20/11/2021
CSC Olympiad 2.1
இது பள்ளி மாணவர்களுக்கான தேசிய அளவிலான போட்டித் தேர்வு. ஒரே வகுப்பில் உள்ள அனைத்து மாநில மாணவர்களும் இந்தத் தேர்வில் பங்கேற்பார்கள். இத்திட்டம் மாணவர்களை ஊக்குவித்து தேர்வுகளுக்கு அவர்களை தயார்படுத்தி மனதளவில் எந்த தேர்வாக இருந்தாலும் அவர்கள் உறுதியுடன் செயல்பட தயார் படுத்தும்.
மூன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவ மாணவிகளும் பாடவாரியாக அவர்களுடைய கல்வியை எளிதில் பயில்வதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. ஆங்கிலம், கணிதம், அறிவியல், இயற்பியல், வேதியல், உயிரியல் மற்றும் கணினி அறிவியல் போன்ற பாடங்களை மாணவர்களின் கல்வித் திட்டத்திற்கு ஏற்ப கற்க முடியும்.
📚 பதிவுக்கட்டணம் ஒரு பாடத்திற்கு 150 ரூபாய் மட்டுமே.
📚 டிசம்பர் 31 2021 ஆம் தேதி வரை பதிவு செய்யலாம்.
📚 மாணவர்கள் தனித்தனியாக ஒவ்வொரு பாடத்திற்கும் பதிவு செய்து கொள்ளலாம்.
📚 பதிவு செய்த அனைவருக்கும் ஜனவரி 10 2022 முதல் ஆன்லைன் தேர்வு நடைபெறும்.
📚 தேசிய அளவிலான தரவரிசை பட்டியலில் ஒவ்வொரு பாடத்திலும் முதல் மூன்று இடங்களை பெரும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்வில் தேசிய அளவிலான தரவரிசையில் முதல் மூன்று இடங்களை பிடித்த தமிழக மாணவர்களுக்கு மடிக்கணினி, டேப்லெட், கைபேசி பரிசாக வழங்கப்பட்டது. மேலும் அந்த மாணவர்கள் அவர்களுடைய ஆசிரியர்களுக்கும், பள்ளிக்கும், பெற்றோருக்கும், மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
மற்றும் 70% அதற்கும் அதிகமாக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு சிறந்த மாணவர்களுக்கான தகுதி சான்றிதழ்களும் மற்றும் 70% குறைவான மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பங்கு பெற்றதற்கான சான்றிதழ்களும் வழங்கப்படுகிறது.
CSC ஒலிம்பியாட் திட்டத்திலும் தேர்விலும் தங்களின் பள்ளி குழந்தைகளை சேர்ப்பதன் மூலம் அவர்களுடைய திறமையை தேசிய அளவில் வெளிப்படுத்த முடியும். பரிசுகளை வெல்லும் போது அவர்களை ஊக்குவிக்கும் மற்றும் தர வரிசையில் முன்னேறுவதற்கான உந்துதலாக இருக்கும்.
Online Application:
https://forms.gle/j5gsEcsA9xmAXRJPA
Click below for online payment to confirm CSC Olympiad registration:
https://www.instamojo.com//
For Bulk Registration:
Call 88833 33312, 9944022411
*FAQ*
1. ஒவ்வொரு தேர்விற்கும் மொத்த நேரம் எவ்வளவு?
ஒவ்வொரு தேர்விற்கும் ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
2. ஒவ்வொரு வகுப்பிற்கும் தேர்வுக்கான தேதி மற்றும் நேரம் என்ன?
தேதி மற்றும் நேரம் டிசம்பர் மாதத்தில் வெளியிடப்படும்.
3. தேர்வு எப்பொது தொடங்குகிறது?
CSC ஒலிம்பியாட் தேர்வு 2022ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி தொடங்கி 31ம் தேதி நிறைவடைகிறது.
4. மாணவர்களுக்கான தேர்வு கால அட்டவணை கிடைக்குமா?
டிசம்பர் 2021 மாதத்தில் வெளியிடப்படும்.
5. மெட்ரிக், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ மாணவர்களுக்கான பாடத்திட்டங்கள் வெவ்வேறாக இருக்கும் பட்சத்தில் தேர்வு வித்தியாசம் இருக்கிறதா?
அனைத்து மாணவர்களுக்கும் அந்தந்த வகுப்பு மற்றும் பாடம் சார்ந்த வினாக்கள் மட்டுமே கேட்கப்படும்.
6. பதிவு செய்த மாணவர்களுக்கு CSC அகாதெமியால் புத்தகங்கள் ஏதேனும் வழங்கப்படுகிறதா?
மாணவர்கள் தங்களுடைய யூசர் மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தி லாகின் செய்தால், அவர்கள் படிக்கின்ற வகுப்புகேற்ற பாடங்களை தேர்வு செய்து படிக்கலாம். ஆன்லைனில் அனைத்து வகுப்புக்கும் தனியாக பாடம் வாரியாக Notes மற்றும் Mock டெஸ்ட் மூலமாக படித்து தங்களை தயார் செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
7. வீட்டிருந்தே ஆன்லைனில் தேர்வை எழுதலாமா?
வெப்கேமரா மற்றும் தடையில்லாத இன்டெர்நெட் வசதி கொண்ட கம்ப்யூட்டரை கொண்டு வீட்டிலிருந்தே தேர்வை எழுதிக்கொள்ளலாம்.
8. மற்ற ஒலிம்பியாட் தேர்வுகளுக்கும் சிஎஸ்சி ஒலிம்பியாட் தேர்விற்கும் கட்டணத்தில் வித்தியாசம் உள்ளதா?
CSC Olympiad திட்டத்தில் ஒரு பாடத்திற்கு 150ரூபாய் மட்டுமே. மற்ற ஒலிம்பியாட்களில் ஒரு பாடத்திற்கு 300 முதல் 800 ரூபாய் வரை பெறப்படுகிறது.
9. CSC Olympiad யாரால் நடத்தப்படுகிறது?
கிராமப்புற மற்றும் நகர்ப்புற மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் CSC அகாதெமியால் நடத்தப்படுகிறது.
10. பதிவு கட்டணத்திற்கான ரசீது வழங்கப்படுகிறதா?
ஆம்.