AIYF - THENI

AIYF - THENI The history of youth movement goes back to the pre-independence days. Some of these organisations were powerful and very effective.

​🚩 All India Youth Federation (AIYF)
✊ Voice of the Youth | Vanguard of Socialism
🎓 Fight for Education • Struggle for Employment
🌍 Founder Member of WFDY
🔥 In the Footsteps of Martyr Bhagat Singh
🔴 Inquilab Zindabad! Young men and women played a glorious part in the mass movements for independence in various parts of the country, though there never was an all India youth organisation in the regul

ar sense, except some India-level conferences, several provincial and state level organizations etc. Naujawan Sabha, established in the Punjab in the 1920’s is well known. At one time Bhagat Singh and his associates, and the Communist Youth were active in building this organisation and mass youth movement. Naujawan Sabha has left in indelible mark on the political history of Punjab and India. It became a model for youth organization in many parts of the country. Youth in general, and the politically conscious in particular, played an important part in the mass independence movements all over the country. They were important segments in the anti-partition movement in Bengal in 1905-07, in the non-cooperation movement of 1920-22 initiated by Gandhiji, the civil disobedience movement led by the Congress in the early 1930’s and several others. The youth played an active part in the anti-Jallianwala Bagh Massacre movement, the movement for the boycott of the Simon Commission in 1928, the great 1942 movement, in the post-Second World War upsurge, and so on. They were important components of the Socialist, Communist and Congress – led anti-imperialist revolts. At the same time, they were in the forefront of the various class struggles of the workers, peasants and other toiling masses. Youth were a great source of the national leaderships of the various parties like the Congress, the CPI, the CSP and several others during the British days. The political leadership in this country in the decades of the 1930 and 40s was generally young and therefore very receptive and active. The October revolution in Russia in 1917 made a deep and radical impact on the national movement in India. Youth were greatly attracted to the ideas of Russian revolution. Under its influence they began concrete and scientific study of the problems of exploitation, unemployment, capitalist and colonial domination, of working class and people’s movement, of class concepts and class struggles, and innumerable other ideas. The youth wanted to fight capitalism and imperialism and to build a new society free from exploitation. Russian revolution and Russian society provided a source and model of the future socialist society.

03/04/2026

"மாற்றத்தை விரும்புவோர் கைகோர்ப்போம்! ✊

உண்மைக்கு உரக்கக் குரல் கொடுக்கவும், அதிகாரத்தை நோக்கி கேள்வி கேட்கவும் ஒரு தளம். நமது ஒற்றுமையே நமது பலம்.
இன்றே இணைவோம்:

🔗 https://chat.whatsapp.com/C7MgrEdYeoeFQLZRLAqzx8"

பயமற்ற புரட்சியின் சுடர்கள்..🔥பகத் சிங், ராஜ்குரு, சுக்தேவ் வீரவணக்க நாள்.அன்புத் தோழர்களே,இந்திய விடுதலைப் போராட்ட வரலா...
23/03/2026

பயமற்ற புரட்சியின் சுடர்கள்..🔥

பகத் சிங், ராஜ்குரு, சுக்தேவ்
வீரவணக்க நாள்.

அன்புத் தோழர்களே,

இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் மார்ச் 23 என்பது வெறும் தேதியல்ல, அது ஒரு வீர வரலாறு ரத்தத்தால் எழுதப்பட்ட நாள். 1931-ம் ஆண்டு இதே நாளில், லாகூர் சிறையின் இருண்ட அறைகளுக்குள் மூன்று இளம் சிங்கங்கள் புன்னகையோடும், புரட்சி முழக்கத்தோடும் தூக்குக்கயிற்றை முத்தமிட்டனர். பகத் சிங், சிவராம் ராஜ்குரு மற்றும் சுக்தேவ் தாப்பர் ஆகிய அந்த மூன்று மாவீரர்களின் தியாகம், தூக்கு மேடையை ஒரு புனித பீடமாக மாற்றியது மட்டுமல்லாமல், அடிமைப்பட்டு கிடந்த இந்திய இளைஞர்களின் நரம்புகளில் விடுதலை வேட்கையை மின்சாரமாய் பாய்ச்சியது.

இந்த வீர வரலாற்றின் வேர்கள் 1928-ம் ஆண்டு சைமன் கமிஷனுக்கு எதிரான போராட்டத்தின் போது தொடங்கின. அமைதியான முறையில் போராடிய பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதி ராய் மீது பிரிட்டிஷ் காவல்துறை நடத்திய கொடூரமான தடியடியும், அதன் விளைவாக ஏற்பட்ட அவரது மறைவும் இந்தியப் புரட்சியாளர்களின் ரத்தத்தைக் கொதிக்கச் செய்தது. இதற்குப் பழிவாங்க இந்துஸ்தான் சோசலிச குடியரசு சங்கம் (HSRA) எடுத்த முடிவின்படி, தடியடிக்கு உத்தரவிட்ட அதிகாரி ஸ்காட்டிற்குப் பதிலாக, அடையாளக் குழப்பத்தால் ஜே.பி.சாண்டர்ஸ் சுட்டு வீழ்த்தப்பட்டார். இதுவே புகழ்பெற்ற லாகூர் சதி வழக்கின் தொடக்கப்புள்ளியாக அமைந்தது.

