SDPI - Thiruvarur District

SDPI - Thiruvarur District போராட்டமே வாழ்க்கை
நீ போராட ஓடி வா.....?

27/10/2025
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் நகர நிர்வாகத்தின் சார்பாக அனைத்து செயல் வீரர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நகர தலைவர் I.ஜாஹி...
27/10/2025

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் நகர நிர்வாகத்தின் சார்பாக அனைத்து செயல் வீரர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நகர தலைவர் I.ஜாஹிர் உசேன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு SDPI கட்சியின் தமிழ் மாநில துணைத்தலைவர் மரியாதைக்குரிய B.அப்துல் ஹமீது அவர்களும் மற்றும் SDPI கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும் விமன் இந்தியா மூவ்மெண்டின் மாநில பொதுச் செயலாளருமான சகோதரி ஃபாயிஜா சபீக்கா அவர்களும் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

மேலும் இந்நிகழ்விற்கு SDPI கட்சியின் மாவட்டத் தலைவர் மாஸ் அப்துல் அஜீஸ் அவர்கள் மற்றும் மாவட்ட செயலாளர் J.முஹம்மது ஜாஸ்மின் மற்றும் விமன் இந்தியா மூவ்மெண்ட்டின் மாவட்ட தலைவர் மாஸ் ரூபியா ஆலிமா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

நிகழ்விற்கு SDPI கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் A.ஜெமீன் மாவட்ட துணை தலைவர்
A.அப்துல் லத்தீப் மாவட்ட செயலாளர் A.முஹம்மது இப்ராஹிம்(அசார்) மாவட்ட செயற்குழு உறுப்பினர் H.அபுதாஹிர் ஆகியோர் முன்னிலை வகித்தனர் இந்த நிகழ்ச்சியில் கூத்தாநல்லூர் நகரத்திற்கு உட்பட்ட அனைத்து செயல் வீரர்களும் கலந்து கொண்டனர்.

IT WING
SDPI கட்சி
திருவாரூர் மாவட்டம்..

26/10/2025

தனியார் பல்கலைக்கழகத் திருத்தச் சட்ட மசோதா திரும்பப் பெறப்படும்! - உயர் கல்வித்துறை அமைச்சரின் அறிவிப்புக்கு எஸ்டிபிஐ கட்சி வரவேற்பு

இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

தமிழ்நாட்டின் சமூகநீதியையும் ஏழை-எளிய மாணவர்களின் நலனையும் பாதிக்கும் வகையில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட, அரசு உதவி பெறும் கல்லூரிகளைத் தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்றும் தனியார் பல்கலைக்கழகத் திருத்தச் சட்ட மசோதா திரும்பப் பெறப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் அவர்கள் அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது.

தமிழ்நாடு, உயர்கல்வித் துறையில் இந்தியாவின் முன்மாதிரி மாநிலமாகத் திகழ்கிறது. பெரியார், அம்பேத்கர் போன்ற சமூகநீதிப் போராளிகளின் கொள்கைகளால் வடிவமைக்கப்பட்ட இம்மாநிலம், உயர்கல்வியில் உயர்ந்த சேர்க்கை விகிதம் (GER) மற்றும் தரமிக்க நிறுவனங்களை உருவாக்கியுள்ளது. இவை அனைத்தும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளின் வாயிலாக, சமூகச் சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு அடையப்பட்டவை. இந்நிலையில், 2019-ஆம் ஆண்டு தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டத்திற்கு 2025-இல் கொண்டுவரப்பட்ட திருத்தம் இச்சாதனைகளுக்கு இடையூறாக அமையும் என்பதால், தமிழக அரசு இம்மசோதாவை முழுமையாகக் கைவிட வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியதோடு, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், கல்வியாளர்களும் வலியுறுத்தியிருந்தனர்.

இந்நிலையில், தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தனியார் பல்கலைக்கழகத் திருத்தச் சட்ட மசோதா திரும்பப் பெறப்பட்டு மறு ஆய்வு செய்யப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் அறிவித்துள்ளார். இதனை எஸ்டிபிஐ கட்சி மனமுவந்து வரவேற்கிறது. இந்த விவகாரத்தில் எஸ்டிபிஐ கட்சி உள்ளிட்ட ஜனநாயக சக்திகளின் குரலுக்கு மதிப்பளித்த தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

26/10/2025
26/10/2025

தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம்! -தமிழக அரசுக்கு எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்
------------------------
இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

பீகார் மாநிலத்தில் பெரும் குழப்பம் மற்றும் குளறுபடிகளுடன் நடைபெற்ற சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (எஸ்.ஐ.ஆர்) தமிழகத்திலும் இன்னும் ஒருவார காலத்தில் துவங்கும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பீகார் மாநிலத்தில் இந்தத் திட்டத்தின் முன்னோடிப் பரிசோதனையின்போது, பெருமளவிலான உண்மையான வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டனர், இதனால் பலர் தங்கள் வாக்குரிமையை இழந்தனர். இது வாக்காளர் பட்டியலின் நம்பகத்தன்மை குறித்து பெரும் சந்தேகங்களை எழுப்பியுள்ளது. தேர்தல் ஆணையம், ஆளும் அரசின் விருப்பங்களுக்கு ஏற்ப செயல்படுவதாகவும், அதன் நடவடிக்கைகள் ஜனநாயகக் கோட்பாடுகளுக்கு எதிராக உள்ளதாகவும் ஜனநாயக சக்திகள் குற்றம்சாட்டுகின்றன. குறிப்பாக, தலித் முஸ்லிம் வாக்காளர்கள் குறிவைத்து நீக்கப்பட்டு இருப்பதாக ஆதாரங்களோடு புகார்கள் கூறப்பட்டுள்ளன. இவை எதற்கும் தேர்தல் ஆணையம் நேரடியாக விளக்கம் அளிக்கவில்லை. மட்டுமின்றி இந்த நடவடிக்கை குடியுரிமை திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுவது தான், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை சந்தேகங்கொள்ளச் செய்கிறது.

