SDPI Social Media Ervadi

SDPI Social Media Ervadi Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SDPI Social Media Ervadi, Social service, Nanguneri.

30/11/2025



தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரியில் பொதுக்குழு முடிவு செய்யும்.

SDPI கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் அவர்கள் தென்காசியில் பேட்டி.. 💥💐❤️💚







வக்பு சொத்துக்களை டிச.04க்குள் உமீத் போர்டலில் உடனடியாகப் பதிவு செய்திடுக!  - எஸ்டிபிஐ மாநில தலைவர் வேண்டுகோள்இதுதொடர்பா...
28/11/2025

வக்பு சொத்துக்களை டிச.04க்குள் உமீத் போர்டலில் உடனடியாகப் பதிவு செய்திடுக! - எஸ்டிபிஐ மாநில தலைவர் வேண்டுகோள்

இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

புதிய வக்பு (திருத்த) சட்டம் 2025-ன் படி, நாடு முழுவதும் உள்ள அனைத்து வக்பு சொத்துக்களையும் (நிலம், கட்டடம், தோட்டம், கடை, பள்ளிவாசல்கள், தர்கா, கபர்ஸ்தான் இடம், பள்ளிவாசல் நிலம் உள்ளிட்ட அனைத்து வக்பு சொத்துக்கள்) ஒன்றிய அரசின் அதிகாரப்பூர்வ வக்பு சொத்துகள் இணையதளத்தில் (UMEED PORTAL) (https://umeed.minorityaffairs.gov.in/) கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும். ஏற்கனவே வகுப்பு சொத்துக்கள் மாநில வக்பு போர்டில் டிஜிட்டலைஸ் செய்யப்பட்டிருந்தாலும் புதிய சட்டத்தின் படி umeed தளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். இந்தப் பதிவுக்கான இறுதி தேதி டிசம்பர் 4, 2025 (புதன்கிழமை) வரை மட்டுமே என கூறப்படுகிறது. தமிழ்நாடு வக்பு வாரியமும் இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ளது.

எனவே, அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் அறிவுறுத்தலின்படி, வக்பு சொத்துகளின் பராமரிப்பாளர்களாக உள்ள முத்தவல்லிகள் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் உங்கள் பொறுப்பிலுள்ள அனைத்து வக்பு சொத்துக்களையும் தவறாமல், உடனடியாகப் பதிவு செய்து, எதிர்கால சந்ததியினருக்காக வக்பு உரிமையைப் பாதுகாக்க வேண்டுமென எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

மிகுக்குறைந்த நெருக்கடியான காலச்சூழலை கருத்தில் கொண்டு, தங்கள் மாவட்ட வக்பு கண்காணிப்பாளர் அலுவலகத்தை தொடர்புகொண்டு அதற்கென வழங்கப்படும் படிவத்தை சரியாக பூர்த்தி செய்து, விரைவாக சமர்ப்பித்து வக்பு சொத்துக்களைப் பதிவு செய்யும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

இந்த வக்பு திருத்த சட்டத்தை நாம் உறுதியாக எதிர்த்தாலும், அதற்கான சட்டப் போராட்டங்களை மேற்கொண்டாலும், உச்சநீதிமன்றம் வழங்கி இருக்கும் இடைக்கால உத்தரவின் அடிப்படையில் வக்பு சொத்துக்களை UMEED PORTAL தளத்தில் சட்டப்படி பதிவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

வக்பு சொத்து என்பது இறைவனின் சொத்து. அதைப் பாதுகாப்பது நமது அனைவரது கடமை என்பதை உணர்ந்து விரைவாக செயல்பட வேண்டும். இந்த நடவடிக்கையில் எஸ்டிபிஐ கட்சியின் அந்தந்த பகுதி கிளை நிர்வாகிகளும் தேவையான உதவிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