தொடர்ந்து, தொழிலாளர் நலன்களுக்கு எதிரான பொது பாதுகாப்பு மசோதா போன்ற கருப்புச் சட்டங்களை எதிர்த்து டெல்லி மத்திய சட்டசபையில் குண்டுகளை வீசிய பகத் சிங்கும் படுகேஸ்வர் தத்தும், அங்கிருந்து தப்பியோடாமல் இன்குலாப் ஜிந்தாபாத் என்று முழங்கித் தாமாகவே கைதாயினர்.

செவிடன் காதுகளுக்கு உறைக்கும்படி சத்தம் எழுப்பவே அந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது என்பதை உலகம் அறிந்தது. சிறைச்சாலையை ஒரு போராட்டக் களமாக மாற்றிய இவர்கள், அரசியல் கைதிகளுக்கான உரிமைகளைக் கோரி நடத்திய வரலாற்றுச் சிறப்புமிக்க உண்ணாவிரதப் போராட்டம் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை உலுக்கியது.

இந்த அறப்போராட்டத்தில் தோழர் ஜதின் தாஸ் 63 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து தியாக மரணமடைந்தார். அவரைத் தொடர்ந்து பகத் சிங் மற்றும் அவரது தோழர்கள் சுமார் 116 நாட்கள் வரை பல்வேறு கட்டங்களாகத் தங்கள் உறுதியான போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

இந்த லாகூர் சதி வழக்கின் இறுதித் தீர்ப்பாக 1930 அக்டோபர் 7 அன்று மூவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. நாடெங்கும் எழுந்த கடும் எதிர்ப்பையும், கருணை மனுக்களையும் துச்சமாக மதித்த இவர்கள், எங்கள் உடலை வேண்டுமானால் நீங்கள் அழிக்கலாம், ஆனால் எங்கள் லட்சியங்களை ஒருபோதும் அழிக்க முடியாது என்று வீராவேசத்துடன் முழங்கினர். திட்டமிட்ட நேரத்திற்கு 11 மணி நேரம் முன்னதாகவே, 1931 மார்ச் 23 அன்று மாலை 7:30 மணியளவில் லாகூர் சிறையில் மூவரும் தூக்கிலிடப்பட்டனர்.

அவர்களின் உடல்கள் ரகசியமாகச் சுட்லஜ் நதிக்கரையில் எரிக்கப்பட்டாலும், அந்தச் சாம்பலிலிருந்து எழுந்த புரட்சித்தீ இன்றும் அணையாமல் எரிந்து கொண்டிருக்கிறது.

பகத் சிங் வெறும் ஆயுதப் புரட்சியாளர் மட்டுமல்ல, அவர் ஒரு மிகச்சிறந்த மார்க்சிய சிந்தனையாளர். அவர் கனவு கண்டது வெறும் ஆட்சி மாற்றத்தை மட்டுமல்ல, சுரண்டலற்ற ஒரு சமத்துவ சமூகத்தையே. அந்தச் சமத்துவக் கனவை நனவாக்க, சாதியற்ற, மதச்சார்பற்ற இந்தியாவைப் படைக்கத் தொடர்ந்து போராடுவதே இந்த மாவீரர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான வீரவணக்கம் ஆகும்.

புரட்சி ஓங்குக! இன்குலாப் ஜிந்தாபாத்!
வீரவணக்கம்! வீரவணக்கம்!!
மாவீரர்களுக்கு வீரவணக்கம்!!!

🌹 வீரவணக்கம் தோழர் பி.பரமசிவம் 🌹50 ஆண்டுகள் கட்சிக்காகவாழ்ந்த தூய போராளி.தொழிலாளர் உரிமை,பழங்குடி மக்களின் வாழ்வு,செங்கொ...
05/02/2026

🌹 வீரவணக்கம் தோழர் பி.பரமசிவம் 🌹

50 ஆண்டுகள் கட்சிக்காக
வாழ்ந்த தூய போராளி.
தொழிலாளர் உரிமை,
பழங்குடி மக்களின் வாழ்வு,
செங்கொடியின் மரியாதை
அனைத்திற்கும் தன்னை அர்ப்பணித்தவர்.

