Dharapuram

Dharapuram Dharapuram (Tamil: தாராபுரம்) is a town and a Municipality in the Tirupur district of the South Indian state of Tamil Nadu. www.myDharapuram.com

Dharapuram , then known as Rajarajapuram was once the capital of the Kongu Nadu. தாராபுரம் - Dharapuram - Tiruppur Dist - Tamilnadu, India

follow us @ https://www.facebook.com/mydharapuram

குற்றத்தடுப்பிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.
30/05/2026

குற்றத்தடுப்பிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.

போதைப்பொருள் விழிப்புணர்வு!
30/05/2026

போதைப்பொருள் விழிப்புணர்வு!

போதைப்பொருள் விழிப்புணர்வு!

வாட்ஸ்அப்பில் புதிய Username வசதி!தொலைபேசி எண்னை பகிராமல் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளும் புதிய Username அம்சம் அறிமுகம்....
30/05/2026

வாட்ஸ்அப்பில் புதிய Username வசதி!

தொலைபேசி எண்னை பகிராமல் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளும் புதிய Username அம்சம் அறிமுகம்.

பயனர்கள் விருப்பமான தனித்துவமான Username பயன்படுத்தலாம்.

Username மூலம் தொடங்கும் உரையாடல்களில் தொலைபேசி எண் மற்றவர்களுக்குத் தெரியாது;eithikathir

பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்!
30/05/2026

பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்!

30/05/2026

வைகாசி விசாகம் - தாராபுரம் முருகன் கோவில்

CCTV காட்சி! அனைவருக்கும் பயனுள்ள வீடியோ! இந்தப் பாம்பு எப்படி நின்று பார்த்து உள்ளே வருது பாருங்க!
29/05/2026

CCTV காட்சி! அனைவருக்கும் பயனுள்ள வீடியோ! இந்தப் பாம்பு எப்படி நின்று பார்த்து உள்ளே வருது பாருங்க!

CCTV காட்சி! அனைவருக்கும் பயனுள்ள வீடியோ! இந்தப் பாம்பு எப்படி நின்று பார்த்து உள்ளே வருது பாருங்க! I am R. Sag...

முகநூலில் பதிவிட சுருக்கமான பதிவு:🏞️ திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் இன்று (29.05.2026) நீர்வரத்து பாதுகாப்பான அளவி...
29/05/2026

முகநூலில் பதிவிட சுருக்கமான பதிவு:

🏞️ திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் இன்று (29.05.2026) நீர்வரத்து பாதுகாப்பான அளவில் உள்ளது.

எனவே பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பஞ்சலிங்க அருவியில் நீராட அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இயற்கை எழிலுடன் குளிர்ச்சியான சூழலில் குடும்பத்தினருடன் சென்று மகிழுங்கள். சுற்றுச்சூழலை பாதுகாத்து, பாதுகாப்புடன் நீராடி மகிழுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

#திருமூர்த்திமலை #பஞ்சலிங்கஅருவி

🏞️ திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் இன்று (29.05.2026) நீர்வரத்து பாதுகாப்பான அளவில் உள்ளது.

எனவே பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பஞ்சலிங்க அருவியில் நீராட அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இயற்கை எழிலுடன் குளிர்ச்சியான சூழலில் குடும்பத்தினருடன் சென்று மகிழுங்கள். சுற்றுச்சூழலை பாதுகாத்து, பாதுகாப்புடன் நீராடி மகிழுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

#திருமூர்த்திமலை #பஞ்சலிங்கஅருவி

கோல்டன் ஹவரை தவற விடுவது ஹார்ட் அட்டாக்கில் ஆபத்தில் முடியும்.... ஹார்ட் அட்டாக் வந்தால் செய்ய வேண்டியது என்ன? Dr.அ.ப.ஃப...
29/05/2026

கோல்டன் ஹவரை
தவற விடுவது
ஹார்ட் அட்டாக்கில் ஆபத்தில் முடியும்....

ஹார்ட் அட்டாக்
வந்தால் செய்ய வேண்டியது என்ன?

Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை

இதயத்திற்கு ரத்த ஓட்டத்தை அளிக்கும் மூன்று முக்கிய தமனிகளில் அடைப்பு ஏற்படுவதை
இதய ரத்த நாள அடைப்பு ( MYOCARDIAL INFARCTION) என்கிறோம்

இதய ரத்த நாள அடைப்பு என்பது அவசர நிலையாகும்

ரத்த நாள அடைப்பு ஏற்பட்ட நொடியில் இருந்து அடைப்புக்குள்ளான அந்த குறிப்பிட்ட தமனியால் ஊட்டம் பெறும் இதயத்தின் தசைப்பகுதி செல்கள் வேகமாக இறக்க ஆரம்பிக்கின்றன.

நாம் இதை அவசர நிலையாகக் கருதி உடனடியாக ரத்த நாள அடைப்பை சரி செய்யாவிடில் இதயத்தின் பெரும்பகுதி தசைகள் இறந்து அதனால் இதயத்தின் ரத்தத்தை உந்தும் ஆற்றல் குறைந்து இதயம் செயலிழந்து மரணம் சம்பவிக்கும்.

அல்லது

காலம் முழுவதும் இறந்த இதயத் தசைகளை வைத்துக் கொண்டு செயல் குன்றிய இதயத்தை வைத்துக் கொண்டு வாழ வேண்டியிருக்கும்.

இடது பக்க நெஞ்சுப் பகுதியில்
உள்ளிருந்து குடைவதைப் போல
அதீத வலி ஏற்பட்டாலோ

இடப்பக்க நெஞ்சு வலி இடப்பக்க தோள் பகுதி வரை , தாடை வரை, இடப்பக்க நெஞ்சின் பின் பகுதி , கழுத்துப் பகுதி வரை வலி பரவலாம்

சில நேரங்களில் நெஞ்சுப்பகுதியில் வாயுக்குத்து போல வலி ஏற்படக்கூடும். வாந்தி குமட்டல் வயிற்று வலி என்று உணவினால் ஏற்படும் நச்சின் அறிகுறிகள் போலவும் தோன்றலாம்.

இவையன்றி
மூச்சு விடுவதில் சிரமம்

மூச்சுத் திணறல்

தலைசுற்றல் / பதட்டம் / படபடப்பு

முழுவதும் மயக்கமடைதல்
போன்ற அறிகுறிகளுடன் இதய ரத்த நாள அடைப்பு வெளிப்படக்கூடும்.

மேற்கூறிய அறிகுறிகள் தோன்றியவுடன் அவசர சிகிச்சை பிரிவிற்கு சென்று
ஈசிஜி எனும் இதயத்தின் மின்இயங்குவியல் வரை படத்தைப் பார்த்து இதய ரத்த நாள அடைப்பை கண்டறிய முடியும் .

எனினும் ஹார்ட் அட்டாக் வந்த சிலருக்கு ஈசிஜி நார்மலாக இருக்கும் . அறிகுறிகள் அனைத்தும் இதய ரத்த நாள அடைப்பை விளக்கும் விதமாக இருக்கும்.

இவர்களுக்கு ட்ரோபோனின்(TROPONIN) எனும் நொதியை அளக்கும் பரிசோதனை செய்யப்படும். இதயத்தின் தசைகள் காயத்துக்கு உள்ளாவதை ட்ரோபோனின் அதிகரிப்பை வைத்து அறிய முடியும்.

இதய ரத்த நாள அடைப்பு ஏற்பட்டிருப்பதை நவீன இதய மீட்பு சிகிச்சை வசதிகள் இல்லாத கிளினிக்குகள் / ஆரம்ப சுகாதார நிலையங்கள் போன்ற இடங்களில் கண்டறியப்படும் வாய்ப்பே அதிகம்

அதுவரை ரத்த நாள அடைப்பை கரைக்கும் வண்ணமாய் LOADING DOSE எனப்படும் ரத்த உறைதலை மட்டுப்படுத்தச் செய்யும்

ஆஸ்பிரின்(ASPIRIN) மாத்திரை 325 மில்லிகிராம் அளவு
+
க்ளோபிடோக்ரெல் (CLOPIDOGREL) 150 மில்லிகிராம் அளவு
+
அடோர்வாஸ்டாட்டின்(ATORVASTATIN) 80 மில்லிகிராம்
என்ற மூன்று மாத்திரைகளையும்
உட்கொள்ள வேண்டும்.
இந்த மாத்திரைகள் ரத்தக் கட்டியை மேலும் உறைந்து கட்டிப்படாமல் பார்த்துக் கொள்ளும்.

