07/04/2025
'ஆப் கீ பார் ட்ரம்ப் சர்க்கார்' என்று ட்ரம்பிற்கு வெண் சாமரம் வீசிக் கொண்டிருந்த பல வெளிநாடு வாழ் இந்தியர்கள் இன்றைக்கு அமெரிக்காவில் மூச்சுவிடுவதற்கு கூட யோசிக்க வேண்டிய நிலமையை ட்ரம்ப் உருவாக்கி இருக்கின்றார்.
இந்தியாவில் முஸ்லிம்களையும் சிறுபான்மையினரையும் விளிம்பு நிலை மக்களையும் ஒடுக்கி கேவலப்படுத்தி அரசியல் செய்து வரும் மோடி அரசின் அமெரிக்க பிரதிபலிப்பு தான் ட்ரம்ப்.
இந்தியாவிற்கு மட்டும் சலுகைகள் கிடைக்கும், இந்தியர்கள் மட்டும் சிறப்பானவர்கள். ட்ரம்ப் அவர்களுக்கு ஆட்சியில் வலப்பக்கத்தில் இடம் தருவார் என்று அமெரிக்க வாழ் இந்தியர்கள் சிலர் தப்புக் கணக்கு போட்டிருந்தார்கள்.
அமெரிக்கா உலக அரங்கில் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளும் இந்த நேரத்தில் இந்தியாவில் காங்கிரஸ் கட்சி, அமெரிக்காவில் டெமாக்கிராடிக் கட்சி போன்றவை கிராக்குகளின் கட்சிகளாக கருதப்படுகின்றன.
ஜனதாவிற்கும் ஜனதா என்ற விசப்பாம்பு பெற்றெடுத்த பாரதிய ஜனதா என்ற நச்சுப்பாம்பும் கூட ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ட்ரம்ப் போலவே விலைவாசி பற்றி பொங்கிப் பொங்கி பேசிக் கொண்டிருந்தார்கள் தானே.
இன்றைக்கு ட்ரம்ப் விலைவாசி உயர்வு ஒரு தற்காலிக வலி என்று சொல்லிவிட்டு கோல்ப் விளையாட போய்விட்டார். இந்தியாவில் விலைவாசி உயர்வு பற்றி எந்த நாயும் வாயைத் திறப்பதில்லை.
பங்குச் சந்தைகளை தேசத்தின் வளர்ச்சிக்கு ஒரு அளவு கோலாக மோடியும் ட்ரம்ப்பும் எப்போதும் சொல்லிக் கொண்டு தான் இருக்கின்றார்கள்.
இன்றைக்கு இந்த இரண்டு நாடுகளிலும் பங்குச் சந்தைகள் அதி வேகமாகச் சரிந்து கொண்டிருக்கின்றது. நட்டப்பட்டுக் கொண்டிருப்பது சிறுமுதலீட்டாளர்கள் தான் என்பது தான் பதற வைக்கின்றது. ஆனால் ஆட்சியில் இருப்பவர்களுக்கு எந்தப் பதட்டமும் இல்லை. ட்ரம்பாவது வெளிநாட்டு இறக்குமதிகளுக்கு வரிப்போட்டு தான் பொருளாதாரத்தினை நாசம் செய்கின்றார். நிர்மலா சீதாராமன் சிறு முதலீட்டாளர்களுக்கு முதலீட்டு வருவாய் வரி போட்டு இந்திய பங்குச் சந்தையை நாசம் செய்து வருகின்றார்.
வலது சாரிகளின் பொருளாதார அறிவிற்கு ஸ்டாம்ப் சைஸே வேண்டியதில்லை. பைத்தியகார கும்பல்.
Translated by Grok
Many overseas Indians who were enthusiastically chanting "Aap Ki Baar Trump Sarkar" ("Your Time, Trump Government") are now in a situation in America where they have to hesitate even to breathe, thanks to the conditions Trump has created.
Trump is essentially the American counterpart of the Modi government, which suppresses and degrades Muslims, minorities, and marginalized communities in India as part of its political strategy.
Some Indian-Americans had miscalculated that India would receive special privileges, that Indians would be deemed exceptional, and that Trump would reserve a prominent place for them on the right side of his administration.
At a time when America is isolating itself on the global stage, parties like the Congress Party in India and the Democratic Party in the U.S. are regarded as the parties of "crackpots."
Before coming to power, didn’t the Janata Party and its venomous offspring, the Bharatiya Janata Party (BJP), endlessly rant about price rises, just like Trump did?
Today, Trump brushes off soaring prices as a "temporary pain" and heads off to play golf. In India, not a single soul dares to speak about the price rise.
Both Modi and Trump constantly tout stock markets as a yardstick for national progress.
Yet today, stock markets in both countries are crashing at an alarming pace. What’s truly disturbing is that small investors are the ones bearing the losses. Meanwhile, those in power show no signs of concern. Trump, at least, wrecks the economy by slapping tariffs on foreign imports. Nirmala Sitharaman, on the other hand, is ruining the Indian stock market by taxing the investment income of small investors.
The economic wisdom of right-wingers doesn’t even deserve a postage stamp’s worth of space. A bunch of lunatics.
Call now to connect with business.