*நவம்பர்: 27 ஏர்வாடியில் எஸ்டிபிஐ கட்சியின் அனைத்து செயல்வீரர்களின் கூட்டம் புறநகர் மாவட்டதலைவர் பங்கேற்பு*நெல்லை மாவட்ட...
27/11/2025

*நவம்பர்: 27 ஏர்வாடியில் எஸ்டிபிஐ கட்சியின் அனைத்து செயல்வீரர்களின் கூட்டம் புறநகர் மாவட்டதலைவர் பங்கேற்பு*

நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் எஸ்டிபிஐ அனைத்து செயல்வீரர்களின் கூட்டம் நகர தலைவர் பஷீர் தலைமையில் நடைபெற்றுது. நகர பொருளாளர் மீரான் வரவேற்றுப் பேசினார். நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதி தலைவர் காஜாபிர்தெளஸி, சட்டப்பேரவை தொகுதி செயலாளர் பொறியாளர் ரிஸ்வான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக நெல்லை புறநகர் மாவட்டட தலைவர் சிராஜ், கலந்து கொண்டு பூத் கமிட்டி வேலைகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினர். மாவட்ட துணை தலைவர் கல்லிடை சுலைமான், மாவட்ட செயலாளர் அம்பை ஜலில், மாவட்ட பொருளாளர் ஏர்வை இளையாராஜா, ஆகியோர்கள் கலந்து பத்தமடையில் நடைபெற இருக்கும் டிசம்பர் 6 ஆர்பாட்டம் குறித்து பேசினார்கள்.

இதில் தொகுதி நகர, மற்றும் அனைத்து கிளைகள்
உள்பட செயல்வீரர்களும் கலந்து கொண்டார்கள் இறுதியாக நகர செயலாளர் ஷேக் நன்றி கூறினார்.

இவண்
பஷீர் அஹமது
நகர தலைவர்
எஸ்டிபிஐ கட்சி
ஏர்வாடி நகரம்
நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதி

24/11/2025
இன்றைய The New Indian Express ல்...
21/11/2025

இன்றைய The New Indian Express ல்...

SIR படிவத்தை பொதுமக்களுக்கு நிரப்பி கொடுக்கும் பணி தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் நடைபெற்றது.SDPI நாங்குநேரி சட்டமன்ற...
20/11/2025

SIR படிவத்தை பொதுமக்களுக்கு நிரப்பி கொடுக்கும் பணி தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் நடைபெற்றது.

SDPI நாங்குநேரி சட்டமன்ற தொகுதி செயலாளர் இன்ஜினியர் ரிஸ்வான், SDPI நகர தலைவர் பஷீர் அகமது, மத்திய கிளை வடக்கு பகுதி பொருளாளர் அக்பர் ஆகியோர் SIR படிவத்தை பொது மக்களுக்கு நிரப்பி கொடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மக்கள் பணி சிறக்க வாழ்த்துகிறோம்!
19/11/2025

மக்கள் பணி சிறக்க வாழ்த்துகிறோம்!

கேரள உள்ளாட்சித் தேர்தல்: அனைத்து தரப்பு மக்களையும் களம் இறக்கி வேட்பாளர்களை அறிவித்த SDPI கட்சி.!சுமார் 5000 SDPI கட்சி...
19/11/2025

கேரள உள்ளாட்சித் தேர்தல்: அனைத்து தரப்பு மக்களையும் களம் இறக்கி வேட்பாளர்களை அறிவித்த SDPI கட்சி.!

சுமார் 5000 SDPI கட்சியின் வேட்பாளர்கள் மூக்குக் கண்ணாடி சின்னத்தில் போட்டியிடுகின்றனர்..

நவம்பர் : 18 ஏர்வாடியில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் (SIR)தீவிர திருத்த வாக்காளர் சிறப்பு பட்டியல் முகாம்*ஏர்வாடியில் எஸ...
18/11/2025

நவம்பர் : 18 ஏர்வாடியில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் (SIR)தீவிர திருத்த வாக்காளர் சிறப்பு பட்டியல் முகாம்*

ஏர்வாடியில் எஸ்டிபிஐ கட்சியின் நகரம் சார்பில் (SIR) தீவிர திருத்த வாக்காளர் சிறப்பு பட்டியல் முகாம் இன்று புதுமனையில் வைத்து நடைபெற்றது.

