IMMK மயிலாடுதுறை மாவட்டம்.

IMMK மயிலாடுதுறை மாவட்டம். ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம் (IMMK)

அநீதி இழைக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பு பேரியக்கம்....

24/03/2026

#இன்ஷா_அல்லாஹ்...

#ஐக்கிய_முஸ்லிம்_முன்னேற்றக்_கழகம்
#மாநில_செயற்குழு

நாள்: 28:03:2026
இடம்: மதினா பேலஸ், பேகம்பூர், திண்டுக்கல்.

24/03/2026

☪️ திடலில் ஈதுல் ஃபித்ர் (நோன்பு பெருநாள்) தொழுகை – 2026

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

📍 @மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி – இஸ்லாமிய நல்லிணக்க மையம் INM நல்லிணக்க மையம் (INM) சார்பாக, 🏟️ LMC விளையாட்டு மைதானத்தில் 🗓️21.03.2026 அன்று காலை 🕟7:40 மணி அளவில் திடலில் ஈதுல் ஃபித்ர் (நோன்புப் பெருநாள்) தொழுகை அல்லாஹ்வின் கிருபையால் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து
மௌலவி. நியாஸ் ஃபிர்தவ்ஸி அவர்கள் ரமலான் ஒரு மாதம் மட்டும் அல்ல, ஒரு வாழ்க்கை பயிற்சி என்னும் தலைப்பில் (பெருநாள்) 🎙️குத்பா உரை நிகழ்த்தினார்.

👨‍👩‍👧‍👦 இதில் சீர்காழி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஆண்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என குடும்பத்துடன் பெருந்திரளாக கலந்து கொண்டு, மகிழ்ச்சியுடன் நிகழ்வை சிறப்பித்தனர்.

✨ அல்ஹம்துலில்லாஹ்…

💖 இன்நிகழ்ச்சி ஏற்பாட்டிற்கு பெரிதும் உதவி செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும்

🌼 ஜஸாகல்லாஹூ கைரா 🌼
(அல்லாஹ் உங்களுக்கு மிகச்சிறந்த நற்கூலியை வழங்குவானாக)🤲

📢 என்றென்றும் மார்க்கப் பணியில்...

☪️🤝🕋
இஸ்லாமிய நல்லிணக்க மையம் (INM)
📍சீர்காழி, மயிலாடுதுறை மாவட்டம்.
---------------------------------------
#ஐஎன்எம் #இஸ்லாமியநல்லிணக்கமையம் #சீர்காழிஐஎன்எம் ீர்காழி #மார்க்கப்பணி #சமுதாயப்பணி #நல்லிணக்கம் ிலாடுதுறை #ஐஎன்எம்நிகழ்வுகள் #இஸ்லாமியசேவை #மார்க்கப்பணியில்ஐஎன்எம் #சீர்காழிசமூகம் Reflection #ஈதுல்ஃபித்ர் #நோன்புபெருநாள் #பெருநாள்வாழ்த்துகள் #ரமலான்2026 #ஈதுதொழுகை #பெருநாள் #இஸ்லாம்

இறைவன் திருப்பெயரால்… ✨👇🏼👇🏼  ₹1,06,770 ரூபாய் ஃபித்ரா தொகையில் 75 குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்...
24/03/2026

இறைவன் திருப்பெயரால்… ✨👇🏼👇🏼

₹1,06,770 ரூபாய் ஃபித்ரா தொகையில் 75 குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.

ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் இஸ்லாமிய நல்லிணக்க மையம் INM 🤝 மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி நகரம் சார்பாக கடமையான சதக்கத்துல் ஃபித்ர் தொகை மக்களிடமிருந்து வசூலிக்கப்பட்டு, 🗓️ 19.03.2026 & 20.03.2026 அன்று நகரச் செயலாளர் இஸ்மாயில் அவர்களின் தலைமையில் நடைபெற்றது;

