20/05/2025
10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு முடித்த மாணவ மாணவியருக்கு அரசு சலுகையில் இசை மற்றும் நடன கலைகளை கற்றிட ஓர் அரிய வாய்ப்பு.
தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப்பல்கலைக் கழகம் அங்கீகாரம் பெற்ற, கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும், மதுரை தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரியில் 2025-2026 ம் கல்வி ஆண்டிற்கான மாணவ மாணவியர் சேர்க்கை நடைபெறுகிறது,
மூன்று ஆண்டுகளுக்கான பட்டயப்படிப்பு (DIPLOMA IN MUSIC)
1.குரலிசை
2.வயலின்
3.வீணை
4.புல்லாங்குழல்
5.மிருதங்கம்
6.பரதநாட்டியம்
7.நாதஸ்வரம்
8.தவில்
9.நாட்டுபுறக்கலை
போன்ற துறைகளுக்கு நடைபெற்று வருகிறது,
இதில் பயில விருப்பம் உள்ளவர்கள் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது,
வயது வரம்பு 30 வயதிற்குள் இருந்திட வேண்டும்,
மேலும் மூன்று ஆண்டுகளுக்கான பட்டப் படிப்பு(BA MUSIC)
1.குரலிசை
2.பரதம்
என்ற இரு துறைகளுக்கு நடைபெற்று வருகிறது,
இதில் பயில விரும்பம் உள்ளவர்கள் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், இதற்கு வயது வரம்பு இல்லை.
மேலும் பட்டயப்படிப்பு மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்காகவே ஒரு ஆண்டிற்கான இசை ஆசிரியர் பயிற்சியும் நடைபெற்று வருகிறது,
இதற்கான வயது வரம்பு 35 வயதிற்குள் இருந்திட வேண்டும்,
அது மட்டுமின்றி மாலை நேர இசைக் கல்லூரியில் இரண்டு ஆண்டுகள் சான்றிதழ் படிப்பாக
1.குரலிசை
2.வயலின்
3.வீணை
4.மிருதங்கம்
5.பரதநாட்டியம் போன்ற துறைகளுக்கான மாணவர் சேர்க்கையும் நடைபெற்று வருகிறது,
இதில் பயில விருப்பம் உள்ளவர்கள் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது, வயது வரம்பு ஏதும் இல்லை, மாலை நேர இசைக்கல்லூரியின் நேரம்
திங்கள் முதல் வெள்ளி வரை
மாலை 6.00 மணி முதல் 8.00 மணி வரை ஆகும்.
அது மட்டும் இன்றி ஒரு ஆண்டிற்கான பகுதி நேர நாட்டுப்புறக் கலை என்ற படிப்பில்
1.கரகம்
2.பறை இசை
3.மரக்கால்
4.இசை நாடகம்
போன்ற துறைகள் நடைபெற்று வருகிறது, இதற்கான கல்வி தகுதியாக 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது, 18 வயதிற்கு மேற்பட்டவராய் இருந்திட வேண்டும்,
இந்த பகுதி நேர நாட்டுபுற கலையானது வெள்ளி மற்றும் சனிக்கிழமை
மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை
நடைபெறுகிறது,
இது போன்ற இசை துறைகளில் சேர்ந்து பயில கீழ்கண்ட தொலைபேசி எண்களுக்கு அழைக்கவும்,
0452-2370861
9444400041
9025439217
9659180568
மேலும் www.artandculture.tn.gov.in என்ற இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம்,
நன்றிகள் மற்றும் வணக்கத்துடன்
முனைவர், சு.விஜய்ராகவன்
முதல்வர்
(அரசு இசைக்கல்லூரி,மதுரை)