கடையநல்லூர் நகர தமுமுக.மமக-kadayanallur Tmmk.mmk

  • Home
  • India
  • Kadayanallur
  • கடையநல்லூர் நகர தமுமுக.மமக-kadayanallur Tmmk.mmk

கடையநல்லூர் நகர தமுமுக.மமக-kadayanallur Tmmk.mmk கடையநல்லூர் நகரம்
தமுமுக மமக

20/01/2024
13/01/2024

பிணை கிடைப்பதற்கு உதவிட்ட முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களிற்கும், அதற்கான முயற்சி செய்த தமுமுக தலைவர் பேரா.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. அவர்களிற்கும், கோவை மாவட்ட தமுமுக நிர்வாகிகள் மற்றும் எங்களிற்கு உதவி செய்த அனைவருக்கும் நன்றி.

- சிறைவாசி அப்துல் மஜீத் (எ) ஊமை பாபு

https://fb.watch/py7S9vnKjF/?mibextid=9R9pXO

13/01/2024

எங்கள் விடுதலைக்காக உத்தரவிட்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலன் அவர்களிற்கும்,எங்களது விடுதலைக்காக நீண்ட காலமாக போராடிய தமுமுக தலைவர் பேரா.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. அவர்களிற்கும் எனது நன்றி - சிறைவாசி நெட்டை இப்ராஹிம்

13/01/2024

சிறைவாசி குடும்பத்தார் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த காணொளி...

Dr. MH. Jawahirullah M. K. Stalin

12/01/2024

கோவை பாஷா பாய் அவர்களின் மகள் சகோதரி முபீனா அவர்கள் முதல்வர் அவர்களிற்கும்,தமுமுக தலைவர் பேரா.ஜவாஹிருல்லா மற்றும் தமுமுக நிர்வாகிகளிற்கு நன்றி தெரிவித்து குரல் பதிவு.

தாம்பரத்தில் அமைதியான முறையில் போராடிய மக்கள் மீது காவல்துறை அராஜகம் வன்மையாக கண்டிக்கத்தக்கது!மனிதநேய மக்கள் கட்சியின் ...
03/01/2024

தாம்பரத்தில் அமைதியான முறையில் போராடிய மக்கள் மீது காவல்துறை அராஜகம் வன்மையாக கண்டிக்கத்தக்கது!

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா MLA வெளியிடும் அறிக்கை:

தாம்பரம் சென்னை கிறிஸ்தவ கல்லூரியின் நடத்தும் சமூகக் கல்லூரியை மேயர் மற்றும் துணை மேயரின் ஒப்புதல் இல்லாமல் அத்துமீறி சீல் வைத்துடன் இது குறித்து மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் கேள்வி எழுப்பிய மனிதநேய மக்கள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் எம்.யாக்கூபை ஒருமையில் திட்டிய மாநகராட்சி ஆணையாளர் அழகு மீனாவை கண்டித்து இன்று மனிதநேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட தோழமை கட்சிகளின் சார்பில் ஆர்ப்பாட்டம் தாம்பரத்தில் நடைபெற்றது.

அமைதியான முறையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் வஞ்சக நெஞ்சத்துடன் காவல் துணை ஆணையாளர் பவன்குமார் தலைமையில் மிக மோசமான தடியடியை நடத்தி இருக்கிறார்கள். இதில் பல ஆண்கள் காயமடைந்துள்ளனர். போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்களும் தடியடிக்கு உட்பட்டுள்ளனர்.

அத்துமீறி நடந்து கொண்ட துணை ஆணையாளர் பவன் குமார் மீது உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறேன்.

தாம்பரம் ஆணையாளர் அழகு மீனா மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு முன் வரவேண்டும்.

கைது செய்யப்பட்டவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் எனும் கேட்டுக்கொள்கிறேன்.

எமது இந்த கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படாவிட்டால் எமது தலைமை நிர்வாகக் குழு அடுத்த கட்ட நடவடிக்கையை அறிவிக்கும்.

இப்படிக்கு
எம் எச் ஜவாஹிருல்லா MLA
தலைவர்,
மனிதநேய மக்கள் கட்சி

தாம்பரத்தில் அத்துமீறும் காவல்துறை..ஜனநாயக முறையில் போராடிய தோழர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறை.. கடையநல்லூர் நகரம...
03/01/2024

தாம்பரத்தில் அத்துமீறும் காவல்துறை..

ஜனநாயக முறையில் போராடிய தோழர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறை..

கடையநல்லூர் நகரம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக வன்மையான கண்டனங்கள்..

கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு மரியாதை செலுத்திய மமக தலைவர்!சென்னை தீவுத்திடலில், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர்...
29/12/2023

கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு மரியாதை செலுத்திய மமக தலைவர்!

சென்னை தீவுத்திடலில், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ அவர்கள் தேமுதிக தலைவர் கேப்டன் திரு. விஜயகாந்த் அவர்களின் உடலை பார்வையிட்டு, பிரேமலதா அம்மையர் மற்றும் குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் கூறினார்.

பின்பு செய்தியாளர் சந்திப்பில் டிசம்பர் 6, 1992 பாபர் பள்ளிவாசல் இடித்த போது அதை மிகப்பெரிய அளவில் கண்டனம் செய்தது மட்டுமல்ல, இடிக்கப்பட்ட இடத்திலே மீண்டும் பள்ளிவாசல் எழுப்பப்பட வேண்டும் என்று வெளிப்படையாகவே அறிவித்தவர் கேப்டன் விஜயகாந்த். மனிதநேய பண்பாடுகளை கடைபிடிக்கூடிய தலைவரை இழந்துவிட்டோம் எனக் கூறினார்.

இந்நிகழ்வில் மமக மாநில அமைப்பு செயலாளர் வழக்கறிஞர் புழல். ஷேக் முஹம்மது அலி மற்றும் மாவட்ட தலைவர் ரசுல், தாவூத் உள்ளட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


29/12/2023

வெளிநாடுகளில் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் கேட்கும் முன்பின் தெரியாத நபர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்.

29/12/2023
29/12/2023

Address

Kadayanallur

Website

Alerts

Be the first to know and let us send you an email when கடையநல்லூர் நகர தமுமுக.மமக-kadayanallur Tmmk.mmk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share