இந்நிகழ்ச்சியை மாநில துணைத் தலைவர் O.M.A. முசாஹுதீன் அவர்கள் துவக்கி வைத்தார். இதில் மாவட்டத் தலைவர் சீர்காழி முஜிப்தீன், மாவட்ட செயலாளர் ஹாஜா மொய்தீன், மாவட்ட பொருளாளர் P. ஆசிக் அலி, நகர பொருளாளர் முஷாஹித் அலி, நகர துணைத் தலைவர் முகமது யூனுஸ், துணைச் செயலாளர் முகமது இக்பால், டார்க் டிசைன் இம்ரான், ஊடகப் பிரிவு செயலாளர் பயாஸ் அஹமத் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள், கழக உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இறைவனின் கிருபையால் ₹1,06,500 மதிப்பில், ஒரு குடும்பத்திற்கு ₹1420 மதிப்பிலான 🍚 அரிசி, 🛒 மளிகை பொருட்கள், 🥕 காய்கறிகள் அடங்கிய தொகுப்புகள் சீர்காழி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் 75 எளிய குடும்பங்களுக்கு 🏡 இல்லம் தேடி சென்று வழங்கப்பட்டது; மீதமிருந்த ₹270 தொகையில் 5 கிலோ அரிசியாக வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்… 🤲

அல்லாஹ்வின் உதவியால், இந்த ஃபித்ரா உணவு பொருட்களை சரியான நேரத்தில் மக்களிடம் கொண்டு சேர்க்க உதவிய அனைவருக்கும், பொருளாதார ரீதியாக பங்களிப்பு செய்து ஆதரவு அளித்த நல் உள்ளங்களுக்கும்.

🌼🌸ஜஸாகல்லாஹு கைரா🌸🌼(அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்குவானாக).

இறைவா! எங்களின் இச்சேவையை ஏற்றுக்கொண்டு, எங்களின் குறைகளை மன்னித்து, இம்மையிலும் மறுமையிலும் அருள் புரிவானாக! 🤲🏼

என்றும் ஈகைப்பணியில்...

IMMK & INM
சீர்காழி நகரம்,
மயிலாடுதுறை மாவட்டம்.
-----------------------------------
​ #சீர்காழி #மயிலாடுதுறை #ஃபித்ரா #ஈகைத்திருநாள் #மனிதாபிமானம் #நற்பணி Humanity

13/03/2026
அன்புடையீர்... அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) 🤝✨நோன்பாளியிடமிருந்து ஏற்பட்ட வீணான காரியங்களை விட்டும் நோன்பாளியை தூய்மைப்ப...
13/03/2026

அன்புடையீர்...
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) 🤝✨

நோன்பாளியிடமிருந்து ஏற்பட்ட வீணான காரியங்களை விட்டும் நோன்பாளியை தூய்மைப்படுத்தவும் ஏழைகளுக்கு உணவாகவும் நபி (ஸல்...) அவர்கள் ஃபித்ரா தர்மத்தை விதியாக்கினார்கள்.

📖நூல் அபூதாவூத் 1371. இப்னுமாஜா 1817)

எளிய மக்கள் பெருநாள் அன்று இன்புற்றிருக்கும் வகையில், ஃபித்ரா என்னும் தர்மத்தை ஐக்கிய முஸ்லிம்‌ முன்னேற்றக் கழகம் சீர்காழி நகரம் மற்றும் 🤝 இஸ்லாமிய நல்லிணக்க மையம் (INM) இணைந்து, அனைத்து மக்களிடமிருந்தும் ஒன்றாகத் திரட்டி, இறைவனின் கிருபையால் எளிய மக்களுக்கு உணவுப் பொருட்களாக ஐமுமுக தொண்டர்கள் மூலம் சிறந்த முறையில் விநியோகம் செய்து வருகிறது. 🍲📦

தன்னலமற்ற சமுதாய சேவையில் தனக்கென தனி இடத்தைப் பெற்றுள்ள சீர்காழி நகர ஐமுமுக தொண்டர்கள், ஃபித்ரா பெறுவதற்குத் தகுதியானவர்களைக் கண்டறிந்து, அவர்களின் இல்லம் தேடிச் சென்று உங்களின் ஃபித்ரா உணவுப் பொருட்களை விநியோகம் செய்வதற்குத் தயாராக உள்ளார்கள். 🚶‍♂️🏘️🚚✨

எனவே, உங்கள் ஃபித்ரா கடமையைக் கூட்டாக நிறைவேற்றிட, இதற்காக உங்களை அணுகும் ஐமுமுக பொறுப்பாளர்களிடம் உங்களின் ஃபித்ரா தொகையைச் செலுத்தி ரசீதைப் பெற்றுக்கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். 💰🧾 *இவ்வாண்டும் இந்த நற்செயலைச் சிறந்த முறையில் செயல்படுத்திட, நம் அனைவரது ஃபித்ரா தொகையினை விரைந்து செலுத்தி அல்லாஹ்வின் அருளைப் பெற்றிடுவோம்* . 🤲✨

