Beautiful Coimbatore

Beautiful Coimbatore Coimbatore, situated on the banks of river Noyyal, is the Second largest city of Tamil Nadu. The cit

23/08/2017

In 2017, Sadhguru launched Rally for Rivers. It was supported by 162 million people & became India?

Lightning ⛈ B4 Rain ☔️
07/05/2017

Lightning ⛈ B4 Rain ☔️

06/03/2017
Isha Yoga Center is built on 100% Private Patta Lands.. Isha is generally known for Tree planting and have planted more ...
22/02/2017

Isha Yoga Center is built on 100% Private Patta Lands.. Isha is generally known for Tree planting and have planted more than 3 crore saplings !! Pranam

ஊடக நண்பர்களுக்கு,

ஈஷா யோகா மையம் முழுவதும் பட்டா நிலத்தில் கட்டப்பட்டுள்ள மையமாகும். காட்டிற்கு அருகாமையில் இருப்பதால் இந்த பட்டா நிலமும் காடுஆகிவிடாது. அப்படி காட்டை அழித்திருந்தால் மத்திய, மாநில அரசுகள் சுற்றுசூழலுக்கான உயர்ந்த விருதினை அளித்திருக்குமா??
3 கோடி மரங்கள் நட்டதற்கு நீங்கள் செய்யும் சிறப்பு இது தானா ? இனியாவது உண்மை அறிந்து பதிவிடுங்கள்.

நம்மாழ்வார் அய்யா அவர்களின் பகிர்தல்:___________________________________________பத்து ஆண்டுகளாக எனக்கும் ஈஷாவுக்கும் தொட...
22/02/2017

நம்மாழ்வார் அய்யா அவர்களின் பகிர்தல்:
___________________________________________
பத்து ஆண்டுகளாக எனக்கும் ஈஷாவுக்கும் தொடர்பு என்று சொல்வது பொருத்தமாக இருக்காது.

பத்து ஆண்டுகளாக நான் ஈஷாவில் கரைந்துகொண்டு இருப்பதை உணர்கிறேன். ஆன்மீகத்தின் மீது பற்றுகொண்டவர்களைப் பார்த்திருக்கிறேன்.
அதற்கு விளக்கம் அளிப்பவர்களையும் பார்த்திருக்கிறேன்.

ஆனால், ஆன்மீகத்தை சக்தியின் வெளிப்பாடாக சத்குருவிடம்தான் உணர்ந்தேன்!

ஐந்தாறு கிலோ மீட்டர் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய பிறகும் உடல் களைப்படையவில்லை.
குருவைப் பார்ப்பதற்கு முன்பு எதிராஜூலு, ஞான செல்வம், தர்மராஜூ என்று மூன்று சீடர்களைச் சந்தித்தேன். எனது பணி சிறக்க, என்னை மேலும் வலிமை வந்தடைய, யோகா முழுமைப் பயிற்சிக்கு அனுப்பிவைத்தார்கள்.

அதுவே வாழ்வில் ஒரு திருப்புமுனையாகவும் அமைந்தது!
எனக்குக் கொடுத்த படிவத்தில், ‘எதற்காக இப்பயிற்சிக்கு வந்தாய்?” என்ற கேள்விக்கு இயற்கை உழவாண்மை, சுற்றுச்சூழல் காப்பு இவை இரண்டிலும் ஈடுபாடு கொண்டுள்ளேன். இவற்றை மேலும் வலுவாகவும் விரிவாகவும் செய்வதற்கு எனக்கு வலிமை சேர்ப்பதற்காக வந்திருக்கிறேன் என்று எழுதியிருந்தேன்.

தொடக்க நாள் முதலே சத்குருவின் கனிவான கண்காணிப்புக்கு ஆளானேன்!
‘குருவில்லா வித்தை பாழ்’ என்பது அவ்வை மொழி. யோகா என்பது கம்பி வளைப்பது போல, உடம்பை முறுக்குவது அல்ல. உடலை, மனதை, உள்ளத்தைப் பக்குவப்படுத்தி மனிதரை முழுமையாக்குவது என்பதை அறிமுக உரையிலேயே குரு உணர்த்தினார். தன்னார்வத் தொண்டர்கள் சத்துள்ள இயற்கை உணவை அளித்தனர். யோக ஆசிரியர்கள் உடலை வளைத்து, மடக்கி, யோகாசனப் பயிற்சியும் (ஹட யோகம்) மூச்சுப் பயிற்சியும் அளித்தார்கள், அவை இன்னும் என்னுடன் வருகின்றன. ஐந்தாறு கிலோ மீட்டர் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய பிறகும் உடல் களைப்படையவில்லை.

