள், இளைஞர் அணியினர், மற்றும் பக்தர்கள் என அனைவரும் நன்கொடை தாராளமாக வழங்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
இளைஞர் அணியினரின் 2023 - 2024 ஆம் ஆண்டிற்கான வரவு - செலவு கணக்கு விவரம் மே மாதம் 19 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 06.00 மணிக்கு வெளியிடப்படும்.
*மேலும் விவரங்களுக்கு பார்க்க: https://iluppaiyur.com*
இப்படிக்கு
இளைஞர் அணியினர்
இலுப்பையூர்.