Sundaraperumalkoil சுந்தர பெருமாள் கோயில்

  • Home
  • India
  • Kumbakonam
  • Sundaraperumalkoil சுந்தர பெருமாள் கோயில்

Sundaraperumalkoil சுந்தர பெருமாள் கோயில் சுந்தர பெருமாள் கோயில் உங்களை அன்புடன் வரவேற்கிறது Mini Buses also avl from Kumbakonam...

Are you a resident of Sundara Perumal Koil? once a resident?

சுந்தர பெருமாள் கோயில் (Sundara Perumal Koil) பசுமை வளங்கள் மிகவும் கொண்ட ஒரு அழகான கிராமம். கும்பகோணத்திலிருந்து தஞ்சை செல்லும் சாலையில் 9 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்தக் கிராமத்தில் சோழர்கள் காலத்தில் கட்டபட்ட ஸ்ரீ செளந்தராஜ பெருமாள் சன்னதி உள்ளதால் முதலில் அடையாளத்துக்காக‌ செளந்தராஜ பெருமாள் கோவில் என்று அழைக்கப்பட்டு அதுவே பின்னர் மருவி சுந்தரப்பெருமாள் கோவிலாக ஆகியிருக்க கூடும் என்றும் கருதப்ப

டுகிறது. சோழர் காலத்தில் சுந்தர சோழ விண்ணகரம் என்று வழங்கப்பட்ட இவ்வூர் இப்போது மருவி சுந்தர பெருமாள் கோவில் என்று வழங்கப்படுகிறது. மேலும் சோழர்கள் ஆட்சிகாலத்தில் தலைநகராக இருந்த பழையாறை இந்த ஊரிலிருந்து தென் கிழக்குத் திசையில் 8 கி.மீ தொலைவிலுள்ளது. இவ்வூரைச் சுற்றி தாராசுரம், பாபநாசம், சுவாமிமலை, பட்டீஸ்வரம் போன்ற பழமை வாய்ந்த பல கோவில்கள் உள்ளன.

இங்கு விவசாயம் முக்கிய தொழிலாகும். குறிப்பாக ரோஜா, மல்லிகை, கனகாம்பரம், முல்லை, சம்பங்கி, காக்கரட்டான் போன்ற‌ மலர்கள் உற்பத்தி அதிகமாக காணப்படுகிறது. மேலும் நெல் உற்பத்தியும் கணிசமான அளவில் நடைபெறுகிறது. இந்த ஊரை சுற்றிலும் காவிரி தன் கிளை ஆறுகளுடன் முடிகொண்டான், குடமுருட்டி, திருமலைராஜன், அரசலாறு, கொள்ளிடம் ஆகிய ஆறுகள் பாய்வதால் மிகவும் வளமாக காணப்படுகிறது. கோடைகாலத்தில் கூட தண்ணீர்ப் பஞ்சம் இருக்காத அளவுக்கு பசுமையான ஊராக உள்ளது. ஆற்றங்கரைகளில் கொண்டாடப்படும் ஆடிப்பதினெட்டுத்திருவிழா அந்த புதுமணப்பெண்கள் போல அழகு..
இந்த ஊரில் அரசு மருத்துவமனை, அரசு நூலகம்,இரண்டு தொடக்கப்பள்ளிகள்,ஒரு உயர்நிலைப்பள்ளி,கால்நடை மருத்துவமனை,வாகன வசதி,பேருந்து,புகைவண்டி நிலையம் என அனைத்து வசதிகளும் இருப்பதால் ஒரளவு தன்னிறைவடைந்து காணப்ப்படுகிறது.
- Sathish
Welcome to the God's Own Village!!!! Hi Friends, this is a cmnty for people those who are from Sundara Perumal Koil...

It's very Beautiful Village… Surrounding with very Greenish, flowers Odors, Rivers and historical several centuries old temple of the handsome Soundara Raja Perumal Temple...

It's 8 KM near from Kumbakonam….. Buses between Kumbakonam and Thanjavur stop near the railway level crossing at Sundara Perumal Koil ( about 2kms West of Swami Malai and 5kms East of Papanasam). future resident? your ancestors lived here? visited atleast once? then Welcome to the Sundara Perumal Koil community...

Discuss anything and everything about this beautiful place here....