சத்குருவோடு விளையாடிக்கொண்டு இருந்தோம். அந்த நினைவு வரும்போதெல்லாம் இப்போதும் என்னுள் வியப்பு மேல் எழும்புகிறது.
ஈஷா பயிற்சியில் அடிப்படையானது தன்னை அறிதல்தான். இது என் உடம்பு, இது என் தலை என்று சொல்லும்போது, ‘நான் என்பது என் உடம்பு இல்லை’ என்ற புரிதலை குரு உணர்த்தினார். எனக்கு மகிழ்ச்சியைத் தருவது, எனக்கு முன்னால் இருப்பவை அல்ல; எனக்கு உள்ளேயே இருப்பவை. இதை விளக்குவதற்கு சத்குரு ஒரு கதையையும் சொன்னார்…

ஒரு வீட்டில் ஒரு குடும்பம் வசித்தது. இரண்டு படுக்கை அறை, படிப்பறை, சமையலறை, உணவறை, வரவேற்பறை, கழிவறையுடன் கூடிய மாடி வீடு அது. பெற்றோர் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாகத்தான் இருந்தார்கள். எது வரை இந்த மகிழ்ச்சி? பக்கத்தில் ஒருவர் வீடு கட்டி புதுமனை புகுவிழா நடத்தும் வரை!
சமூகப் பிரச்னைகளில் இருந்து ஆன்மீகம் தனித்திருக்க முடியாது என்று அறிவித்து கிராமப்புற வாழ்க்கையில் புத்துணர்வு ஏற்படுத்துவதில் ஈடுபாட்டை சத்குரு ஏற்படுத்தினார்.
புதுமனை புகுவிழா அழைப்பும் வந்தது. அங்கு போனபோதுதான் தெரிந்தது. அவர்கள் மூன்று படுக்கை அறை உள்ள வீடு கட்டியுள்ளார்கள். அதோடு மகிழ்ச்சி தொலைந்தது. மறு நாளே கடனை, உடனை வாங்கி கொத்தனாரைப் பிடித்து மேல்பகுதியை இடித்து மூன்றாவது படுக்கை அறையையும் கட்டினார்கள். அந்தோ பரிதாபம்? அஸ்திவாரம் புது நிலைக்கேற்ப அமைக்கவில்லை. ஆதலால் முழு வீடும் இடிந்து சரிந்தது.
இது பொழுதுபோக்குக்குச் சொன்னதல்லை. மனிதர்கள் அடிப்படையில் செய்ய வேண்டியதை ஒதுக்கி வைத்துவிட்டு ஆசைகளை மட்டுமே வளர்த்துக்கொண்டு போகும்போது தன்னைத்தானே அழித்துக்கொள்கிறார்கள். மகிழ்ச்சி என்பது உள்ளத்துள் எழுவது. பொருள் சேகரித்துக் குவிப்பதாலோ, அதனை நுகர்வதாலோ வருவது அல்ல என்ற புரிதல் வந்ததும் விரிந்து பரந்த உலகம் நமதாகிவிடுகிறது.

சத்குருவின் உறவில், உரையாடலில், எழுத்துக்களில் இந்தத் தெளிவைப் பெறுகிறோம். ஈஷாவின் தொண்டர்கள், நிர்வாகிகள், துறவிகள், யோக ஆசிரியர்கள், குழந்தைகளுடன் பழகும் போதெல்லாம் இதை உணர்கிறேன். எங்கு போனாலும் உணவு, உறைவிடம், உபசரிப்பு, எங்கெங்கும் ஆனந்தம்.

கடந்த காலம் இனி வரப் போவது இல்லை! எதிர்காலம் என்பது கனவு! எப்படி இருக்கப் போகிறது என்று எவராலும் கணிக்க முடியாதது நிகழ்காலம். அதாவது, இந்தக் கணம் நம் கையில், இந்தக் கணத்தில் வாழப் பழகுவோம். விழிப்போடும் ஆனந்தத்தோடும் ஒவ்வொரு கணமும்!
சமூகப் பிரச்னைகளில் இருந்து ஆன்மீகம் தனித்திருக்க முடியாது என்று அறிவித்து கிராமப்புற வாழ்க்கையில் புத்துணர்வு ஏற்படுத்துவதில் ஈடுபாட்டை சத்குரு ஏற்படுத்தினார்.

