K.M Shariff

K.M Shariff Official page of km shariff, Tmjk-tamil nadu President

02/04/2021










இன்று மக்கள் நீதிமய்யத்துடன் ஏற்பட்ட உடன்படிக்கை அடிப்படையில் கீழ் கண்ட தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மையம் ...
12/03/2021

இன்று மக்கள் நீதிமய்யத்துடன் ஏற்பட்ட உடன்படிக்கை அடிப்படையில் கீழ் கண்ட தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மையம் பொதுச் செயலாளர் குமாரவேல், துணை பொதுச் செயலாளர் ஆசாத், அப்துல் ரஹ்மான், பல்லாவரம் அப்துல்லா, சேக்இம்ரான் உள்ளிட்டோர் முன்னிலையில் கையெழுத்தானது..




இது ஒரு கடற்கரை கிராமம். பாண்டிய மன்னர்களின் துறைமுக பட்டினம். நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வரை பல நாட்டு கப்பல்கள் வந்து ப...
21/02/2021

இது ஒரு கடற்கரை கிராமம். பாண்டிய மன்னர்களின் துறைமுக பட்டினம். நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வரை பல நாட்டு கப்பல்கள் வந்து போன அழகிய துறைமுகம். செட்டிநாட்டின் பல பிரமாண்ட வீடுகளுக்கு உபயோகபடுத்தப்பட்ட பர்மா தேக்குமரங்கள் வந்து இறங்கிய இடம். தென்னிந்திய கடற்கரையில் அதிகம் குதிரைகள் வந்து சேர்ந்த கடற்கரையும் இதுதான். இன்று காலையில்.......நூறு ஆண்டுகளுக்கு முன்னர் பெரும் புயலில் அழிக்கப்பட்ட இயற்கை துறைமுகமான தொண்டி கடற்கரையில்......

04/02/2021
04/02/2021

தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தொழிற்சங்க செயலாளர் குமார் தலைமை செயலாளர் அவர்களுக்கு அனுப்பிய மனு .
அனுப்புதல் ,
குமார்,
தொழிற்சங்க செயலாளர்,
தமிழக மக்கள் ஜனநாயக கட்சி,

பெறுநர்:
உயர்திரு ,தலைமைச் செயலாளர் அவர்கள், அவர்கள்
சென்னை.

ஐயா.
நான் மேற்காணும் அமைப்பின் தொழிற்சங்க மாநில செயலாளராக இருக்கிறேன் கடந்த 31:01:2021 அன்று
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் வேளான் சட்டத்திற்கு ஆதரவாக பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .அந்த ஆர்ப்பாட்டத்தில் அந்த கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாண ராமன் என்பவர்
இசுலாமியர்களின் மனதை புண்படுத்தும் நோக்கில் இஸ்லாமிய தலைவர் முஹம்மது நபியை ஆண்மையற்றவர் எனவும், இசுலாமிய தலைவர்களின் மீது உண்மைக்கு புறம்பான தகவல்களை பேசியும் அமைதியாக இருக்கும் தமிழகத்தில் மதக்கலவரத்தை ஏற்படுத்த வேண்டும்
என்ற ஒரே நோக்கத்தில் பேசியிருக்கிறார்.இதேபோல் அவர் பலமுறை தொடர்ந்து பேசியும், இணைய தளங்களில் எழுதியும் வருகிறார். இந்திய மதச்சார்பற்ற தன்மைக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் இவரைப்போன்றவர்களை உடனடியாக கைது செய்தும் இவர்மீது
குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிய வேண்டும் என்று கேட்டுக்கொள்வதோடு இசுலாமிய சமூகத்தின் உணர்ச்சியை தூண்டிவிட்டு எங்களைப்போன்று இசுலாமிய சமுகத்திடம் நெருங்கிப்பழகுபவர்களுக்கும், இசுலாமியர்களுக்கும் பிளவை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் செயல்படும் பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதன் அமைப்புகள் நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் கூட்டங்களிலும் இதுபோன்ற கருத்துக்களை பேசக்கூடாது என்ற எச்சரிக்கை செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். கலவரத்தை தூண்ட வேண்டும் என்ற நோக்கத்திலேயே அவர் பேசியிருக்கிறார். இசுலாமியர்களை
பன்றிக்கூட்டம் என்றும், தமிழகத்தை இரண்டாவது குஜராத்தாக மாற்றுவோம் என மிரட்டுகிறார். மேலும் காவல்துறையை பேடிகள்துறை என்றும் கையில் எதற்காக லத்தி என்றும் உளவுப்பிரிவு சட்டம்ஒழுங்கு பிரிவு குற்றவாளிகள் கையாள்வதற்க்கு ஒரு பிரிவு இதையெல்லாம் வைத்துக்கொண்டு நாக்கை வலிக்கிறார்கள் என காவல்துறையை கேவலமாகபேசியுள்ளார் .
இசுலாமியர்கள் உயிருக்கும் மேலாக மதிக்கின்ற நபிகள் நாயகத்தை ஆண்மையற்றவர் என பேசுகிறார். அவரின் குடும்பத்தினரையும் கொச்சைப்படுத்தி பேசுகிறார். இசுலாமிய தலைவர்களை லாரி
ஏற்றிக் கொன்று விடுவேன் என மிரட்டுகிறார். இது அமைதிபூங்காவாக திகழும் தமிழகத்தில் மத வன்முறையைத் தூண்டும் செயலாக உள்ளது . எனவே தலைமை செயலாளர் அவர்கள் இப்படி பேசிய கல்யாண ராமன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட கேட்டுக்கொள்கிறேன்.

