Government Higher Secondary School, Kombankulam

Government Higher Secondary School, Kombankulam கண்டிக்கும் ஆசிரியர் கரையேற்றி விடுவார்😊

31/05/2024
அனைவருக்கும் வணக்கம்.                 இன்று வெளியான +2 தேர்வு முடிவில் நம் பள்ளியானது 100% தேர்ச்சி பெற்றுள்ளது என்ற செய...
06/05/2024

அனைவருக்கும் வணக்கம்.

இன்று வெளியான +2 தேர்வு முடிவில் நம் பள்ளியானது 100% தேர்ச்சி பெற்றுள்ளது என்ற செய்தியை உங்கள் அனைவருடன் பகிர்வதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றேன். மாணவர்கள் அனைவருக்கும் மற்றும் வெற்றிக்கு உழைத்த ஆசிரியர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

முதல் மதிப்பெண் பா.சிவகாமி 563.

இரண்டாம் மதிப்பெண் வே.பிரியா 550.

மூன்றாம் மதிப்பெண் மு.கல்யாணி சுந்தரம் 549.

_ தலைமை ஆசிரியர்
அரசு மேல்நிலைப் பள்ளி
கொம்பன்குளம்
தூத்துக்குடி மாவட்டம்

06-02-2024 செவ்வாய்கிழமை அன்று அரசு மேல்நிலைப்பள்ளியில் நான்கு வகுப்பறைகள் மற்றும் 2 ஆய்வகங்கள் மாண்புமிகு. மீன்வளம், மீ...
06/02/2024

06-02-2024 செவ்வாய்கிழமை அன்று அரசு மேல்நிலைப்பள்ளியில் நான்கு வகுப்பறைகள் மற்றும் 2 ஆய்வகங்கள் மாண்புமிகு. மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திரு.அனிதா இராதா கிருஷ்ணன் அவர்கள் திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார்.. உடன் திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஊர்வசி.S.அமிர்தராஜ் அவர்களும் விழாவில் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வைத்தார். விழா ஏற்பாடுகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி. பொ. மேரி பிரேமா அவர்கள் செய்திருந்தார். மேலும் இருபால் ஆசிரியப் பெருமக்களும், பள்ளியின் இளநிலை உதவியாளர் மற்றும் ஆய்வக உதவியாளர்,மாணவ செல்வங்கள் கலந்து கொண்டனர்..

கொம்பன்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தினம் (05/09/2023) சிறப்பாக கொண்டாடப்பட்டது. வரவேற்புரையினை 11ஆம் வகுப்பு...
06/09/2023

கொம்பன்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தினம் (05/09/2023) சிறப்பாக கொண்டாடப்பட்டது. வரவேற்புரையினை 11ஆம் வகுப்பு மாணவி முத்துலெட்சுமி வழங்கினார். தலைமை ஆசிரியர் திருமதி.பொ.மேரி பிரேமா தலைமையில் அனைத்து ஆசிரியர்களும் வரவேற்புரையை ஏற்றுக்கொண்டு விழாவில் கலந்து கொண்டனர்.. விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பட்டதாரி ஆசிரியர் திரு.சேகர் தலைமையில் மாணவர்கள் செய்திருந்தனர்.. நிகழ்ச்சியினை 12ஆம் வகுப்பு மாணவி சிவகாமி தொகுத்து வழங்க கலை நிகழ்ச்சிகள் ஆரம்பமானது... நன்றியுரையினை 12ஆம் வகுப்பு மாணவி சங்கரி வழங்க விழா இனிதே முடிவுற்றது....

அனைவருக்கும் வணக்கம்.                 இன்று வெளியான +2 தேர்வு முடிவில் நம் பள்ளியானது 100% தேர்ச்சி பெற்றுள்ளது என்ற செய...
08/05/2023

அனைவருக்கும் வணக்கம்.

இன்று வெளியான +2 தேர்வு முடிவில் நம் பள்ளியானது 100% தேர்ச்சி பெற்றுள்ளது என்ற செய்தியை உங்கள் அனைவருடன் பகிர்வதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றேன். மாணவர்கள் அனைவருக்கும் மற்றும் வெற்றிக்கு உழைத்த ஆசிரியர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

முதல் மதிப்பெண் சு.பார்வதி 574

இரண்டாம் மதிப்பெண்
பே.தனலெட்சுமி 543

மூன்றாம் மதிப்பெண்
பொ.மீனா 538

நன்றி

_ தலைமை ஆசிரியர்
‌‌ அரசு மேல்நிலைப்பள்ளி
கொம்பன்குளம்
தூத்துக்குடி மாவட்டம்

தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித் துறை சார்பில்  எங்கள் பள்ளியில் நடைபெற்ற கலைத்திருவிழாவில் மாணவ மாணவிகளுடன் தலைமை ஆசிரிய...
02/12/2022

தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித் துறை சார்பில் எங்கள் பள்ளியில் நடைபெற்ற கலைத்திருவிழாவில் மாணவ மாணவிகளுடன் தலைமை ஆசிரியர் மற்றும் இருபால் ஆசிரியப்பெருமக்களும்😊

29/07/2022

#கொம்பன்குளம் அரசு மேல் நிலைப்பள்ளியில் இன்று (29-07-2022) பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நடைபெற்றது.. இக்கூட்டத்தை பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் திருமதி மாரியம்மாள் அவர்கள் தலைமையேற்று நடத்தி வைத்தார்..
பள்ளி தலைமை ஆசிரியர் திரு.ரூபன் செல்வக்குமார் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். பெற்றோர் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டு பள்ளி வளர்ச்சி பற்றிய கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.. கூட்ட முடிவில் பள்ளியின் முதுகலை ஆசிரியர் திருமதி. ஜோஸ் வென்ஸிராணி அவர்கள் நன்றியுரை கூறி கூட்டத்தினை நிறைவு செய்தார்..

வாழ்த்துகள்👏🏻😊🎊🎊🎊🎊
23/07/2022

வாழ்த்துகள்👏🏻😊🎊🎊🎊🎊

வாழ்த்துகள்அரசு மேல்நிலைப் பள்ளிகொம்பன்குளம்.           திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம் வட்டார அளவில் 20-07-2022...
21/07/2022

வாழ்த்துகள்
அரசு மேல்நிலைப் பள்ளி
கொம்பன்குளம்.

திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம் வட்டார அளவில் 20-07-2022 அன்று திருச்செந்தூரில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கு இடையேயான சதுரங்கப் போட்டியில் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் முறையே கொம்பன்குளம் அரசு மேல் நிலைப்பள்ளி மாணவர்கள் மு.கல்யாணிசுந்தரம் என்னும் மாணவன் முதல் பரிசும், முத்து பிரிதா என்னும் மாணவி மூன்றாம் பரிசும் பெற்றனர். மேலும் 17 மற்றும் 14 வயதிற்கு உட்பட்டோருக்கான பிரிவில் முறையே பாவேஸ் முதல் பரிசும், இவன்ஸ் என்னும் மாணவன் இரண்டாம் பரிசும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் திரு.ரூபன் செல்வக்குமார் அவர்கள் மற்றும் ஆசிரியர் திரு.அந்தோணி செலஸ்டின் அவர்களும் ஏனைய இருபால் ஆசிரியப் பெருமக்களும் பாராட்டினர்..

Address

Sathankulam

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Government Higher Secondary School, Kombankulam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share