இதன் விளைவாக இதயத்தின் தசைகள் இறக்காமல் காத்திட முடியும்.

இதய ரத்த நாள அடைப்பு ஏற்பட்ட நொடியில் இருந்து முதல் மூன்று மணிநேரங்களுக்குள்( இன்னும் சொல்லப்போனால் ஒரு மணிநேரத்திற்குள் அடைவது சிறப்பு )நவீன இதய செயல் மீட்பு சிகிச்சை இருக்கும் மருத்துவமனையை அடைந்தால்

ரத்தக்கட்டியை கரைக்கும் மருந்தை (THROMBOLYSIS)
சிரை வழியாக செலுத்தி அடைப்பைக் கரைக்க முடியும்.
இது முதல் மூன்று மணிநேரங்களுக்குள் நவீன சிகிச்சை கிடைக்கும் ஐசியூ வசதி உள்ள மருத்துவமனைகளுக்கு சென்றால் மட்டுமே கிடைக்கும்.

ஸ்ட்ரெப்டோகைனேஸ்
ஆல்டெப்லேஸ்
டெனெக்டெப்லேஸ் போன்ற மருந்துகள் ரத்த கட்டியை கரைக்கும் தன்மையுடன் செயல்படும்.

அரசு மருத்துவக் கல்லூரிகள், அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகள் போன்றவற்றை மூன்று மணிநேரங்களுக்குள் அடைவது மூலம் ரத்த நாள அடைப்பை நீக்கும் THROMBOLYSIS சிகிச்சை பெற முடியும்

நவீன கேத் லேப் எனப்படும் இதய அவசர சிகிச்சை கிடைக்கும் மருத்துவமனைகளுக்கு செல்லும் போது
தோல் வழி கேதிட்டர் எனும் நெழிவுத்தன்மை கொண்ட குழாயை
சிரை வழியாக செலுத்தப்படும்.

இதயத்தின் அடைபட்ட ரத்த நாளத்திற்கு சென்றதும் இந்த கேதிட்டரின் முனையில் இருக்கும் பலூன் ஊதப்படும். இதனால் ரத்த நாள அடைப்பு எடுக்கப்படும். அங்கே ஸ்டெண்ட் எனும் எஃகினால் செய்யப்பட்ட கருவி பொருத்தப்படும்.
இந்த ஸ்டெண்ட்டில் இருந்து மேற்கொண்டு ரத்த கட்டியோ கொழுப்பு கட்டியோ உருவாகாத படி சிறிய அளவில் மருந்து உமிழப்பட்டுக் கொண்டே இருக்கும். இதை PRIMARY PERCUTANEOUS INTERVENTION என்று அழைக்கிறோம்

ஹார்ட் அட்டாக் வந்தால் முதல் மூன்று மணிநேரத்திற்குள் இதய அவசர சிகிச்சை செய்யத்தகுந்த மருத்துவமனையை அடைய வேண்டும். லோடிங் டோஸ் மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும்.

ஹார்ட் அட்டாக் மரணங்களில் பெரும்பான்மை மரணங்கள் சரியான நேரத்தில் சிகிச்சை எடுக்காததால் நிகழ்வதாகவே இருக்கின்றன

இதை கவனத்தில் கொண்டு உடனே செயல்படுவோம்
உயிர்களைக் காப்போம்

இதய ரத்த நாள அடைப்பு ஏற்பட்ட பின் இருக்கும் ஒவ்வொரு நொடியும் இன்றியமையாதது...
உயிரைக் காக்கும் தன்மையுடையது
தாமதமின்றி உடனே செயல்படுவோம்

உயிரைக் காப்போம்
நன்றி

Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை

Address

Dharapuram
638656

Alerts

Be the first to know and let us send you an email when Dharapuram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Dharapuram:

Share