23/12/2013
நேரடி நெல் விதைப்பு தொழில்நுட்பம் மார்கழியில் பூச்சி தாக்குதல் கட்டுப்படுத்தும் வழிகள்
புதுக்கோட்டை, : புதுக்கோட்டையை அடுத்த குறுந்தடிமனையில் நேரடி நெல் விதைப்பு தொழில்நுட்பம் குறித்த செயல்விளக்க பயிற்சி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை வம்பன் வேளாண் அறிவியல் நிலையம் மூலம் தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நேரடிநெல் விதைப்பில் கடைப்பிடிக்க வேண்டிய உயரிய தொழில்நுட்பங்கள் பற்றிய ஒரு நாள் தொழில்நுட்ப செயல் விளக்க பயிற்சி நடைபெற்றது. பயிற்சியில் உதவி பேராசிரியர் கீதா (மனை யியல் துறை) தலைமை வகித்து பேசுகையில், சரி யான அளவில் உரங்கள் மற்றும் மருந்துகளை பயன்படுத்த வேண்டும். அதிக அளவில் பூச்சி மருந்துகளை பயன்படுத்துவதால் மண்ணின் தன்மை மற்றும் உணவு தானியங்களின் தன்மை மாறுபட்டுவிடும் என்றார்.
உதவி பேராசிரியர் கதிரவன் (விதை அறிவியல் மற்றம் தொழிலநுட்பம்) பேசுகையில், உயிர் உரங்களான அசோஸ்பைரில் லம், பாஸ்போ பாக்டீரியா ஆகியவற்றை ஒரு எக்டர் விதைக்கு 600 கிராம் என்ற அளவில் ஆறிய அரிசிக்கஞ்சியில் கலந்து விதைக்க வேண்டும். நடப்பட்ட நாற்று வேர் பிடித்து பச்சை நிறமடைந்து நன்றாக வளர தழைச்சத்து அடியுரமாக இடுவது அவசியம். பொதுவாக நெல் வயிலில் இட்ட தழைச்சத்து 30 சதவிகிதம் மட்டுமே பயிருக்கு கிடைக்கும் வாய்ப்பு உள் ளது. எனவே தழைச்சத்து வீணாவதை குறைத்து பயிரு க்கு கிடைக்க ஏதுவாக 5: 4: 1 என்ற சதவிகிதத்தில் யூரியா, ஜிப்சம், வேப்பம் புண்ணா க்கு கலந்து 24 மணி நேரம் வைத்திருந்து நடவு வயலில் சீராகத் துவவேண்டும். மேலும் சம்பா நெல் ரகங்களுக்கு நட்ட 25, 50, 75, 100 ஆகிய நாட்களில் இடவேண்டும். மணிச்சத்து நெற்பயிரில் இளமைப் பருவத்தில் வேர் பிடித்து நன் றாக வளர்வதற்கும், பூக்கள் பூப்பதற்கும், நெல் மணி களின் வளர்ச்சி, எண்ணிக் கை, முதிர்வடைதல் ஆகியவற்றை சீராக்கி விளைச்சலை பெருக்கவும் வழிவகை செய்கின்றன. முழு உரத்தையும் அடியுரமாக இடவேண்டும். நெல் மணிகளின் எடையை அதிகரித்து பதர்களின் எண்ணிக்கையை குறைத்து விளைச்சலை அதிகரிக்கின்றன என்றார்.
பூச்சியல் துறை உதவிப்பேராசிரியர் சாமிநாதன் பேசுகையில், புழுக்கள் இலைகளை நீளவாக்கில் மடித்து பச்சையத்தை சுரண்டி உண்பதால் இலைகளில் வெள்ளையாக காணப்படும். புரட்டாசி முதல் மார்கழி வரை இப்பூச்சிகளின் தாக்குதல் அதிகமாக இருக்கும். இதனை கட்டுப்படுத்த, பரிந்துரைக்கப்பட்ட அளவு மட்டுமே உரமிட வேண்டும். தழைச்சத்தினை பிரித்து மூன்று தடவை இடவேண் டும். டிரைகடகோகிரம்மா கைலோனிஸ் என்ற முட் டை ஓட்டுண்ணியை ஏக்கருக்கு 2 மிலி என்ற அளவில் நடவு செய்த 37, 44 மற்றும் 51 வது நாட்களில் வயல்களில் விடவேண்டும் என்றார். உதவி பேராசிரியர் மதியழகன் பேசுகையில், நடவு செய்த 3, 4 வாரங்களில் அதாவது தூரடிக்கும் பருவத்தில் தோன்றும் முழு பயிரும் வாடிவிடும், ஆரம்ப நிலையில் மஞ்சள் நிறத்தில் நீர் கசிவுள்ள புள்ளிகள் இலையின் நுனியில் தோன்றி கீழ் நோக்கி விளிம்புகளில் பரவும் இதனால் இலைநுனி மற்றும் விளிம்புகள் காய்ந்து விடும். நோயற்ற விதைகளை தேர்வு செய்ய வேண்டும். பரிந்துரை செய்யப்பட்ட அளவு மட்டும் தழைச்சத்தினை இடவேண்டும். நோயின் தாக்குதல் தீவரமாகும் போது ஏக்கருக்கு ஸ்ட்ரெப்டோமைசின் சல்பேட் மற்றும் டெட்ராசைகளின் கலவை 120 கிராம் மற்றும் காப்பர் ஆக்ஸிகுளோரைடு 500 கிராம் கலந்து தெளிக்க வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் திருவரங்குள வட்டார வேளாண் அலுவலர் அன்பரசன், நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை முதுநிலை ஆராய்ச்சியாளர்களான விஜயசங்கர் மற்றும் சந்தோஷ்குமார் செய்திருந்தனர்.