போராட்டத்தை நிறுத்தினார்.
ஆனால் பாதை நிற்கவில்லை,
நாங்கள் பயணிக்கிறோம்.
🔴 செவ்வணக்கம்! 🔴

உழைப்பின் மகிழ்ச்சியுடன், இயற்கைக்கு நன்றி சொல்லும் இந்த பொங்கல், உங்கள் வாழ்வில் செழிப்பு, சமத்துவம், மகிழ்ச்சி கொண்டு ...
15/01/2026

உழைப்பின் மகிழ்ச்சியுடன், இயற்கைக்கு நன்றி சொல்லும் இந்த பொங்கல், உங்கள் வாழ்வில் செழிப்பு, சமத்துவம், மகிழ்ச்சி கொண்டு வரட்டும்.

இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!

வேலைவாய்ப்பிற்கான போராட்டம்.வேலைவாய்ப்பை விழுங்கும் மோடி அரசு. தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் அபா...
03/01/2026

வேலைவாய்ப்பிற்கான போராட்டம்.

வேலைவாய்ப்பை விழுங்கும் மோடி அரசு. தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் அபாயம்.

"ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு" என்ற வாக்குறுதி, 11 ஆண்டுகால மோடி ஆட்சியில் வெறும் 'தேர்தல் கால ஜும்லா' என்ற பொய் வாக்குறுதி என்பது நிரூபணமாகியுள்ளது. இந்தியாவின் இளைஞர் சக்தியை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, அவர்களை வேலையில்லாத் திண்டாட்டத்தில் தள்ளி, வன்முறை அரசியலுக்குள் இழுக்கும் ஒரு அபாயகரமான சூழலை ஒன்றிய அரசு உருவாக்கி வருகிறது.

ஒன்றிய அரசு பணியிடங்கள் திட்டமிட்டு சுருக்கப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் பணியாளர் எண்ணிக்கை பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

2014-ல் மோடி அரசு ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் போது சுமார் 40.35 லட்சம் ஆக இருந்த அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள், தற்போது 30.55 லட்சம் ஆக சரிந்து 10 லட்சம் வேலைகளாக சுருங்கி மறைந்து காணாமல் போயுள்ளது. காலியாக உள்ள இடங்களை நிரப்பாமல், அந்தப் பணியிடங்களையே ரத்து செய்யும் நுட்பமான 'வேலை ஒழிப்பு' முறையை அரசு கையாள்கிறது.

தமிழ்நாட்டில் உள்ள இரயில்வே, வங்கி, LIC, BSNL ஆகிய பொதுத்துறை நிறுவனங்களில் மட்டும் சுமார் 1 லட்சம் பணியிடங்கள் கடந்த 11ஆண்டுகளில் பறிக்கப்பட்டுள்ளன. இந்த மோசடி நடவடிக்கையால் தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு தான் பேரிழப்பாகும்.

100 நாள் வேலைத்திட்டத்தை முடக்கும் 'விக்ஷித் பாரத்' மசோதா - 2025

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தை (MGNREGA) சீர்குலைக்க, 2025-ல் ஒன்றிய அரசு ‘விக்ஷித் பாரத் ரோஸ்கர் மற்றும் அஜீவிகா மிஷன் (கிராமின்)’ மசோதாவை இரவோடு இரவாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து அவசரகதியில் சட்டமாக்கியுள்ளது. இதன் மூலம் இதுவரை ஒன்றிய அரசு பெரும் பங்கை ஏற்றிருந்த நிலையில், இனி மாநிலங்கள் 40% செலவுகளை ஏற்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகிறது. இதன்மூலம் நிதிச்சுமை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பாஜக அல்லாத தமிழ்நாடு போன்ற வளர்ந்த மாநிலங்களுக்கு 40% நிதிச்சுமை, ஆனால் சில வடமாநிலங்களுக்கு வெறும் 10% மட்டுமே. இது தமிழகத்தின் கிராமப்புற பொருளாதாரத்தைச் சிதைக்கும் செயலாகும்.

வேலை என்பது ஒரு "சட்டப்பூர்வ உரிமை" என்ற நிலையை மாற்றி, அரசு ஒதுக்கும் நிதிக்கு உட்பட்டு மட்டுமே வேலை வழங்கப்படும் என்ற நிலைக்கு இளைஞர்களைத் தள்ளுகிறது இந்த மசோதா. பட்ஜெட் கட்டுப்பாடு மூலம் கிராமப்புற பாட்டாளி வர்க்கத்திற்கு பெரிய வேலை இழப்பை உண்டாக்கும் நடவடிக்கையாகும்.

முதலாளிகளின் வேட்டைக்காடாக இந்தியாவை மாற்றி இந்திய தொழிலாளர் வர்க்கத்தினை அடிமையாக்கும் செயலை அரங்கேற்றம் செய்து வருகின்றனர் பாசிச ஆட்சியாளர்கள். ஒன்றிய அரசு அமல்படுத்தியுள்ள 4 புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் Labour Codes, இளைஞர்களின் வேலைப் பாதுகாப்பைப் பறிக்கின்றன.

