25/09/2025
தமிழக அரசாணை உச்ச நீதிமன்ற தீர்ப்பு கோரிக்கை மனுக்களை அவமதித்து உயிரைக் கொண்ட அரசு நிர்வாகம் - SDPI கட்சி கடும் கண்டனம்
தொடர்ந்து இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் வெறி நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது
கட்சியின் சார்பாக மாவட்ட முழுவதும் உள்ள நகராட்சி பேரூராட்சி ஊராட்சி என அனைத்து நிர்வாகத்திற்கும் கோரிக்கை மனுகள் அளித்து தமிழக அரசாணை உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் சுட்டிக்காட்டி தெருநாய்களையும் வெறி நாய்களையும் அகற்றிடுமாறு பல்வேறு கோரிக்கை மனுகள் கொடுக்கப்பட்டுள்ள பின்பு கூட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை
இந்த சூழ்நிலையில் இராமநாதபுரம் அண்ணா நகர் பகுதியில் ராஜ பிரகாஷ் என்ற இளைஞர் தெரு நாய் கடித்ததில் உயிரிழந்தார்
இந்த உயிரிழப்புக்கு முழு பொறுப்பு மாவட்ட நிர்வாகமும் நகராட்சி நிர்வாகம் தான் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறோம்
இந்த உயிர் இழப்பு என்பது நகராட்சி நிர்வாகமும் மாவட்ட நிர்வாகமும் படுகொலை செய்ததாகவே பொதுமக்கள் கருத வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது
தமிழக அரசு உடனடியாக மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டு தெருநாய் தொல்லைகளிலிருந்து மக்களை பாதுகாக்குமாறு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்
அத்தோடு இன்று உயிரிழந்த ராஜ பிரகாஷ் அவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்
மாவட்ட நிர்வாகமும் நகராட்சி நிர்வாகமும் அலட்சியத்தை தொடர்ந்து செயல்படுத்தினால் மிகப்பெரிய மக்கள் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும் என்பதை இங்கே உறுதியாக கூறிக் கொள்கிறேன்
மாவட்டம் முழுவதும் தெரு நாய் வெறி நாயின் தொல்லை அதிகரித்து வருகிறது மக்கள் நலனில் அக்கறை உள்ள அரசு திராவிட மாடல் அரசு என முதல்வர் செல்லும் இடமெல்லாம் கூறி வருகிறார்கள்
ஆனால் அதற்கு மாறாக மாவட்ட நிர்வாகமும் திமுக நகர்மன்ற நிர்வாகமும் செயல்படுவது முதல்வரின் நட்பெயருக்கு களங்கும் விளைவிக்கும் செயலாகவே பார்க்க முடிகிறது
தேர்தல் நெருங்கும் சூழலில் இது போன்ற அலட்சியங்கள் தொடரும் பட்சத்தில் இந்த நிகழ்வுகள் தேர்தலில் பிரதிபலிக்கும் என்பதை அரசு உணர்ந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்
தெரு நாய் கடித்து உயிரிழந்த ராஜ பிரகாஷ் அவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்
M. முகமது சுலைமான் MBA
மாவட்ட பொதுச்செயலாளர்
SDPI கட்சி இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம்