Sivaganga 24×7

Sivaganga 24×7 Each Drops of blood contains boldness in Sivaganga

14/12/2025

“பூரண மதுவிலக்கு என்பது உலகெங்கும் தோல்வியடைந்த திட்டம்”- எம்.பி கார்த்தி சிதம்பரம்

| | |

விமான துறையில் தாராளமயமாக்கல் இல்லாததே இண்டிகோ பிரச்சினைக்கு காரணம்: முன்னாள் மத்திய அமைச்சர் திரு ப.சிதம்பரம்புதுடெல்லி...
07/12/2025

விமான துறையில் தாராளமயமாக்கல் இல்லாததே இண்டிகோ பிரச்சினைக்கு காரணம்: முன்னாள் மத்திய அமைச்சர் திரு ப.சிதம்பரம்

புதுடெல்லி: இந்திய விமான துறையில் தாராளமயமாக்கல் இல்லாததே விமான நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு அடிப்படை என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இண்டிகோ நிறுவனத்தின் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் கடந்த சில நாட்களாக விமானப் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், இந்த பிரச்சினையின் அடிப்படை குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ப. சிதம்பரம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஒரு துறையில் ஒரு நிறுவனம் மட்டுமோ அல்லது இரண்டு நிறுவனங்கள் மட்டுமோ ஆதிக்கம் செலுத்துவது இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்குப் பொருந்தாது. இதை ராகுல் காந்தி சரியாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்திய பொருளாதாரத்தில் பல துறைகளில் இரண்டு நிறுவனங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் போக்கு இருக்கிறது. இதில், விமானத்துறையும் ஒன்று.

தாரளமயமாக்கலும் திறந்த பொருளாதாரமும் போட்டியை அடிப்படையாகக் கொண்டவை. போட்டி இல்லாவிட்டால், நாம் தற்போது காண்பது போன்ற மோசமான விளைவுகள்தான் ஏற்படும்.

இந்தியாவில் துடிப்பானதாகவும் போட்டிகள் கொண்டதாகவும் இருந்த விமானத் துறை, எவ்வாறு இரண்டு நிறுவனங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் துறையாக மாறிப் போனது என்பது குறித்து மக்கள் சிந்திக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்

அரசியலமைப்பு சரி ஆளுநர் சரியில்லையே!‘நியாயமற்ற’ காலத்தில் ‘நியாயம்’ கிட்டுமா? ஆளுநர்களின் அதிகாரம் குறித்து...மாநில சட்ட...
05/12/2025

அரசியலமைப்பு சரி ஆளுநர் சரியில்லையே!
‘நியாயமற்ற’ காலத்தில் ‘நியாயம்’ கிட்டுமா?

ஆளுநர்களின் அதிகாரம் குறித்து...
மாநில சட்டமன்றங்களில் ஆளுநர்களின் அதிகாரம் குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் திரு.ப.சிதம்பரம் MP அவர்கள் எழுதும் சிறப்புக் கட்டுரை.

மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளைக் கொண்ட சட்டமன்றங்களில் - மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஒரு அதிகாரி ஏன் இடம்பெற வேண்டும்?
ப.சிதம்பரம்
“ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு சட்டமன்றம், ஓர் ஆளுநர், இரண்டு அவைகள் அல்லது ஒரேயொரு அவை இருக்க வேண்டும்” என்று இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 168-வது பிரிவு, மேற்படி வாசகங்களுடன் தொடங்குகிறது. மாநில சட்டமன்றங்களில் ‘ஆளுநர்’ இடம்பெறுவது தேவைக்கும் அதிகமானது என்றே எப்போதும் கருதி வந்திருக்கிறேன். மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளைக் கொண்ட சட்டமன்றங்களில் - மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஒரு அதிகாரி ஏன் இடம்பெற வேண்டும்? சட்டப்பேரவை அல்லது இரு அவைகள் ஆகியவற்றில் உரை நிகழ்த்துவது மற்றும் இதர சம்பிரதாயமான கடமைகளை ஆளுநர் இல்லாமலே (அரசமைப்புச் சட்டம் 202 முதல் 207 வரையில் இடம் பெறுபவை) நிகழ்த்திவிட முடியும் – இங்கிலாந்து அரசர் (பிரிட்டிஷ் நாடாளுமன்றத்துக்கு) வராமலேயே செய்வதைப் போல.