📝குறிப்பு :
👉 நமது பகுதியில் வசிக்கும் உங்களுக்குத் தெரிந்த எளிய மக்கள் இருப்பின், அவர்களுக்கும் ஃபித்ரா உணவுப் பொருட்கள் சென்றடைய அவர்களின் விவரங்களைக் கூறினால், ஐமுமுக சீர்காழி நகர நிர்வாகிகள் மூலம் ஃபித்ரா உணவுப் பொருட்கள் வழங்கப்படும். 🚶‍➡️🏘️🚚✨

👉 உங்களின் ஃபித்ராவை உணவுப் பொருட்களாக வழங்கிட விருப்பம் உள்ளவர்கள் ஃபித்ரா பொறுப்பாளர்களைத் தொடர்பு கொள்ளவும். 📱🤝

அல்ஹம்துலில்லாஹ்… 🤲

என்றென்றும் சமுதாய பணி... ❤️🤝

ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (IMMK)

📍 சீர்காழி நகரம், மயிலாடுதுறை மாவட்டம்.
----------------------------------------------
#ஐமுமுக #சீர்காழி_ஐமுமுக
#இஸ்லாமிய_நல்லிணக்க_மையம் #சமுதாயப்பணி #மனிதாபிமானம் #ஃபித்ரா #ஈகைத்திருநாள் #பெருநாள்_தர்மம் #ஏழையின்_சிரிப்பில்_இறைவன்
#உணவளிப்போம்_மகிழ்வோம்
#நன்மையை_விதைப்போம்



#ஆம்புலன்ஸ்_சேவை #நோன்பாளி #நோன்பு #சீர்காழி #மயிலாடுதுறை

23/02/2026
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...🌺💐“எவரொருவர் ஓர் உயிரைக் காப்பாற்றுகிறாரோ, அவர் மனிதகுலம் முழுவதையும் காப்பாற்றியவர் போலாவார்…...
19/02/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...🌺💐

“எவரொருவர் ஓர் உயிரைக் காப்பாற்றுகிறாரோ, அவர் மனிதகுலம் முழுவதையும் காப்பாற்றியவர் போலாவார்…”
(📖அல்குர்ஆன்)

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி பகுதி மக்களின் தேவையை உணர்ந்து, ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக அனைத்து சமுதாய மக்களுக்காக 🚑ஆம்புலன்ஸ் வாங்கிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன் முதற்கட்டமாக வாகனத்திற்கான 💵முன்பணத்தை (Advance Amount) செலுத்தி, இறைவன் கிருபையால் ஆம்புலன்ஸ் முன்பதிவு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் ஐமுமுக மாநிலத் துணைத் தலைவர் . #முசாஹூதீன், மாவட்டத் தலைவர் #சீர்காழி_முஜிப்தீன், மாவட்டச் செயலாளர் A. #ஹாஜாமைதீன், மாவட்ட பொருளாளர் P. #ஆஷிக்_அலி மற்றும் நகர நிர்வாகிகள் முன்னிலையில் காசோலை 🧾💰 வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்…

இருப்பினும், வாகனத்தின் முழுத்தொகையை செலுத்தி, அதனை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர இன்னும் கணிசமான நிதி தேவைப்படுகிறது.💰

அனைத்து மக்களுக்கும் சேவை செய்யும் இந்த அறப்பணியில் உங்கள் பங்களிப்பும் ஆதரவும் மிகவும் அவசியமானது.🤝

இம்முயற்சி வெற்றி பெற்று, ஆம்புலன்ஸ் சேவை விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்திட இறைவனிடம் அனைவரும் பிரார்த்திக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.🤲

ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (IMMK)
சீர்காழி நகரம்,
மயிலாடுதுறை மாவட்டம்.
-----------------------------------------------
#ஐமுமுக #சீர்காழி #மயிலாடுதுறை #ஐக்கிய_முஸ்லிம்_முன்னேற்றக்_கழகம் #நம்ம_சீர்காழி #ஆம்புலன்ஸ்_சேவை #சமூகப்பணி #மனிதநேயம் #அறப்பணி #உயிர்காப்போம் #மக்கள்பணி #மயிலாடுதுறை_மாவட்டம் #சீர்காழி_நகரம் #சமூகநீதி #நற்பணி #அல்ஹம்துலில்லாஹ் #ஐமுமுக #சீர்காழி #மயிலாடுதுறை #ஆம்புலன்ஸ்_சேவை #சமூகப்பணி #மனிதநேயம் #அறப்பணி #மக்கள்பணி #நம்ம_சீர்காழி #ஐக்கிய_முஸ்லிம்_முன்னேற்றக்_கழகம்

25/11/2025

இறைவன் திருப்பெயரால்...