நிலையான கால வேலைவாய்ப்பு Fixed-term employment என்ற பெயரில் நிரந்தரப் பணிகளை ஒழித்துவிட்டு, எப்போது வேண்டுமானாலும் வேலையை விட்டுத் தூக்கக்கூடிய அபாயத்தை ஒப்பந்த முறை Outsourcing உருவாக்கியுள்ளது.

புதிய சட்டங்கள் வேலை நேரத்தை அதிகரிக்கும் நோக்கில் 8 மணி நேர வேலைக்கு வேட்டு வைத்து 12 மணி நேரமாக உயர்த்த வழிவகை செய்கின்றன, இது இளைஞர்களின் உடல் மற்றும் மன நலத்தைப் பாதிப்பதோடு, கூடுதல் ஆட்கள் வேலைக்கு அமர்த்தப்படுவதையும் தடுக்கிறது.

2024-25 நிதியாண்டின் தரவுகளின்படி, இந்தியாவின் ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் கவலைக்கிடமாக உள்ளது. குறிப்பாக, படித்த இளைஞர்களிடையே இது 14.6% முதல் 15% வரை நீடிக்கிறது.

இளைஞர்கள் வேலைவாய்ப்பு உருவாக்கிக் கொடுக்க கேட்டால் கைகளில் மதவெறி ஆயுதங்களைக் கொடுக்கும் வேலையை பாஜக அரசு செய்கிறது. தர்காவிற்கு அருகில் தீபம் ஏற்றுவது, மதக் கலவரங்களைத் தூண்டுவது என இளைஞர்களைச் சமூக விரோதச் செயல்களில் ஈடுபட வைத்து, அவர்களின் எதிர்காலத்தைச் சங்கப்பரிவார அமைப்புகளுக்கு அடிமையாக்குகிறது. இதன் மூலம் இளைஞர்களை திசை திருப்பும் அரசியல் நேரடியாக அரங்கேற்றம் செய்யப்படுகிறது.

எனவே நமது போர்க்குணமிக்க கோரிக்கைகள்
இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் வேலைவாய்ப்பை உறுதி செய்ய, மாவீரன் பகத்சிங்கின் பெயரில் BNEGA - Bhagat Singh National Employment Guarantee Act என்ற தேசிய வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டத்தை உருவாக்க வேண்டும் என்ற நமது போராட்டம் தொடர்கிறது.

ஆகவே தமிழகத்தில் உள்ள ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் தமிழகப் பணியிடங்கள் தமிழருக்கே என்ற கோரிக்கை முழக்கத்துடன் தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு நிறுவனங்களில் 100% தமிழக இளைஞர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

பறிக்கப்பட்ட 1 லட்சம் காலியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும். லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் முதலாளிகளுக்குத் தாரை வார்ப்பதை நிறுத்தி பொதுத்துறை நிறுவனங்களின் விற்பனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். சமூக நீதியை நிலைநாட்ட தனியார்துறை நிறுவனங்களிலும் இடஒதுக்கீட்டைக் கொண்டு வார வேண்டும்.

மக்களிடையே பிளவை உண்டாக்கி ஆட்சியைத் தக்கவைக்கும் பாஜக அரசு, இளைஞர்களின் உழைப்பைச் சுரண்ட நினைக்கிறது. வேலை என்பது ஒரு தனிமனிதனின் வாழ்வாதாரம் மட்டுமல்ல, அது நாட்டின் வளர்ச்சி. அந்த வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தும் 'சங்கப்பரிவார' அரசியலை முறியடித்து, வேலைவாய்ப்பை உரிமையாக்க, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க, பொதுத்துறையை வலுப்படுத்த, இளைஞர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க மேலும் இந்த அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்க, அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் 2026 ஜனவரி 5ஆம் தேதி, தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் உள்ள இரயில் நிலையங்களை முற்றுகையிட்டு மாபெரும் போராட்டம் நடைபெறுகிறது.

வேலை என்பது இரக்கம் அல்ல, அது உரிமை. உரிமைக்காக எழும் இளைஞர் சக்தியே சமூக மாற்றத்தின் தொடக்கம். எனவே இளைஞர்களே, அணிதிரண்டு அநீதிக்கு எதிராக ஒன்றிணையுங்கள். ஒன்றிணைந்து போராடுவோம்! வெற்றி பெறுவோம்!

இரா.தமிழ் பெருமாள்
திருச்சி - 02.01.2026

Address

Theni

Telephone

+919677341100

Website

https://www.aiyf.in/

Alerts

Be the first to know and let us send you an email when AIYF - THENI posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to AIYF - THENI:

Share