மாநிலங்களின் சட்டம் இயற்றும் கடமைகளில் ஆளுநர்களின் உண்மையான பங்களிப்பு, அந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதுதான். ஒரு மசோதா – சட்டமாவதற்கு முன்னால் சட்டமன்ற நடவடிக்கைகளிலேயே முக்கியமான பொறுப்பு இது மட்டுமே. அரசமைப்புச் சட்டத்தின் வரம்புகளை மாநில சட்டமன்றங்கள் மீறிவிடாமலிருக்கவே, மசோதாக்களைப் பரிசீலித்து அதற்கு அனுமதி தருவது அல்லது அனுமதி மறுப்பது ஆகிய அதிகாரங்களை ஒருவருக்கு வழங்குவது அவசியம்

ஆராய – தடுக்க அல்ல...
அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 200 கூறுகிறது: “மாநில சட்டமன்றங்களில் ஒரு மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு, அது ஆளுநரின் பரிசீலனைக்கு அனுப்பப்பட வேண்டும். ஆளுநர் அதைப் பரிசீலித்த பிறகு அதற்கு தன்னுடைய ஒப்புதலைத் தரலாம் அல்லது அனுமதி தராமல் அதை நிறுத்திவைக்கலாம் அல்லது குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கலாம்”.

அரசமைப்புச் சட்டத்தின் 200-வது பிரிவு இன்னொன்றையும் கூறுகிறது: மசோதாவில் இடம் பெற்றுள்ள ஏதேனும் ஒரு பகுதி அல்லது பகுதிகள் குறித்து சட்டப்பேரவை மீண்டும் ஒரு முறை மறு பரிசீலனை செய்ய வேண்டும் – உரிய திருத்தங்கள் செய்ய வேண்டும் என்ற குறிப்போடு, எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் திருப்பி அனுப்பலாம். இந்த ஏற்பாடு சட்டமன்றங்களின் செயல்களை நல்ல நோக்கத்தோடு ஆரோக்கியமாகக் கட்டுப்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்டதே தவிர, சட்டமன்றங்களின் செயல்பாடுகளில் தலையிட்டு அவற்றைத் தடுத்து நிறுத்தி சேதம் விளைவிக்க உரிமை தரும் நோக்கில் செய்யப்பட்டதல்ல.

ஆளுநர்கள் – குறிப்பாக பாரதிய ஜனதா அல்லாத பிற எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பதவி வகிப்பவர்கள் - அரசமைப்புச் சட்டம் பிரிவு 200 தரும் இந்த அதிகாரத்தை, மாநில அரசுகளின் செயல்களைக் குலைக்கும் வகையிலேயே பெரும்பாலும் செயல்படுத்துகின்றனர். மசோதாக்களைப் பரிசீலிக்க அளிக்கப்பட்ட அதிகாரம், அவற்றைத் தடுத்து நிறுத்துவதற்காகவே தரப்பட்டதாக அவர்கள் கருதுகின்றனர். எனவே, தங்களுக்கென்று ‘தனி ரத்து அதிகாரத்தை’ (பாக்கெட் வீட்டோ) இந்தப் பிரிவின் மூலம் பயன்படுத்த கற்றுக்கொண்டுள்ளனர். இந்த ரத்து அதிகாரமானது, மசோதா தொடர்பாக மேற்கொண்டு எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கப்படாமல் அதை அப்படியே கிடப்பில் போடுவதாகும். அதற்கு அனுமதியும் வழங்குவதில்லை, அனுமதியும் மறுப்பதில்லை, குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கும் அனுப்புவதில்லை. இது கலப்படமற்ற - தீமையான ஆயுதமாகும். ‘சட்டமன்றத்தில் இயற்றப்படும் மசோதா’ என்ற மக்களுடைய விருப்பத்தை, நிறைவேற்ற முடியாமல் தடுக்கும் சீர்குலைவுச் செயலாகும். இப்படி தங்கள் அளவில் ரத்து அதிகாரத்தைச் செயல்படுத்த அரசமைப்புச் சட்டம் ஆளுநர்களுக்கு இடம் தரவில்லை

