22/01/2026
மூணாறில் இளைஞர்களை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி AIYF தேவிகுளம் மண்டலம் கமிட்டி தலைமையில் கண்டன ஊர்வலம் நடைபெற்றது. AIYF மண்டலத் தலைவர் தோ. அஜித்குமார் போராட்டத்திற்கு தலைமை தாங்கினார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோ. சுனில் குமார் நிகழ்வைத் தொடங்கி வைத்தார். மண்டலச் செயலாளர் தோ. பிரவீன்குமார், மாவட்டக் குழு உறுப்பினர்கள் தோ.ராஜா, தோ. நவீன் தோ.சுதன் மற்றும் ஆட்டோ மோட்டார் தலைவர் தோ. ஆனந்த் மற்றும் மண்டலம் கமிட்டி உறுப்பினர்கள் எண்ணற்ற தோழர்களும் கலந்து கொண்டனர்.