பாலை நிலத்தில்கூட பனைமரம் நிற்கும் என்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் பனைமரமே காய்ந்து போகிறதே! அப்படியானால் தண்ணீர் சிக்கல்தான் இங்கு தலையாய சிக்கல். இதற்குத் தீர்வு மரம் நடுவதுதான். தமிழ்நாட்டின் கால் பகுதியை காடாக்குவோம் என்று சொல்லி, ‘அடுத்த பத்து ஆண்டுகள் 12 கோடி மரங்கள் நடுவோம்’ என்று அறிவித்தவர்,

முதலாவதாக மனிதர் மனங்களில் மரம் நடச் சொன்னார்.
‘என்ன, 12 கோடி என்பது மிகப் பெரிதாகத் தெரிகிறதா? இதைக் கேளுங்க! தமிழ்நாட்டின் மக்கள் தொகை 6 கோடி! ஆளுக்கு 2 மரக்கன்று நட்டுப் பாதுகாத்தால், 12 கோடி. ஒவ்வொருவரும் தனக்கொரு மரம் நடவேண்டும். நாட்டுக்கு ஒரு மரம் நடவேண்டும்!’ என எளிதாக்கினார்.
மரம் நட ஆரம்பித்த முதலாண்டில் ஒரே நாளில் 8 லட்சம் மரக்கன்றுகள் நடுவது என்று ஈஷாவில் முடிவு எடுத்தபோது, பள்ளி மாணவர், கல்லூரி மாணவர், உழவர், தொண்டர்களோடு இணைந்து பணியாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

சென்னையில் நடந்த அதன் முடிவு விழாவில் மல்லிகைப் பூமாலையை (மிகுநேர்த்தியாகத் தொடுக்கப்பட்டது) சத்குரு எனக்கு அணிவித்தார். உள்ளம் சிலிர்த்தது. கூடவே சத்குரு சொன்னார், ‘‘இது கடையில் வாங்கியது இல்லை. ஈஷா மையத்திலேயே தொடுத்துக் கொண்டு வந்தது’’. என் இதயத்தில் சத்குரு வலுவாக ஒரு இடம் பற்றிக்கொண்டார்.

சத்குரு என்றொரு பிரமாண்டம் !தமிழ்நாட்டின் அறிவு சீவிகள் பலரும் சத்குருவை எதிர்த்து பதிவிடும் புத்திசாலித்தனமான பதிவுகளை ...
22/02/2017

சத்குரு என்றொரு பிரமாண்டம் !

தமிழ்நாட்டின் அறிவு சீவிகள் பலரும் சத்குருவை எதிர்த்து பதிவிடும் புத்திசாலித்தனமான பதிவுகளை பார்க்க நேரும்போது,

இத்தனை நாளும் இந்த மாதிரியான ஆட்களைதான் அறிவாளிகள் என்று நம்பிவந்த என் மடத்தனம் குறித்து வியந்து போகிறேன்.

கடந்த 16 ஆண்டுகளாக நான் சத்குருவின் பயிற்சி களை தொடரும் எளிய சாதகன்

அவர் மீது கல்லெரியும் எல்லா நபர்களும் தங்களது சொந்த அனுபவமற்ற copy - paste கதைகளையே பகிர்கிறார்கள்.
அந்த பதிவுகளின் பின்னால் உள்ள பொறாமையும் எரிச்சலையும் உணர முடிகிறது.

குறிப்பாக தி்க ஆதரவாளர்கள், புரட்சியாளர்கள் என்று தங்களை அடையாளப்படுத்தும் நபர்கள்.

இந்திய புரட்சி என்ற எப்போதுமே நடக்காத பெருங்கனவை ஊதிப்பெறுக்கி ஏராளமான இளைஞர் களின் கனவை அழித்தவர்கள்.( இது பற்றி தனியாக எழுத வேண்டும்.)

திராவிடத்தின் பெயரால் நாட்டை கொள்ளையடிப்பவர்களுக்கு சொம்பு தூக்குகிறவர்கள் தான் சத்குருவுக்கு எதிராக கருத்துகளை துப்புகிறார்கள்.

இந்த ஆன்மீக மரபு
வழி வழியே இது போன்ற முட்டாள்தனங்களுக்கு எதிராகவே வளர்ந்து வருகிறது.

இராமகிருஷ்ணர்
விவேகானந்தர்
இராமலிங்கர்
இரமணமகரிஷி
பகவான் ஓஷோ என தூற்றுதலுக்கும் , வழக்குகளுக்கும் ஆளானார்கள்.

