14/10/2023
*அஸ்ஸலாமு அலைக்கும்*
இராமநாதபுரம் மத்திய மாவட்டம் தங்கச்சிமடம் தமுமுக மமக கிளை பொதுக்குழு கூட்டம் இன்று இரவு 8 மணியளவில் கிளை தலைவர் நூருல் ஜமீர் அவர்கள் தலைமையிலும் கிளை நிர்வாகிகள் முன்னிலையிலும் சிறப்பாக நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக மமக மாவட்ட செயலாளர் ஆசிக் சுல்தான் மற்றும் தமுமுக மாவட்ட து செயலாளர் மைதீன் ராஜா மற்றும் கிளை கழக சகோதரர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கீழ்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன..
*தீர்மானம் :1*
வருகிற அக். 28 ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்திற்கு கிளை சகோதரர்கள் திரளாக கலந்து கொள்வதென தீர்மானிக்கபட்டது.
*தீர்மானம்-2*
ஒரு மாத காலத்திற்குள் அனைத்து சகோதரர்களுக்கும் உறுப்பினர் அடையாள அட்டை பெற்று தருவது என தீர்மானிக்க பட்டது.
*தீர்மானம்:3*
பிரதி மாதம் முதல் வெள்ளி கிளை பொதுக்குழு கூட்டம் நடத்துவது மற்றும் தர்பியா நல்லொழுக்க பயிற்சி நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப் பட்டது
*தீர்மானம் -4*
TMMK SPORTS ACADEMY சார்பாக விளையாட்டு பயிற்சி வழங்குவது என தீர்மானிக்க பட்டது.
*தீர்மானம் -5*
டிச. 6போராட்டத்திற்ககு தங்கச்சிமடம் கிளை சார்பில் சுமார் 100 க்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்து கொள்வது என தீர்மானிக்கபட்டது.
*தீர்மானம்-6*
பாலஸ்தீன மக்களுக்காக தங்கச்சிமடம் தர்ஹா பேருந்து நிறுத்ததில் தெருமுனை பிரசாரம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
தகவல்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்
மனிதநேய மக்கள் கட்சி
தங்கச்சிமடம் கிளை
இராமநாதபுரம் மாவட்டம்