பொதுமக்களுக்கு (SIR) வாக்காளர் படிவ விண்ணப்பத்தை நிரப்பி கொடுக்கும் பணியில் SDPI கட்சியின் நாங்குநேரி தொகுதி தலைவர் ஹாஜா பிர்தவ்ஸி, நாங்குநேரி தொகுதி செயலாளர் இன்ஜினியர் ரிஸ்வான், நகர செயலாளர் சேக் முகமது, நகர செயற்குழு உறுப்பினர் SP. மீரா சாஹிப், SDPI 1 வது வார்டு கவுன்சிலர் ஜன்னத் ஆலிமா ஆகியோர் ஈடுபட்டனர்.

இவண்
SDPI கட்சி
ஏர்வாடி நகரம்
நெல்லை புறநகர்

நவம்பர் 16 நெல்லை புறநகர் மாவட்டம்  ஏர்வாடி நகர கமிட்டி  ஆலோசனை கூட்டம்*நெல்லை புறநகர் மாவட்டம்  ஏர்வாடி நகர கமிட்டி ஆலோ...
16/11/2025

நவம்பர் 16 நெல்லை புறநகர் மாவட்டம் ஏர்வாடி நகர கமிட்டி ஆலோசனை கூட்டம்*

நெல்லை புறநகர் மாவட்டம் ஏர்வாடி நகர கமிட்டி ஆலோசனை கூட்டம் எஸ்டிபிஐ கட்சியின் ஏர்வாடி நகர அலுவலகத்தில் வைத்து ஏர்வாடி நகர தலைவர் பஷீர் அகமது அவர்கள் தலைமையில் நடைபெற்றது.....

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி செயலாளர் இன்ஜினியர் ரிஸ்வான் முன்னிலை வகித்தார்

எஸ்டிபிஐ கட்சியின் ஏர்வாடி நகர செயலாளர் சேக் முகமது வரவேற்புரை ஆற்றினார். இந்நிகழ்வில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

1.வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ஏர்வாடி பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து பூத்துகளிலும் எஸ்டிபிஐ கட்சியின் பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமிக்கப்பட்டார்கள்.

2. எஸ்.ஐ ஆர் படிவங்களை பூர்த்தி செய்வதற்காக ஏர்வாடி எஸ்டிபிஐ சார்பாக அனைத்து வார்டுகளிலும் முகாம்களை நடத்த வேண்டும் ......

3. ஏர்வாடியில் அல் அக்ஸா, அல் அக்ஸா 2 ,அல்ஹுதா தெரு பிஸ்மி நகர் ஹாஜி நகர் மதினா நகர் தெருக்களில் குண்டும் குழியுமாக இருக்கிற தெருக்களை பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு போர்க்கால அடிப்படையில் ஏர்வாடி பேரூராட்சி நிர்வாகம் சரி செய்து கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

4. ஏர்வாடி டூ சிறுமளஞ்சி போகும் பாதையில் மின் விளக்கு அமைக்க வேண்டும்

இதில் நகர துணைத் தலைவர் அலி சேக் மன்சூர் அவர்கள் கலந்து கொண்டார்

இறுதியாக ஏர்வாடி நகர துணைச் செயலாளர் முகைதீன் நன்றியுரை ஆற்றினார்.

இவன்:
சேக் முகம்மது
நகர செயலாளர்
நாங்குநேரி சட்டமன்ற தொகுதி
SDPI கட்சி
நெல்லை புறநகர் மாவட்டம்

Address

Nanguneri
627103

Website

Alerts

Be the first to know and let us send you an email when SDPI Social Media Ervadi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category