TMMK MMK Muthupet

  • Home
  • TMMK MMK Muthupet

TMMK MMK Muthupet முத்துப்பேட்டை தமுமுக மமகவின் முகநூல் பக்கம் - 2

25/01/2026
இன்று 17.01.2026 சனிக்கிழமை மாலை 5:30 மணிக்கு, இமாம் அபூஹனீஃபா தெருவில் அமைந்துள்ள பொருளாளர் முஸ்தாக் அவர்களின் இல்லத்தி...
17/01/2026

இன்று 17.01.2026 சனிக்கிழமை மாலை 5:30 மணிக்கு, இமாம் அபூஹனீஃபா தெருவில் அமைந்துள்ள பொருளாளர் முஸ்தாக் அவர்களின் இல்லத்தில் தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் முத்துப்பேட்டை நகர பொதுக்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் முஜிபுர் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மக்கள் உரிமை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அணி மாநில செயலாளர் வழக்கறிஞர் L.தீன் முஹம்மது, மாநில செயற்குழு உறுப்பினர் மு.நெய்னா முகம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முத்துப்பேட்டை நகர தமுமுக மமக உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் நகரத் தலைவர் A. முஹம்மது அலீம் அவர்களின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டு, பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார். புதிய தலைவராக HMA. மன்சூர் அவர்கள் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டார்.

மேலும், கட்சியின் எதிர்கால திட்டங்கள் பற்றி ஆலோசிக்கப்பட்டது. 1000 க்கும் மேற்பட்ட புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, குடியரசு தினத்தன்று கொடியேற்றுவது, நான்காம் ஆண்டு மாரத்தான் போட்டியை நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இறுதியாக மமக நகரச் செயலாளர் L. நிஜாம் நன்றி கூற கூட்டம் நிறைவு பெற்றது.

தகவல்
ஊடகப்பிரிவு - தமுமுக
முத்துப்பேட்டை - நகரம்

🇮🇳🇮🇳 76_வது_குடியரசு_தின  தேசிய கொடியேற்று நிகழ்ச்சி 🖤🤍            76 வது குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று 26.01.2025  ...
27/01/2025

🇮🇳🇮🇳 76_வது_குடியரசு_தின தேசிய கொடியேற்று நிகழ்ச்சி 🖤🤍

76 வது குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று 26.01.2025 காலை 8.00 மணிக்கு ஆசாத் நகர் பழைய தமுமுக அலுவலகம் அருகில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில், தமுமுக நகரத் தலைவர் முஹம்மது அலீம் தலைமைவகிக்க, தமுமுக மனித உரிமை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அணி மாநிலச் செயலாளர் வழக்கறிஞர் L. தீன் முஹம்மது, மாநில செயற்குழு உறுப்பினர் அப்பா மு நெய்னா முகமது, மற்றும் நகர நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக முத்துப்பேட்டை மண்ணின் மைந்தர் Dr.S.M. ஹைதர் அலி D.P.E (USA) அவர்களும், ஆசாத் நகர் ஜும்மா பள்ளி தலைவர் ஜின்னா அவர்களும் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

தகவல்:
தமுமுக,
தகவல் தொழில்நுட்ப அணி
முத்துப்பேட்டை நகரம்,
திருவாரூர் மாவட்டம்

🇮🇳🇮🇳 76_வது_குடியரசு_தின  தேசிய கொடியேற்று நிகழ்ச்சிக்கு முத்துப்பேட்டை தமுமுக அழைப்பிதழ்.....🖤🤍            இன்ஷா அல்லாஹ...
25/01/2025

🇮🇳🇮🇳 76_வது_குடியரசு_தின தேசிய கொடியேற்று நிகழ்ச்சிக்கு முத்துப்பேட்டை தமுமுக அழைப்பிதழ்.....🖤🤍


இன்ஷா அல்லாஹ் நாளை 26.01.2025 காலை சரியாக 8.00 ஆசாத் நகர் முன்னாள் தமுமுக அலுவலகம் அருகில் 76_வது_குடியரசு_தின விழா கொடியேற்று நிகழ்ச்சி தமுமுக நகரத் தலைவர் முகம்மது அலீம் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது.

சிறப்பு விருந்தினராகவும் தேசியக் கொடியை ஏற்றி வைக்க முத்துப்பேட்டை மண்ணின் மைந்தர் Dr.S.M. ஹைதர் அலி D.P.E (USA) அவர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பிக்க இருக்கிறார்கள்.

இந்நிகழ்வில் நகர நிர்வாகிகள் மற்றும் அணி நிர்வாகிகள், முன்னாள் இந்நாள் உறுப்பினர்கள் , நிர்வாகிகள்,SMI நிர்வாகிகள் ,அனுதாபிகள் என அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

நாள்:26.01.2025

நேரம்: காலை 8 மணி அளவில்.

இடம்: ஆசாத் நகர் முன்னாள் தமுமுக அலுவலகம் அருகில்

தகவல்:
தமுமுக,
தகவல் தொழில்நுட்ப அணி
முத்துப்பேட்டை நகரம்,
திருவாரூர் மாவட்டம்.பாலம் அருகில்

மதுரை சிக்கந்தர் மலை தர்கா கள ஆய்வில் மமக பொதுச்செயலாளர் ப.அப்துல்சமது எம்.எல்.ஏமதுரை சிக்கந்தர் மலை தர்கர விவகாரம் குறி...
20/01/2025

மதுரை சிக்கந்தர் மலை தர்கா கள ஆய்வில் மமக பொதுச்செயலாளர் ப.அப்துல்சமது எம்.எல்.ஏ

மதுரை சிக்கந்தர் மலை தர்கர விவகாரம் குறித்து சட்டமன்றத்தில் பேசியது மட்டும் இல்லாமல் களத்திற்கு சென்று ஆய்வு செய்த மமக பொதுச்செயலாளர் ப.அப்துல் சமது எம்.எல்.ஏ

உடன் மதுரை மாவட்ட தமுமுக மமக நிர்வாகிகள் மற்றும் ஜமாத்தார்கள்

#சிக்கந்தர்பாதுஷாதர்கா

களத்தில் இறங்கிய மனிதநேய மக்கள் கட்சி முத்துப்பேட்டை பேருராட்சி மன்ற உறுப்பினர்…இன்று (14-01-2025) ஆசாத்நகர் புதுக்குடிர...
14/01/2025

களத்தில் இறங்கிய மனிதநேய மக்கள் கட்சி முத்துப்பேட்டை பேருராட்சி மன்ற உறுப்பினர்…

இன்று (14-01-2025) ஆசாத்நகர் புதுக்குடிருப்பில் சேக் தாவுது என்பவர் மௌத்தாகிவிட்டார். அந்த தெருவை தூய்மை செய்து பிலிச்சிங் பவுடர் அடிக்க வேண்டும்…

பொங்கல் விடுமுறையை தொடர்ந்து தூய்மைபணியாளர்கள் விடுமுறை காரணமாக வழக்கறிஞர் தீன்முகமது ஆலோசனை அடிப்படையில் முத்துப்பேட்டை ஆசாத்நகர் 5 வது வார்டு மன்ற உறுப்பினர் நஜிமாகாமிம் மரைக்கான் மற்றும் தமுமுக மமக நிர்வாகிகள் நேரடியாக களத்தில் இறங்கி பிலிச்சிங் பவுடர் அடிக்கும் பணியில் ஈடுபட்டனர்…

14/01/2025

Address


614704

Alerts

Be the first to know and let us send you an email when TMMK MMK Muthupet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your organization to be the top-listed Government Service?

Share