உதாரணமாக ஒரு விசயம் .
திராவிடர் கழகத்தின் ஒரு துண்டு பிரசுரம்.
இரமணமகரிஷி அவர்களின் ஆசிரமத்தில் உள்ள பிரச்சனைகளை குழப்பியது பற்றியது.
அவர் உறவினர்கள் ஆசிரம பெறுப்புக்கு வந்த்து குறித்த கேள்வி எழுப்புவார்கள்
இப்பொழுது அந்த கேள்வியை திராவிட இயக்கங்கள் மீதே எழுப்ப முடியும்.
வாரிசு , குடும்ப ஆதிக்கம் அற்ற ஒரு இயக்கம் உண்டா இங்கே .?

ஆன்மீக மரபை இங்கே திடமாக கட்டியமைப்பதுதான் சத்குரு தன்னுடைய பணியாக கொண்டிருக்கிறார்.

இந்தியாவின் நான்கு திசைகளிலும் ஆதியோகியின் திருமுகம் எழும். அப்போதும் கோபம் கொள்ள உங்களை தயாராக வைத்திருங்கள்.

தமிழ் அறிவு சீவிகள் .
தங்கள் உடல்பற்றியோ , மனம் பற்றியோ எள்ளவும் புரிதல் அற்ற வர்கள் என்பதை அவர்களின் பதிவுகளே உணர்த்தும்.
வள்ளலார் பற்றிய ஒரு பதிவும் , பின்னர் குடிப்பதில் உள்ள மகத்துவம் பற்றி யும் இவர்களால் பதிவு செய்ய முடிகிறது.
அறிவாறிகளின் உலகம் குடிகளாலும் , குட்டிகளாலும் ஆனது. அது பலரும் நம்புகிற குடியின்றி அமையாது அவர்களது உலகம்.

உடனே குடிப்பதற்கு எனக்கு உரிமை இல்லையா ,
அது என் உரிமை என்ற முழக்கம் வரும்.

அறிவாளிகள் என்படுவேர் அறத்திற்கு எதிர் நிலையே கைக்கொள்கிறார்கள்

ஈஷா யோக பற்றிய வினவு ,அறிவுச்சுடர் ஆதிசா போன்றவர்கள் வைக்கும் குற்றச்சாட்டுகள் , பழைய கஞ்சி .
எத்தனை நாள் இதையே ஆற்றூவீர்கள் ..

எவ்வளவு முறை பதில் தருவார்கள் ????

எல்லாவற்றையும் விட மோடி எதிர்ப்பாளர்கள், இப்போது ஈஷா எதிர் பாளர்களும் கை கோர்த்துக் கொள்வது. வரலாற்றில் ஒரு அழகு.

ஒன்று மட்டும் சொல்ல விழைகிறேன்.

அறிவையும,எதிர்ப்பதையும் தாண்டி இந்த வாழ்க்கை இயங்குகிறது.

அது ஜல்லிக்கட்டோ,
அரசியலோ,
ஆன்மீகமோ
ஈஷா க்கள் எல்லாதளங்களிலும் இயங்குவார்கள்

ஒன்று நீங்கள் அவர்களை எதிர்க்கலாம் அல்லது அவர்களோடு பயிற்சி பெற லாம்
இரண்டுக்கும் இடையே நடு நிலை தமிழகத்தில் இனி சாத்தியமில்லை.

ஆதியோகியின் வருகை மூடுண்ட மனங்களில் சுடரை ஏற்றும் .

கோவிந்தராஜ் சுப்பிரமணியன்.

10/02/2017

Massive Earthquakes in Coimbatore !

சட்ட கல்லூரி மாணவர்கள்...வக்கீல்கள் இவங்க எல்லாம் சேர்ந்து ஏன் காவல்துறையின் மீது வழக்கு தொடுக்க கூடாது? - வீரேந்திர சேவ...
25/01/2017

சட்ட கல்லூரி மாணவர்கள்...வக்கீல்கள் இவங்க எல்லாம் சேர்ந்து ஏன் காவல்துறையின் மீது வழக்கு தொடுக்க கூடாது? - வீரேந்திர சேவாக்

Let's take a pledge
25/01/2017

Let's take a pledge

23/01/2017
21/01/2017
21/01/2017

Address

Coimbatore
641024

Website

Alerts

Be the first to know and let us send you an email when Beautiful Coimbatore posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Beautiful Coimbatore:

Share