17/07/2026
இருவழிச் சாலைக்கு சுங்கச்சாவடியா?
இது கட்டணமா... இல்லை பகல் கொள்ளையா?
வன்மையாக கண்டிக்கிறோம்!
நான்கு வழிச்சாலைகளுக்கு மட்டுமே சுங்கச்சாவடி என்ற அடிப்படை விதியை மீறி, தேனி - இருவழிச் சாலையில் (Theni Tollgate) சுங்கச்சாவடி அமைத்து சாமானிய மக்களிடம் ரூ.150 வரை கட்டணம் வசூலிப்பது எந்த விதத்தில் நியாயம்?
🛑 சாலை பராமரிப்பு இல்லை: நடுரோட்டில் குழாய்களைப் பதித்துவிட்டு, விபத்துகளை ஏற்படுத்தும் வகையில் குண்டும் குழியுமாக உள்ள சாலைக்கு எதற்கு சுங்கக்கட்டணம்?
🛑 விதிமீறல்: இரண்டு வழிச்சாலைக்கு சுங்கச்சாவடி அமைத்து மக்களின் பணத்தை உறிஞ்சும் இந்த பகல் கொள்ளையை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.
🛑 பொதுமக்களுக்கு சுமை: தினசரி வேலைக்குச் செல்லும் ஏழை, எளிய மக்களிடம் கட்டாய வசூல் வேட்டை நடத்துவது அரசாங்கத்தின் வழிப்பறியா?
தேனி மாவட்ட மக்களின் குரலாக
பாமக கம்பம் நகர செயலாளர்
#மாறன்