23/03/2018

தோழர்களே!
மதுரை மாவட்டம் சந்தையூர் பிரச்சனையை இரண்டு தரப்பு மக்களும்,அவர்களின் தலைவர்களும் உடனடியாக பேசித்தீர்க்க வேண்டுகிறேன்.பேசுவதற்கு உங்களுக்கு சங்கடம் இருக்கிறதென்றால் நான் அந்த வேலையை செய்ய தயாராய் உள்ளேன்.
உனக்கு அந்த தகுதி இருக்கிறதா?என நீங்கள் கேட்டால் ..முதலாவது நான் இஸ்லாமியன்,இருவருக்கும் பொதுவானவன் ,இரண்டாவது இரண்டு சமூகங்களையும் இரண்டு கண்களாக கருதுபவன் ,என்கிற இரட்டை தகுதிஉடையவன்.எனவே
இனியும் நீங்கள் காலம் தாழ்த்தாதீர்கள்.வாருங்கள் பேசித்தீர்க்காத பிரச்சனை உலகில் இல்லை.

14/09/2017

தஞ்சை மாவட்டம் ராஜகிரியைச் சேர்ந்த மாணவர் சேக் சாகுல் அமீது என்பரை திருட்டு வழக்கு ஒன்றில் சம்பந்தப்படுத்தி காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுகுன்றம் காவல்துறை கடுமையாக தாக்கியதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவரின் எட்டுவிரல்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. சிறுநீரகமும் பாதிக்கப்பட்டுள்ளது. இப்படி கொலைவெறி தாக்குதல் நடத்திய காவல்துறையை கண்டித்து தோழர்கள் நீதிமன்றத்தை வழக்கறிஞர் சங்கரசுப்பு மூலம் அணுகியுள்ளனர். விரைவில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுத்திடக் கோரி பிரமாண்ட மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தை தஞ்சையில் நடத்தும்.

12/09/2017
11/09/2017

தமிழ்நாடு சாரணர் சங்க தலைவர் பதவிக்கு (இது கிட்டத்தட்ட ஒரு அமைச்சருக்கு உள்ள அதிகாரமுள்ள பதவி) பா.ஜ.க.வின் எச்.ராஜா போட்டியிடுகிறார்.அவருக்காக சில விதிகளை தமிழக அரசு தளர்த்தியுள்ளது. பள்ளி மாணவர்கள்,ஆசிரியர்கள்,அதிகாரிகள் வாக்களிக்கும் இந்த பதவிக்கு ராஜாவுக்கு வாக்களிக்க தமிழக அரசே வாக்குச்சேகரிக்கிறது மறைமுகமாக.
எச்சரிக்கையாய் இருப்போம் தோழர்களே!

சுய மரியாதைக்காக உயிர்நீத்த சமூக சம உரிமைப்போராளி இமானுவேல் சேகரனை நன்றியுடன் நினைவு கூர்கிறது தமிழக மக்கள் ஜனநாயக கட்சி...
11/09/2017

சுய மரியாதைக்காக உயிர்நீத்த சமூக சம உரிமைப்போராளி இமானுவேல் சேகரனை நன்றியுடன் நினைவு கூர்கிறது தமிழக மக்கள் ஜனநாயக கட்சி.

Address

Pudukkottai

Alerts

Be the first to know and let us send you an email when K.M Shariff posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to K.M Shariff:

Share