18/10/2025
தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய கூகுள் நிறுவனம் ஆந்திராவுக்குச் சென்றுள்ளதே ஏன் எப்படி என்ன காரணம்..? - தங்கமணி அவர்கள் சட்டப் பேரவையில் கேள்வி
அமைச்சர் TRB ராஜா : அதானி தலையீடு தான் காரணம்.
★இப்படிச் சொல்வதற்கு முதலில், இந்தக் கேடுகெட்ட ஆட்சியின் அமைச்சர் வெட்கித் தலைகுனிய வேண்டும்.
அதானி தலையீடு இனியும் கூடத்தான் இருக்கும். அதனால இனிமேல் உங்களால் அவர் தலையீடு இருக்கும் வரை ஒன்றுமே செய்ய முடியாதா..? முடியாதுன்னா முடியாது என ஒத்துக்கொண்டு ராஜினாமா செய்துவிடுங்கள்
அதானியின் முதலீடு தமிழ்நாட்டில் இருப்பது கூடத் தெரியாதா..?
அதானியால், ஒரு அரசாங்கத்தையேத் தோற்கடிக்க முடியுமென்றால், அந்தக் கையாலாகத கேடுகெட்ட அரசாங்கம் எதற்கு..?
முதலில் அதானி யார்..?
தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய முதலீட்டைத் தடுத்து வேறொரு மாநிலத்திற்குக் கொண்டு செல்லும் அளவுக்கு வலிமை பெற்றவர் என இவர்களே சான்றிதழ் தருகிறார்களா..?
உங்களுக்குத் துப்பில்லை. உங்களுக்கு இவ்வளவு பெரிய முதலீட்டை ஈர்த்துவிடவேண்டும் என்கிற முனைப்பு இல்லை. வெற்று நாடகம் போட்டு நாட்டு மக்களை ஏமாற்றவே நேரம் போதவில்லை.
மாதம் மும்மாரி பொழிகிறதா என்று கேட்டுவிட்டு மல்லாந்துப் படுத்துறங்கும் ஓர் பொம்மை முதலமைச்சர்.
நாயுடன் விளையாடி அதை சமூக வலைதளத்தில் பதிவேற்றி மகிழும் ஓர் துணை முதலமைச்சர்.
ஞானசேகரன்கள் வீட்டில் விருந்துண்டு மகிழும் அமைச்சர்கள்.
கிட்னி திருடும் தொழிலை செய்யும் MLA-க்கள்.
ஜனநாயகத்தின்படி வெள்ளை அறிக்கைக் கேட்டால் வெற்றுக் காகிதத்தைக் காட்டி, எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுத்துவிட்டதாக உணரும் ஓர் தற்குறி, தொழில்துறைக்கே அமைச்சர்.
நடிப்புத்துறைக்கு சென்றிருக்க வேண்டியவர், படிப்புத்துறைக்கே அமைச்சர். அதுவும் பள்ளி கல்விக்கு.
செம்மண் திருட ஓர் அமைச்சர்.
கொழுப்புத்திருட ஓர் அமைச்சர்.
பாட்டிலுக்கு பத்து ரூபாய் பிடுங்கிப் பிழைப்பு நடத்தும் ஓர் அமைச்சர்.
உருப்பிடுமா இந்தக் காம்போ..?
இது ஒரு, அமைச்சரவையா..?
அல்லது சர்க்கஸ் கோமாளிகளின் கூடாரமா என்றே தெரிந்து கொள்ள முடியாத அளவிற்கு தகுதியற்றத் திறமையற்றத் தற்குறிகளின் கும்பல் ஒன்று ஆட்சி செய்வதாகத்தான் தெரிகிறது
ஊரே கைகொட்டி சிரிக்கிறது.
நாடகம் நடத்துகிறது திராவிட மாடல்