12/01/2017
*நாளை நான் போராட்டம் நடத்துகிறேன்.. முடிஞ்சா கைது பண்ணுங்க.. சிம்பு அதிரடி*
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சிம்பு
-நான் நாளை போராட்டம் நடத்துவேன்
-என்னை முடிந்தால் கைது செய்யட்டும்-சிம்பு
-முடிந்தால் என்னை தடியடி நடத்தி கலையுங்கள்-சிம்பு
-எல்லோரும் அவரவர்கள் வீட்டு முன்பு 10 நிமிடம் மவுனமாக நில்லுங்கள்-சிம்பு
-பிறருக்கு தொந்தரவு கொடுக்காமல் அப்படியே 10 நிமிடங்கள் நில்லுங்கள்
-தமிழர்கள் அநாதை இல்லை என்று காண்பிக்க திரளுங்கள்
-உங்களுக்கு இதுதான் கடைசி வாய்ப்பு மக்களே-சிம்பு
-ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடுபவர்களால் பத்து பைசாவுக்கு பலனில்லை
-தனித்தனியாக போராடுவதால் பலன் கிடைக்காது-சிம்பு
-தனித்தனியாக போராடுவதால்தான் போலீசாரால் தடியடி நடத்த முடிகிறது
-இந்த டிஜிட்டல் யுகத்தில் போராட்டத்தை புது வகையில் எடுத்து செல்லுங்கள்
-தமிழன் என்று பெருமையுள்ளவர்கள் தனித்தனியாக போராடாதீர்கள்-சிம்பு
-நாளை 12ம் தேதி மாலை 5 மணிக்கு என் வீட்டு வாசலில் கருப்பு சட்டை அணிந்து போராட்டம்
-மாலை 5 மணிக்கு 10 நிமிடங்களுக்கு நான் மவுன விரதம் இருக்கப்போகிறேன்
-எனக்கு சோறுபோட்ட என் மக்கள் பிரச்சினைக்காக நான் வருவேன்-சிம்பு
-ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடியவர்களை போலீசார் அடித்திருக்க கூடாது
-நமது கலாசாரத்திற்கு ஆதரவாக போராடியவர்களை போலீசார் அடித்தது தவறு
-போலீசார் அன்று யூனிபார்மை கழற்றி வைத்துவிட்டு லீவு போட்டிருக்கலாம்-சிம்பு
-மாட்டை கொடுமைப்படுத்துவதாக கூறுவோருக்கு சிம்பு சரமாரி கேள்வி
-மாடு தனது கன்றுக்கு வைத்த பாலை கறந்து குடிப்பவர்களுக்கு இதை கேட்க என்ன தகுதியுள்ளது?
-செடி, கொடி கூட உயிரோடு உள்ள தாவரம்தான், ஏன் அதை சாப்பிடுகிறீர்கள்? சிம்பு கேள்வி
-எங்களுக்கு தெரியாதா மாட்டை துன்புறுத்தக்கூடாது என்று? சிம்பு கேள்வி
-நாங்கள் மனிதர்கள் இல்லையா, மனிதாபிமானம் இல்லாத ராட்சதர்களா? சிம்பு ஆவேசம்
-நம்மூரில் பிறந்த முட்டாள்கள் இப்படி கேள்வி கேட்கிறார்கள்-சிம்பு
-கலாச்சாரம் தெரியாமல் என்னங்க பிள்ளை வளர்த்துள்ளீர்கள்-சிம்பு
-ஜல்லிக்கட்டு தடை என்பது வேறு லெவல் கேம்-சிம்பு
-கிராமத்தில் இருந்து சிட்டிக்கு வந்ததும் உங்களுக்கு பாரம்பரியம் மறந்துவிட்டதா?
-எவனோ வெளிநாட்டிலிருந்து வந்து சொல்வதை கேட்டுக்கொண்டு பிதற்றுவதா? - சிம்பு
-தமிழகத்தின் சோறை சாப்பிட்டுவிட்டு ஜல்லிக்கட்டுக்கு எதிராக பேசுவதா?
-ஜல்லிக்கட்டு என்றால் என்ன என்று சிலர் கேட்கிறார்கள்-சிம்பு
-முதலில் தமிழ் என்றால் என்னவென்று உன் அப்பா, அம்மாவிடம் கேள்-சிம்பு
-எங்களின் பாரம்பரியத்தில் கை வைத்தால் நடப்பதே வேறு-சிம்பு
-நான் பஞ்ச் பேசுவதை போல பேசுவதாக விமர்சனம் செய்தாலும் பரவாயில்லை
-எல்லா தமிழர்களுக்கும் போராடும் உணர்வு இருக்கிறது
-ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் போராடுவது மகிழ்ச்சி
-ஜல்லிக்கட்டை தடை செய்ய சொல்வது வெளிநாட்டு அமைப்பு
-ஜல்லிக்கட்டு ஒன்றும் விளையாட்டு கிடையாது-சிம்பு
-தமிழர்களை அனாதை என நினைத்துவிட்டீர்களா-சிம்பு
-வெளியே அடித்தீர்கள் பொறுத்துக்கொண்டோம், வீட்டுக்குள் வந்து விட்டீர்களே-சிம்பு
-நாங்கள் அநாதைகள்தான்-சிம்பு
-அஜித், சிம்பு, விஜய் ரசிகர்கள், மத, ஜாதி ரீதியாக தமிழர்கள் பிரிக்கப்பட்டுவிட்டனர்
-இப்படி பிரிந்து கிடப்பதால்தான் தமிழர்கள் அனாதையாக்கப்பட்டுள்ளோம்-சிம்பு
-கருத்துகர்நாடகாக்காரர்களுக்கு உணர்வு உள்ளது நம்மை அடிக்கிறார்கள்
-தமிழர்களுக்கு உணர்வு இல்லை-சிம்பு ஆவேசம்
-ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேசும் அறுகதை எனக்கு உள்ளது
-இன்று கூட நான் பேசாவிட்டால் என்றுதான் பேசுவது-சிம்பு
-மகத்தான தமிழ் எனது தாய் மொழி என்பதில் பெருமை- சிம்பு
-5ம் வகுப்புவரை தமிழில் நான் 99, 100 மதிப்பெண்கள் எடுத்தேன்-சிம்பு
-நமது கலாசாரத்தில் கை வைக்கிறார்கள்
-நமது வீட்டுக்குள் வந்து அடிக்கிறார்கள்-சிம்பு
-இதற்கு மேலும் சும்மா இருக்க போகிறீர்களா? சிம்பு ஆவேசம்
-காஷ்மீரில் ராணுவ வீரர் கொல்லப்பட்டால் இந்தியர் என்கிறது மீடியா
-கன்னியாகுமரி மீனவர்கள் கொல்லப்பட்டால் தமிழர்கள் என்கிறது-சிம்பு ஆவேசம்
-தமிழர்களுக்கு எப்போதுமே பிரச்சினைதான்- சிம்பு வேதனை
-நான் போராட்டம் நடத்தினால் அரசியலுக்கு வருவதாக கூறிவிடுவார்கள்
-நான் அரசியல்வாதி கிடையாது
-நான் ஒரு நடிகர்தான்-சிம்பு
-தமிழர்களுக்கு ஏகப்பட்ட பிரச்சினை-சிம்பு