✨ சீர்காழி அரசு மருத்துவமனையில் உள் சிகிச்சை பிரிவு பயனாளிகளுக்கு 🍎🍊INM சார்பாக பழங்கள் வழங்கப்பட்டது.

அனைத்து புகழும் இறைவனுக்கே..!🤲

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அரசு மருத்துவமனையில் இஸ்லாமிய நல்லிணக்க மையம் ( ) சார்பாக 🗓️ (24.11.2025) பிரசவ வார்டு தாய்மார்கள் மற்றும் உள் சிகிச்சை பிரிவில் உள்ள 110 பயனாளிகளுக்கு ஆப்பிள், ஆரஞ்சு மற்றும் வாழை ஆகிய பழங்கள் வழங்கப்பட்டது.

மருத்துவமனையை சுத்தமாகவும் சிறப்பாகவும் பராமரித்து வரும்
தலைமை மருத்துவர் 🩺 டாக்டர் சே. #அருண்ராஜ்குமார் அவர்களுக்கு நன்றி தெரிவித்ததுடன் அவரின் பணியை பாராட்டி நினைவு பரிசும்🎁 வழங்கப்பட்டது.

இந்த நற்பணியில் பங்காற்றிய அனைத்து நல்லுயர்ந்த உள்ளங்களுக்கும்…
#ஜசாக்கல்லாஹு_கைரன்
(இறைவன் உங்களுக்கு உயர்ந்த நற்கூலி வழங்குவானாக.)🤲

என்றென்றும் #சமூக_நலப்பணியில்...

#இஸ்லாமிய_நல்லிணக்க_மையம் – INM ☪️🤝🕋
#சீர்காழி, #மயிலாடுதுறை மாவட்டம்
------------------------------














#இஸ்லாமிய_நல்லிணக்க_மையம்
#சமூக_நலப்பணியில்
#மருத்துவசேவை
#நற்பணி
#நல்லுள்ளங்கள்
#உள்_சிகிச்சை_பிரிவு
#நன்மைசெயல்
#மனிதநேயம்

அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்...
15/08/2025

அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்...

ஏக இறைவனின் திருப்பெயரால்..,இந்தியாவின் 79வது சுதந்திர தினத்தில் அனைத்து இந்தியர்களுக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துகள்...
15/08/2025

ஏக இறைவனின் திருப்பெயரால்..,

இந்தியாவின் 79வது சுதந்திர தினத்தில் அனைத்து இந்தியர்களுக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.

நமது தாய் நாடாம் இந்தியா, பிரித்தானிய ஏகாதிபத்தியத்தில் இருந்து, பலகட்ட போராட்டங்களின் மூலம் தன்னை விடுவித்துக் கொண்டு மதசார்பற்ற சனநாயக நாடாக மாறி தனது 79வது விடுதலை நாளைக் கொண்டாடும் இந்நாளில் அனைத்து இந்தியர்களுக்கும் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது விடுதலை நாள் வாழ்த்துக்களைக் கூறிக்கொள்கிறேன்.

இந்திய ஒன்றியத்தின் விடுதலைக்காக தங்களின் உத்திரங்களை உரமாக்கி, இன்னுயிரையும் ஈந்து, நாம் சுதந்திரக் காற்றை சுவாசிப்பதற்காகப் போராடிய நமது முன்னோர்களின் தியாகங்களை நினைவு கூறுவோம். அதே வேளையில், வேற்றுமையில் ஒற்றுமை எனும் நம் தேசத்தின் சிறப்பம்சத்தைக் காக்கவும், வாக்குத் திருட்டு, மதக் கலவரம் உள்ளிட்ட சனநாயக விரோத வழிகளைப் பின்பற்றி அதிகாரத்தைக் குறுக்கு வழியில் கைப்பற்றத் துடிக்கும் பாசிச கும்பலிடம் இருந்து இந்தியாவையும், அரசியல் சாசனத்தை பாதுகாக்க உறுதியேற்போம்.

செ. ஹைதர் அலி,
தலைவர்,
ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகம்.

04/07/2025

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

Address

Mayiladuthurai

Alerts

Be the first to know and let us send you an email when IMMK மயிலாடுதுறை மாவட்டம். posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to IMMK மயிலாடுதுறை மாவட்டம்.:

Share