இந்த வழக்கு தொடர்பாக முதலில் விசாரித்த இரண்டு நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு அளித்த தீர்ப்பு தெளிவானது: ஆளுநரின் கையொப்பத்துக்கு ஒரு மசோதா அளிக்கப்பட்டவுடன் அதற்கு அவர் ஒப்புதல் தரலாம், அல்லது ஒப்புதல் தர மறுத்து சட்டமன்றத்தின் மறுபரிசீலனைக்கு ‘விரைவில்’ மீண்டும் அனுப்பி வைக்கலாம் அல்லது குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பிவிடலாம். இவற்றில் எதுவுமே அல்லாத - தனி ரத்து அதிகாரத்தைப் பயன்படுத்த - சட்டத்தில் இடமில்லை என்று இரு நீதிபதிகளும் தீர்ப்பளித்தனர். இதே வழக்கைப் பிறகு விசாரித்த ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வும் இந்த முடிவுகளுடன் பெருமளவு ஒத்துப் போனது. இரு அமர்வுகளுக்கு இடையிலும் சில அம்சங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அவை பொதுமக்கள் கவலைப்படும்படியான அளவுக்குப் பெரிதல்ல. இந்தக் கருத்துகள் சரியா என்ற முடிவை சட்ட நிபுணர்கள் ஆராய்ந்து கூறட்டும் என்று இப்போதைக்கு விட்டுவிடுவோம்.

பொதுமக்களின் கவலை
சட்டமன்றம் இயற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலக்கெடு வேண்டுமா – வேண்டாமா என்பதில் இரு அமர்வுகளுக்கும் நிலவும் கருத்து வேறுபாடுகள்தான் இப்போது பொதுமக்களுக்குப் பெருங்கவலையாக உருவெடுத்திருக்கிறது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஆளுநர்கள் முடிவெடுக்க வேண்டும் என்று இரண்டு நீதிபதிகள் அமர்வு நிர்ணயித்தது; ஐந்து நீதிபதிகளைக் கொண்ட அமர்வு அந்த அம்சத்தில் சற்றே தயங்கியது – அந்த முடிவுக்கு எதிராக தீர்ப்பளித்தது. அரசமைப்புச் சட்டத்தின் வாசகங்கள், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வெளிப்படையாக காலக்கெடு நிர்ணயிக்கவில்லை என்று ஐந்து நீதிபதிகள் அமர்விடம் வலியுறுத்தி கூறப்பட்டது.

சட்டமியற்றும்போது எழும் நடைமுறைகளைச் சமப்படுத்தவும், அரசமைப்புச் சட்டப்படி அதிகாரம் பெற்றவர்கள் தங்களுடைய செயல்களைச் செய்வதற்கு இளக்கமான சூழலை வழங்க வேண்டும் என்பதற்காகவும், பலதரப்பட்ட பின்னணிகள் – சூழல்களுக்கு ஏற்பச் செயல்பட வேண்டும் என்பதற்காகவும் ஐந்து நீதிபதிகள் அமர்வு காலக்கெடு விதிக்கப்படுவதை அனுமதிக்கவில்லை. ஆனால் இந்தக் கொள்கைகள் கோட்பாட்டு ரீதியிலும் அரசமைப்புச் சட்டப்படியும் ‘விதிவிலக்காக’ இருக்க அனுமதிக்கப்பட முடியாதவை.