தமிழகத்திலும் இந்த அவசரமான திட்டம் கடும் விளைவுகளை ஏற்படுத்தலாம். உண்மையான வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படுவது, வாக்குரிமையைப் பறிப்பது மட்டுமல்லாமல், தேர்தல் முடிவுகளின் நம்பகத்தன்மையையும் கேள்விக்கு உட்படுத்தும். இந்த ஆபத்துகளைக் கருத்தில் கொண்டு, உண்மையான வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படாமல் பாதுகாக்கப்பட, தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வாக்காளர்களின் வாக்குரிமையைப் பாதுகாக்க அனைவரும் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும். மேலும், இந்திய ஜனநாயகத்தின் அடித்தளமான வாக்காளர் பட்டியலை உருவாக்கும் பணியை, உண்மையான பிரதிநிதித்துவத்தையும் நம்பகத்தன்மையையும் உறுதிப்படுத்தும் வகையில் தேர்தல் ஆணையம் மேற்கொள்ள வேண்டும்.

ஆகவே, தமிழக அரசு இதுகுறித்து உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனை மேற்கொள்ள வேண்டும். இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற விசாரணையில் இருப்பதால் தமிழ் நாட்டில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையை தேர்தல் ஆணையம் நிறுத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

*மாவட்ட செயற்குழு கூட்டம்* திருவாரூர் மாவட்ட சிறப்பு செயற்குழு கூட்டம் நேற்றைய தினம் 24.10.2025 வெள்ளி கிழமை முத்துப்பேட...
25/10/2025

*மாவட்ட செயற்குழு கூட்டம்*

திருவாரூர் மாவட்ட சிறப்பு செயற்குழு கூட்டம் நேற்றைய தினம் 24.10.2025 வெள்ளி கிழமை முத்துப்பேட்டையில் மாவட்ட தலைவர் மாஸ் அப்துல் அஜீஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக தமிழ் மாநில பொதுச் செயலாளர் அண்ணன் M.நிஜாம் முகைதீன் அவர்களும் தஞ்சை மண்டல தலைவர் A.தப்ரே ஆலம் பாதுஷா அவர்களும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் தொடக்கமாக மாவட்ட பொதுச் செயலாளர் A. ஜெமீன் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

இந்நிகழ்வின் முன்னிலையில் மாவட்ட செயலாளர்கள் A.முஹம்மது இப்ராஹிம்(அசார்) J.முஹம்மது ஜாஸ்மின்
S.ஃபக்ருதீன் அஹமது மாவட்ட பொருளாளர் SMY.பாரூக் ஷா மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் H.அபுதாஹிர் மற்றும் EKN.மர்சூக் அஹமது திருவாரூர் சட்டமன்றத் தொகுதி தலைவர் அப்துல் அஜீஸ் நன்னிலம் சட்டமன்ற தொகுதி தலைவர் ஹபீப் ரஹ்மான் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி தலைவர் கே வி எம் பாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திருவாரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் BLA 2 முழுமை பெறாமல் இருக்கக்கூடிய தொகுதிகளில் விரைந்து BLA 2 நியமனம் செய்திடவேண்டும்.

வருகின்ற நவம்பர் மாதம் நடைபெற இருக்கின்ற BLC மாநாட்டில் திருவாரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட BLC நிர்வாகிகள் அனைவரும் அந்த மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

இறுதியாக மாவட்ட துணை தலைவர் அப்துல் லத்தீப் அவர்கள் நன்றியுரையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

IT WING
SDPI கட்சி
திருவாரூர் மாவட்டம்.

24/10/2025
22/10/2025

மழையால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பயிர்ச்சேதம்!
விவசாயிகளுக்கு உடனடி இழப்பீடு வழங்க எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்!
--------------------
இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி முற்றிலும் சேதமடைந்துள்ளன. குறிப்பாக, குறுவை மற்றும் சம்பா பயிர்கள் சாகுபடி செய்த டெல்டா மாவட்ட விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த இயற்கைப் பேரிடர், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெருமளவு பாதித்து, அவர்களை கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது.

விவசாயிகளின் உழைப்பையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நிலங்களை உடனடியாக ஆய்வு செய்து, சேதமடைந்த பயிர்களுக்கு நியாயமான மற்றும் தகுந்த இழப்பீடு வழங்க ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

விவசாயிகளின் கண்ணீரையும், அவர்களின் உழைப்பின் இழப்பையும் புறக்கணிக்காமல், அவர்களுக்கு உரிய நீதியை வழங்குவது அரசின் பொறுப்பாகும். இவ்விவகாரத்தில் எவ்வித தாமதமும் இன்றி, விரைவான நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Address

Thiruvarur
Thiruvarur

Telephone

+919944550123

Alerts

Be the first to know and let us send you an email when SDPI - Thiruvarur District posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to SDPI - Thiruvarur District:

Share