01/05/2026
மே தினம் #உழைப்பாளர்கள்_தினத்தை முன்னிட்டு #கம்பம் மஸ்ஜிதே அஜிஸியா பள்ளிவாசல் ஆட்டோ தொழிற்சங்கத்தின் சார்பாக இன்று #கொடியேற்றும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
SDTU தொழிற்சங்கத்தின் மாவட்டச் செயலாளர் P.அப்துல் வாஜிது அவர்கள் தலைமை தாங்கினார்.
இதில், SDTU தொழிற்சங்கத்தின் மாவட்ட பொருளாளர் அப்துல் காதர் ஜெய்லானி அவர்கள் தொழிற்சங்க கொடியினை ஏற்றி வைத்து சிறப்பித்தார், கிளை தலைவர் ஆட்டோ மைதீன் அவர்களும், உடன் SDTU தொழிற்சங்கத்தின் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு கொடியேற்றும் நிகழ்ச்சியை சிறப்பித்து தந்தனர்.
இந்நிகழ்ச்சியில், கட்சியின் கம்பம் சட்டமன்ற தொகுதி துணைத் தலைவர் T.முகமது தாஹா அவர்கள் சிறப்பான உரையாற்றினார்.
மேலும் இந்நிகழ்ச்சிக்கு, கட்சியின் சார்பாக தேனி மாவட்ட செயலாளர் S.தாவூத் நிஸார்.BBE, மாவட்ட செயற்குழு உறுப்பினர் Er.K.அப்பாஸ் மந்திரி, கம்பம் சட்டமன்றத் தொகுதி செயலாளர் M.சிராஜ்தீன், தொகுதி பொருளாளர் A.சம்சுல் ஹூதா ஆகியோர்களும் மற்றும், தொகுதி, நகர, கிளை, நிர்வாகிகள் செயல்வீரர்கள் என அனைவரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்து தந்து அனைவருக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
* #மழைக்காலத்திற்கு முன்பாக எறும்புகள் ஒற்றுமையோடு சாரை சாரையாக உணவை சேமிக்கும் பழக்கம் உண்டு அதைவிட மழை வெயில் காற்றடி
எந்த காலத்திலும் உழைப்பாளர் ஓய்வெடுப்பதில்லை,
உலகம் சுழல உழைப்பாளர்கள் அச்சாணி போன்று சுறுசுறுப்பாக இயங்கும் தொழிலாளர்களுக்கு #உழைப்பாளர்_தின #நல்வாழ்த்துக்களையும் SDTU மற்றும் SDPI கட்சியினர் தெரிவித்துக் கொண்டனர்.
இறுதியாக, SDPI கட்சியின் கம்பம் நகரச் செயலாளர் S.அப்துல் சலாம் உறுதிமொழி ஏற்க நிகழ்ச்சி நிறைவுற்றது.