“அரசமைப்புச் சட்டத்தை எவ்வளவுதான் ‘நல்லதாக’ இயற்றினாலும், அதை அமல்படுத்தும் பொறுப்பில் உள்ளவர்கள் ‘தவறான நடத்தையுள்ளவர்களாக’ இருந்தால், சட்டமும் தவறாகவே பயன்படுத்தப்படும்; சட்டம் எவ்வளவு ‘தவறாக நிறைவேற்றப்பட்டாலும்’ அதை அமல் செய்கிறவர்கள் ‘நல்லவர்களாக’ இருந்துவிட்டால், மக்களுக்கு நன்மையே ஏற்படும்”.
டாக்டர் அம்பேத்கர்
உச்ச நீதிமன்றமானது டாக்டர் அம்பேத்கரின் எச்சரிக்கையை, இந்தத் தீர்ப்புக்கு முன்னதாக சிந்தித்துப் பார்த்திருக்க வேண்டும். அரசமைப்புச் சட்டத்தை இயற்றுவதற்காக உருவாக்கிய சட்டப் பேரவையின் இறுதி கூட்டத்தில் பேசிய அம்பேத்கர், ‘மனித மனங்கள் அல்லது எண்ணங்கள் - தவறாகவும் போகக்கூடிய’ பலவீனமான தருணங்களைச் சுட்டிக்காட்டினார்:

“அரசமைப்புச் சட்டத்தை எவ்வளவுதான் ‘நல்லதாக’ இயற்றினாலும், அதை அமல்படுத்தும் பொறுப்பில் உள்ளவர்கள் ‘தவறான நடத்தையுள்ளவர்களாக’ இருந்தால், சட்டமும் தவறாகவே பயன்படுத்தப்படும்; சட்டம் எவ்வளவு ‘தவறாக நிறைவேற்றப்பட்டாலும்’ அதை அமல் செய்கிறவர்கள் ‘நல்லவர்களாக’ இருந்துவிட்டால், மக்களுக்கு நன்மையே ஏற்படும்”.

மாநில ஆளுநர்களாக இப்போது பதவி வகிப்பவர்களில் கணிசமானவர்கள் – ‘நல்லவர்களாக இல்லை’ என்றே அஞ்சுகிறேன். அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்ற முடிவை வாசகர்களிடமே விட்டுவிடுகிறேன். அவர்கள் எதைச் செய்கிறார்கள் – எதைச் செய்யாமல் இருக்கிறார்கள் என்பது இந்திய மக்களால் பார்க்கப்படுகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றங்கள் இயற்றும் மசோதாக்களை மாதக் கணக்கில் அல்ல – ஆண்டுக் கணக்கில் தடுத்துக் கொண்டிருந்தால் அரசமைப்புச் சட்டப்படி நிர்வாகம் நடக்காது, மாறாக அது சீர்குலையும். மக்களுடைய விருப்பங்கள் நிறைவேறாமல் முறியடிக்கப்படும்.

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் (ஜார்க்கண்ட், கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு, பஞ்சாப், மேற்கு வங்கம் போன்றவை) ஆளுநர்களின் செயல்கள் சட்டமன்றம் இயற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல், அரசமைப்புச் சட்டம் அளித்துள்ள சமநிலையைப் பேணுவதற்குப் பதில் அதற்கு எதிராகத் திருப்பிய உதாரணங்கள் பல, உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளாக உள்ளன. இந்த சமநிலையை மீட்க வலுவான தீர்ப்புதான் ஐந்து நீதிபதிகள் அமர்விடம் எதிர்பார்க்கப்பட்டது. அந்த அமர்வும் மிக நன்றாகவே வழக்கை ஆராய்ந்தது, ஆனால் உண்மை நிலைக்கு வெகு தொலைவில் உள்ளதான – சட்ட வாசகம் தரும் நிலைக்கு முக்கியத்துவம் அளித்து – தனது கருத்தைத் தெரிவித்தது.