For more details :
Sathish_d ([email protected])
https://www.facebook.com/sathish2701
http://wikimapia.org/5502623/Sundaraperumal-Kovil
Details abt sundaraperumalkoil schools :
http://www.schoolsworld.in/schools/showschool.php?school_id=33210703503
http://www.schoolsworld.in/schools/showschool.php?school_id=33210703504

15/06/2025
உங்கள் கிராமத்தில் தலைவர், வார்டு உறுப்பினர்கள், செயலாளர், மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி இயக்குபவர்கள், எலக்ட்ரீசியன், பி...
11/08/2024

உங்கள் கிராமத்தில் தலைவர், வார்டு உறுப்பினர்கள், செயலாளர், மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி இயக்குபவர்கள், எலக்ட்ரீசியன், பிளம்பர் போன்றோரின் பெயர்கள், கைப்பேசி எண்கள், குடிநீர் விநியோகத்தை கண்காணிக்கும் குழுக்கள், குடிநீர் தரம் பரிசோதிக்கும் மகளிர் குழுவின் பெயர்கள், கைப்பேசி எண்கள், கிராமத்தின் மக்கள் தொகை, எத்தனை வீடுகளில் குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது, எத்தனை அரசு அலுவலகங்களில், அங்கன்வாடிகளில், நியாயவிலை கட்டிடங்களில், பள்ளிகளில் குடிநீர் இணைப்பு, கழிவுநீர் வசதி செய்யப்பட்டுள்ளது, கிராமத்தில் எத்தனை போர்வெல் அரசு செலவில் அமைக்கப்பட்டுள்ளது, அதற்கான செலவுகள், எந்த ஆண்டு அமைக்கப்பட்டது, இயக்கத்தில் உள்ளதா இல்லையா, குடிநீர் பரிசோதனை எப்போது செய்யப்பட்டது, அதன் அறிக்கை போன்ற பல்வேறு தகவல்களை ஜல்சக்தி அமைச்சகத்தின் இணைப்பு வழியாக அறியலாம்.

Link:

'); docprint.document.close(); return false; } function kpress(ctrl) { if (event.keyCode == 9) { alert("Tab: " + ctrl.innerTEXT); } } function cclick(ctrl) { var n = ctrl.innerHTML.indexOf("/"); document.getElementById('CPHPage_txtvillname').value = ctrl.innerHTML.substring(0, n - 1); document.getEl...

சமூக வலைதளங்களில் ஊரின் சிறப்புகள்..மொபைல் போன், இன்டர்நெட் ஆதிக்கம் தொடங்கிய நாட்களில் (2007-2008களில்) எனக்கு ரொம்ப நா...
26/07/2024

சமூக வலைதளங்களில் ஊரின் சிறப்புகள்..

மொபைல் போன், இன்டர்நெட் ஆதிக்கம் தொடங்கிய நாட்களில் (2007-2008களில்) எனக்கு ரொம்ப நாளாக ஒரு ஆதங்கம் உண்டு. கூகுள் தேடு பொறியில் நமது ஊர் Sundaraperumalkoil சுந்தர பெருமாள் கோயில் பற்றி தேடினால், சென்னைக்கு அருகில் உள்ள சிங்க பெருமாள் கோயில் காட்டும். நானும் தேடு பொறியில் விதவிதமான சொற்களைப் போட்டு தேடினாலும் அந்த ஊரை பற்றிதான் நிறைய தகவல்கள் கிடைக்கும். நமது ஊரை பற்றி ஒன்றும் இருக்காது. முடிவில் ஏமாற்றமே மிஞ்சும்.

சரி.... இதை நாம்தான் சரிசெய்யவேண்டும் என்று முடிவு செய்து, அப்போது எடுத்த படங்களையும் ஊரைப்பற்றியும் தெரிந்தவரை பதிவேற்றினோம்.

பின் நாட்களில் அது ஃபேஸ்புக் குழுவாக வளர்ந்தது..

இப்போதைய இளம் வயதினர் மூலம் நமது ஊரை பற்றிய தகவல்கள் அனைத்து சமூக வலத்தளங்களிலும் (Socail Media) சிறப்பான முறையில் பகிர்ந்து வருவது பாராட்டுக்குரியது..

சான்றாக அண்மையில் நிகழ்ந்த கும்பாபிஷேக நிகழ்வுகள் உடனுக்குடன் பதிர்ந்தது.

இதோடு நிற்காமல், ஊரில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் மற்றும் மக்களின் தேவைகள் பற்றிய பதிவுகள் விவாதங்கள் பகிர்ந்து அனைவரும் பயன் பெற வேண்டும். நிறைய ஊரின் பிரச்சினைகள் சமூக தளங்கள் மூலம் தீர்வு ஏற்பட்டுள்ளது.

Address

Sundaraperumalkoil
Kumbakonam
614208

Alerts

Be the first to know and let us send you an email when Sundaraperumalkoil சுந்தர பெருமாள் கோயில் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Sundaraperumalkoil சுந்தர பெருமாள் கோயில்:

Share

Category