T Ayyankottai - Madurai District

T Ayyankottai - Madurai District T.Ayyankottai, Thanichiyam Post, Vadipatti Taluk, Madurai-625221 Home village,

ஐயங்கோட்டை நகரி இடையே உள்ள கம்மாய் அருகில் மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் அய்யங்கோட்டை ஊராட்சி நிர்வாகம் அய்யங்க...
24/09/2025

ஐயங்கோட்டை நகரி இடையே உள்ள கம்மாய் அருகில் மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் அய்யங்கோட்டை ஊராட்சி நிர்வாகம் அய்யங்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் இருக்கும் குப்பைகளை சேமித்து கம்மாய்க்கு அருகில் கொட்டி தீ வைத்து வருகின்றனர் , இது சம்பந்தமாக அய்யங்கோட்டை சேர்ந்த சமூக ஆர்வலர் இலக்கியச் செல்வம் என்பவர் பலமுறை சுகாதாரத்துறை மற்றும் ஐயங்கோட்டை ஊராட்சி நிர்வாகத்தில் புகார் கொடுத்தும் அந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் இன்று 24 9 2025 ஐயங்கொட்டை சேர்ந்த சமூக நல இளைஞர்கள் ம.மருது, கார்த்திக் ராஜாங்கம் , விஜி, பைட்டர் சங்கையா, அபிதாஸ், மோ.அருண் ஆகியோர் ஒன்று சேர்ந்து ஐயங்கோட்டை ஊராட்சி நிர்வாகத்தால் கம்மாய்க்கு அருகில் கொட்டப்பட்ட கழிவுகளை சுத்தம் செய்து மரக்கன்றுகளை ஊண்டினர். இதற்கு பின்பும் ஐயங்கோட்டை ஊராட்சி நிர்வாகம் குப்பைகளை கொட்டினால் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிடுவோம்.

அய்யங்கோட்டை Kvb Bank back Side அய்யனார்புரம் பகுதிகள்
15/10/2023

அய்யங்கோட்டை Kvb Bank back Side அய்யனார்புரம் பகுதிகள்

15/10/2023

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டம் அய்யங்கோட்டை கிராமத்தில் உள்ள பள்ளத்து தெருவில் நடக்ககூட பாதை இல்லாமல் சாக்கடை நீரும் மழை நீரும் கலந்துள்ளது. அய்யன்கோட்டை ஊராட்சியின் அவல நிலை

15/10/2023

மதுரை மாவட்டம் அய்யங்கோட்டை சந்தான கிருஷ்ணா தியேட்டர் அருகில் உள்ள தெருக்களில் சாக்கடிநீருடன் மழை நீர் கலந்து சுமார் ஒரு அடி அளவிற்கு தேங்கியுள்ளது, இதனால் பாம்பு பூச்சிகள் வருவதால் மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். இது பற்றி ஐயங்கோட்டை ஊராட்சி மன்ற தலைவரிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.

04/10/2023
அனைவருக்கும் வணக்கம் ஊராட்சி நிர்வாகத்திற்கு வேண்டுகோள்   நெடுஞ்சாலையில் உள்ள கிளைச் சாலை  இரண்டு பக்கமும் உள்ள வீடு மற்...
28/06/2023

அனைவருக்கும் வணக்கம் ஊராட்சி நிர்வாகத்திற்கு வேண்டுகோள் நெடுஞ்சாலையில் உள்ள கிளைச் சாலை இரண்டு பக்கமும் உள்ள வீடு மற்றும் கடையில் உள்ள கழிவுநீர் சாலையில் கடந்து செல்கிறது அதை ஊராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை கூறியும் இதுவரை சரி செய்யவில்லை சரி செய்ய என்ன பிரச்சினை உள்ளது? கடந்த கிராம சபை கூட்டத்தில் திருமதி.வடிவு அவர்கள் தெரிவித்தது போல் ஏன் ஊராட்சி நிர்வாகம் இதுவரை அவர்களிடம் பேசி தண்ணீர் உருஞ்சு குழி அமைத்தால் என்ன அதற்கு தானே அரசு ஒரு குழி அமைப்பதற்கு 12000 ரூ மானியம் வழங்கப்படுகிறது விரைவில் முயற்சி செய்தால் நன்று நன்றி 🙏🏻

28/06/2023

மதுரை மாவட்டம் அய்யங்கோட்டை கிராம ஊராட்சியில் பல வருடங்களாக மக்கள் தண்ணீர் பற்றாக்குறை ஆனால் அவதிப்படுகிறார்கள். இதுகுறித்து ஐயங்கோட்டை கிராம ஊராட்சி மன்ற தலைவரிடம் முறையிட்டும் எந்த பயனும் இல்லாத காரணத்தினால் முதலமைச்சரின் தனி பிரிவிற்கு புகார் அளித்தோம், இதுகுறித்து ஐயங்கோட்டை கிராம பொதுமக்கள் முதலமைச்சரின் தனி பிரிவிற்கு ஒரு வருட காலமாக புகார் அளித்து வருகிறார்கள். ஒவ்வொரு முறையும் புகார் அளிக்கும் போது அலங்காநல்லூர் ஒன்றியத்திலிருந்து திருமதி முருகேஸ்வரி அவர்கள் ஐயங்கோட்டைக்கு வந்து பார்வையிட்டு புகார் அளித்த எந்தவித பிரச்சினைகளையும் சரி செய்யாமல் சரி செய்து விட்டோம் எனத் தவறான தகவல்களை அனுப்பி புகாரை நிறுத்தி விடுகிறார். இதைப்பற்றி மேல்முறையீடு செய்த பிறகு அலங்காநல்லூர் ஒன்றியத்தின் தலைவர் திரு பி டி ஓ பாண்டியன் அவர்கள் ஐயங்கோட்டை கிராம மக்களை சந்தித்து பிரச்சினைகளை கேட்டு அறிந்து சரி செய்து விடுவோம் என உறுதி அளித்து சென்றுள்ளார். ஐயங்கோட்டை கிராம மக்கள் அத்யாவசிய தேவைகளான தண்ணீர் சுகாதாரம் ஆகியவற்றிற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள்.

09/12/2022

முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களே , நடைபாதை உங்க வீட்டு சொத்து இல்லை . இது மக்களோட சொத்து

03/07/2021

இன்று காலை 9 மணி முதல் மின் பராமரிப்பு காரணமாக நமது அய்யங்கோட்டை மின் அலுவலகத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் மின் தடை ஏற்படும் எனவே பொது மக்கள் அனைவரும் தக்க ஏற்பாடு செய்து கொள்ளவும் 🙏

24/06/2020

கோவையில் தள்ளுவண்டி வைத்து பிழைத்து வரும் குடும்பத்தை,அடித்து,படிக்கும் சிறுவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று உள்ளனர்.

அத்துமீறலை வீடியோ எடுத்தவரை,"Video எடுக்கறயா போடா பு......... மவனே"என்று அடித்துள்ளார்

Address

Madurai

Telephone

04543293508

Website

Alerts

Be the first to know and let us send you an email when T Ayyankottai - Madurai District posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share