சட்டமும் உண்மை நிலையும்
‘உண்மை நிலைக்கு’ ஏற்றதாக சட்டம் அமைய வேண்டும். நீதித்துறையின் சுதந்திரத் தன்மையில் ‘சமரசம் செய்துகொண்டுவிடும்’ நிலைமை ஏற்படலாம் என்ற சிந்தனை காரணமாகவே, உயர் நீதிமன்ற நீதிபதிகளைத் தேர்வு செய்யவும் நியமனங்களுக்குப் பரிந்துரை செய்வதற்குமான அதிகாரத்தை அரசமைப்புச் சட்டம் 217-வது பிரிவின் கீழ், உச்ச நீதிமன்றம் தன் வசமே எடுத்துககொண்டது. அரசமைப்புச் சட்டப் பிரிவு 200 பெரிய பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றங்களால் சட்டமியற்ற முடியும் என்பதுதான் ஜனநாயகத்தின் சாரம், அதுதான் சட்டப்படியான ஆட்சிக்கும் அடையாளம். சட்டங்களை நியாயமற்ற வகையிலும் வேண்டுமென்றும் தடுத்து நிறுத்த அனுமதித்தால் நியாயமாக நடந்துகொள்ளுங்கள் என்று வேண்டுகோள் விடுப்பதும்கூட வீண் முயற்சியாகவே முடியும்.

புதன்கிழமை  #சிங்கம்புணரி அருள்மிகு சித்தர்ஸ்ரீ முத்துவடுகநாதர் அய்யாவின் அலங்கார தரிசனம்🙏
03/12/2025

புதன்கிழமை #சிங்கம்புணரி அருள்மிகு சித்தர்
ஸ்ரீ முத்துவடுகநாதர் அய்யாவின் அலங்கார தரிசனம்🙏

Social Media வில் தற்போது அதிகம்  பகிரப்படும் Message கார்த்தி சிதம்பரத்தை தமிழக காங்கிரஸ் தலைவராக்குவது காங்கிரசுக்கு ந...
28/11/2025

Social Media வில் தற்போது அதிகம் பகிரப்படும் Message

கார்த்தி சிதம்பரத்தை தமிழக காங்கிரஸ் தலைவராக்குவது காங்கிரசுக்கு நல்லது.,!

கீழே என்னென்ன கமெண்ட்ஸ் வரும் என்று யூகிக்க முடியுமென்பதால், அவைகளுக்கெல்லாம் விளக்கம் கொடுக்கிறேன்:

1. அவர் மேல் ஊழல் குற்றச்சாட்டு உள்ளது.
முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கத்துடன் பாஜக-வால் ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் மட்டுமே

2. கார்த்திக்கு தமிழக காங்கிரஸார் இடையே நல்ல இணக்கம் கிடையாது..!
அப்படி எல்லாம் எதுவும் இல்லை சிவகங்கை மாவட்டத்தைச் சார்ந்த காங்கிரஸ் நண்பர்கள் மட்டும் இல்லாமல் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நம் இயக்க நண்பர்களுடன் இணக்கமாக நெருங்கி பழகக் கூடியவராகவும் எளிதில் தொடர்பு கொள்ள முடிந்தவராகவும் உள்ளவர்.

3. கார்த்திக்கு நல்லா பேச வருகிறதுதான், ஆனால் அது மட்டும் போதுமா தலைவராக..?
பாஜக அண்ணாமலைக்கும் அதேதானே..? நல்லா பேசுவார், அதைத் தவிர அவருக்கென்ன ஸ்பெஷல் தகுதி இருந்தது..? சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த ஒரு டிபேட்டில் அண்ணாமலையை புரட்டி அடித்தார் கார்த்தி..! அண்ணாமலையை விட கார்த்திக்கு அரசியல் அனுபவமும், பேச்சுத்திறமையும் ஜாஸ்தி. அதைவிட தற்போது தமிழக காங்கிரசைச் சேர்ந்த அனைவரையும் விட துடிப்புடனும் தெளிவுடன் உலக அறிவுடனும் இளைஞர்களை கவரும் விதத்திலும் பேசக்கூடியவர்.

