02/05/2026
திமுகவின் கூட்டணிக் கட்சிகளின் புலம்பல்களும் சலம்பல்களும் அதிர்ப்திகளும் ஆவேசங்களும் சற்றும் பொருளற்றவை, பொதுமக்களால் புறக்கணிக்கப்பட வேண்டியவை. எள்ளி நகையாடத் தகுந்தவை. காரி உமிழ உகந்தவை.
அத்துனை விலைவாசி உயர்வின் போதும் வாய் பொத்திக் கொண்டிருந்தார்கள். அத்துனை பெண்கள் மீதான அத்துமீறல்களின் போதும் அசால்ட்டாய் பிரியாணி தின்றிவிட்டு பீடாவை போட்டுண்டு இருந்தாக. கள்ளச்சாராய மரணத்தின் போதும் கள்ள மௌனம் சாதித்தனர். 68 பிணம் எரிக்கப்பட்டபோதும் கொஞ்சம் கூட மனம் இறங்காமல், அரசை விமர்சிக்காமல், ஸ்டாலினின் மனம் கோணிவிடுமேன்னு கவலைப்பட்டார்கள்.
கஞ்சா போதைப்பொருள் என நாம் கத்திக் கொண்டிருந்த போதும், திமுகவுக்கு ஒத்தூதி பரிசில் பெறுவதையே பெருமையாய்க் கருதினர். திமுக ஆட்சியின் அத்துனை அவலங்களிலும் இந்தக் கேடுகெட்ட மதிமுக விசிக காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் சரிபங்குண்டு.
வலிமையாய்க் கண்டித்திருந்தால் ஆளுங்கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கும். அதீத கவனத்துடன் செயல்பட முயற்சியாவது செய்திருக்கும்.
2024 தேர்தல் முடிந்தவுடன் அளித்த பேட்டியில் கம்யூனிஸ்ட் தலைவர் பாலகிருஷ்ணன் சொன்னார், கூட்டணி உடைந்துவிடக் கூடாது என்பதற்காக சில பிரச்சினையின் போது வேண்டுமென்றே அமைதி காத்தோம் என. இப்படிப் பேசுவதற்கு அந்த மட்டரகமான ஆள் வெட்கப்படவேயில்லை. உண்மையான கம்யூனிஸ்ட் காரன் எவனாவது இப்படி பேசுவானா..?
இப்படி எல்லா சமரசத்திற்கும் உள்ளான கட்சிக்கு மக்கள் மத்தியில் மதிப்பிருக்குமா..? அப்படி மக்கள் மத்தியில் மதிப்பிழந்தக் கட்சிக்கு எந்தத் தலைமைக் கட்சியாவது சீட்டுக்களை உரிய அளவில் கொடுக்குமா..? அப்படி மதிப்பிழந்தக் கட்சிக்கு மரியாதை கிடைக்குமா..?
எங்கள் கட்சிக்கு திமுக மரியாதைக் கொடுக்கவில்லை என்கிறார் கம்யூனிஸ்ட் பாலகிச்சா. இந்த வெண்ணைக்கு எவன் மரியாதை கொடுப்பான்..? மரியாதைக் கொடுக்கிற அளவிலாடா நீங்க இருக்கீங்க..? உங்க 2021-26 கால செயல்பாடு இருந்துச்சி..?
2026 தேர்தலோடு, மதிமுக, கம்யூனிஸ்ட், விசிகவை புதைத்து விடுதல் நம் மண்ணுக்கு நல்லது.
ஆக மொத்தத்தில், கேவலம் பணத்திற்காக, நவ துவாரத்தையும் மூடிக்கொண்டு இருந்த இவைகளை, மொத்தமாய் முடித்துவிடுவார்கள் மக்கள்.
இந்த மூஞ்சிகளைப் பாருங்களேன், இந்த ஒருதலைபட்சப் போராளிகளின் மூஞ்சைப் பார்த்து, நல்ல மனுஷன் எவனாச்சும் ஓட்டுப் போடுவானான்னு நீங்களே ஒரு முறை உத்துப்பார்த்துட்டு சொல்லுங்க 😁😁😁
- தனாகுட்டி