இன்றைய அரசியலுக்கு அது போதும்..!

இது போல பல சொல்லலாம். ஆனால், அதற்காகவெல்லம் நான் இந்த ஆலோசனை சொல்லவில்லை.

காங்கிரஸ் தமிழகத்தில் செய்ய வேண்டிய கடமை ஒன்று உண்டு..! அது : இங்கே பிஜேபிக்குத் தக்க பதிலடியை உரத்த குரலில் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்..! தமிழகத்தில், ஒரு கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் தான், எதிர்க்கூட்டணியில் இருக்கும் பிஜேபியை விடாமல் எதிர்க்க வேண்டும்..! அதுதான் கூட்டணிக்காக காங்கிரஸ் செய்ய வேண்டிய வேலை..! காங்கிரஸ் காலாட்டிக் கொண்டு சும்மா இருக்கிறது..

செல்வப்பெருந்தகை சரிப்பட்டு வர மாட்டார். அவர் ஜஸ்ட் லோக்கல் அரசியல்வாதி. தமிழக காங்கிரசுக்கு இப்போது தேவை : நன்றாகப் பேசத் தெரிந்த, சோசியல் மீடியாவை சரியாக உபயோகப்படுத்தத் தெரிந்த, பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து தைரியமாகப் பேசத் தெரிந்த ஒருவர்..!

பிஜேபி அண்ணாமலைக்குக் கொடுத்தது போல, காங்கிரஸ் கார்த்திக்குக்கும் சுதந்திரம் கொடுக்க வேண்டும், atleast, மூன்று வருடங்கள்..!

இதனால் காங்கிரஸ் என்ன பயன் பெறலாம் என்றால் :

1. அடிக்கடி பிரஸ்மீட் வைத்து காங்கிரஸை தமிழகத்தில் வெளிச்சத்தில் வைத்திருக்கலாம்..! கார்த்தியின் சமீபத்ய பேட்டிகள், ஆன்லைனில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளன..!

2.. பிஜேபிக்கு எதிராக ஆதாரத்தோடு குற்றச்சாட்டுகளை சொல்லிக் கொண்டே இருக்கலாம்..! பத்திரிக்கையாளர்களுக்கு அவ்வளவுதான் வேண்டும்..!

3. அண்ணாமலை செய்தது போல வார்ரூம்ஸ் வைத்து பல்லாயிர ஃபேக்ஐடிக்கள் உருவாக்கி, சோசியல் மீடியாவில் ஒரு frenzy உருவாக்கலாம்..! கட்சி பேசுபொருளாகும்; கட்சிக்கு ஆதரவு கூடியுள்ளது போல ஒரு தோற்றம் கிடைக்கும்..! அதான் இப்ப trend..!

காங்கிரஸ் கட்சி செத்த சவம் போலத்தான் இப்போது தமிழகத்தில் கிடக்கிறது..! அண்ணாமலை செய்தது போல அராத்து அதிரடி காட்டும் ஆள் வேண்டும்..! அதற்கு கார்த்தி தான் சரியான முடிவு

Karti P Chidambaram is the best choice for Tamilnadu Congress at this time...!

Worker exploitation powers the firework industry in Tamil Nadu’s Sivakasi
25/11/2025

Worker exploitation powers the firework industry in Tamil Nadu’s Sivakasi

For an industry globally classified as hazardous, protections such as health insurance and a provident fund for workers are necessities. In Sivakasi, they remain elusive.

25/11/2025

யார் இந்த கார்த்தி சிதம்பரம்?

பாமர மக்களை பற்றி சிந்திக்கிறாரா?

ஏன் காங்கிரஸ் கட்சியில் இருக்கிறார்?

ஏன் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவி கிடைக்கவில்லை?

அவருடைய கேரக்டர் என்ன?

இந்த பேட்டியை முழுமையாக கேளுங்க.!

https://youtu.be/Z5o_bpQdBNw?si=kkCpWrwSCYVMFPV_

24/11/2025

Address

Sivaganga

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sivaganga 24×7 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share