Perumbakkam E Rajasekar MLA

Perumbakkam E Rajasekar MLA செய்யூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்,
கழக புரட்சித் தலைவி பேரவை துணைச் செயலாளர்,
பரங்கிமலை தெற்கு ஒன்றியக் கழகச் செயலாளர்.

செய்யூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்
புரட்சித் தலைவி அம்மா பேரவை மாநில துணைச்செயலாளர்

அதிமுகவின் தஞ்சை கிழக்கு மாவட்ட வர்த்தக அணி இணைச் செயலாளர், கழகத்தின் தீவிர விசுவாசி திரு. பூக்கடை மகேந்திரன் அவர்கள்,  ...
02/06/2026

அதிமுகவின் தஞ்சை கிழக்கு மாவட்ட வர்த்தக அணி இணைச் செயலாளர், கழகத்தின் தீவிர விசுவாசி திரு. பூக்கடை மகேந்திரன் அவர்கள், தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.
​இந்தத் துயரச் சம்பவத்தை முன்னிட்டு, இன்று செய்யூர் தொகுதி, பாவஞ்சூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக, மறைந்த மகேந்திரன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து, கழக நிர்வாகிகளுடன் இணைந்து எனது கண்ணீர் அஞ்சலியைச் செலுத்தினேன்.
​கழகம் மீண்டும் ஒன்றிணைய வேண்டும், மாண்புமிகு பொதுச்செயலாளர் அண்ணன் எடப்பாடியார் அவர்கள் மீண்டும் முதலமைச்சராக வேண்டும் என்ற அவரது பற்று மெய்சிலிர்க்க வைக்கிறது. அவரது இறுதி ஆசையை நிறைவேற்றும் விதமாக, நமது பொதுச்செயலாளர் அவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியதோடு, அவரது குடும்பத்திற்கு நிதியுதவியும், குழந்தையின் முழு கல்விச் செலவையும் ஏற்பதாக அறிவித்துள்ளது பெரும் ஆறுதல் அளிக்கிறது.
​செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையிலும், உங்களில் ஒருவனாக, ஒரு கழகத் தொண்டனாகவும் இந்த இழப்பை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மகேந்திரனின் மறைவு கழகத்திற்குப் பேரிழப்பாகும்.
​என் அருமை கழகத் தொண்டர்களுக்கு ஒரு கனிவான வேண்டுகோள்:
தேர்தல் தோல்விகளோ, தற்காலிக பின்னடைவுகளோ நிரந்தரமல்ல. நாம் நிச்சயம் மீண்டும் வீறுகொண்டு எழுவோம். அதைக்கண்டு கொண்டாட நீங்கள் உயிருடன் இருக்க வேண்டும். தொண்டர்கள் தான் இந்த மாபெரும் இயக்கத்தின் ஆணிவேர். தயவுசெய்து யாரும் இதுபோன்ற விபரீத முடிவுகளை எடுக்க வேண்டாம் என இருகரம் கூப்பிக் கேட்டுக்கொள்கிறேன்.
​உயிரிழந்த சகோதரர் மகேந்திரனின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

செழிக்கட்டும் செய்யூர்.

என்றும் மக்கள் பணியில்,
பெரும்பாக்கம் எ. ராஜசேகர்
செய்யூர் சட்டமன்ற உறுப்பினர்
கழக அம்மா பேரவை துணை செயலாளர்
பரங்கிமலை தெற்கு ஒன்றிய கழக செயலாளர்

தியாகத்தின் திருநாள்... ஈகையின் பெருநாள்!"​அன்பிற்கும், சகோதரத்துவத்திற்கும் இலக்கணமாகத் திகழும் இஸ்லாமியப் பெருமக்கள் அ...
28/05/2026

தியாகத்தின் திருநாள்... ஈகையின் பெருநாள்!"
​அன்பிற்கும், சகோதரத்துவத்திற்கும் இலக்கணமாகத் திகழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் மனமார்ந்த பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகள்!
​இந்த தியாகத் திருநாளில் வேற்றுமைகள் அனைத்தும் நீங்கி, நம்மிடையே ஒற்றுமை தழைத்தோங்கட்டும். அனைவர் வாழ்விலும் ஈகையும், அன்பும், வளமும் பெருகட்டும்.

செழிக்கட்டும் செய்யூர்.

என்றும் மக்கள் பணியில்,
பெரும்பாக்கம் எ. ராஜசேகர்
செய்யூர் சட்டமன்ற உறுப்பினர்
கழக அம்மா பேரவை துணை செயலாளர்
பரங்கிமலை தெற்கு ஒன்றிய கழக செயலாளர்

திருக்கழுக்குன்றம் தெற்கு ஒன்றியம்விட்டிலாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ரேணுகா பரமேஸ்வரி அம்மன், ஸ்ரீ செல்...
26/05/2026

திருக்கழுக்குன்றம் தெற்கு ஒன்றியம்
விட்டிலாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ரேணுகா பரமேஸ்வரி அம்மன், ஸ்ரீ செல்வ விநாயகர் மற்றும் ஸ்ரீ கெங்கையம்மன் ஆலயத் திருவிழா.

சித்தாமூர் கிழக்கு ஒன்றியம்
சூனாம்பேடு கிராமத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ ஆதி விநாயகர், ஸ்ரீ கெங்கச்சியம்மன், ஸ்ரீ வராஹி அம்மன், ஸ்ரீ காத்தவராய சுவாமி மற்றும் ஸ்ரீ நாகராஜர் ஆலயத் திருவிழா.
வெள்ளங்கொண்ட அகரம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத் திருவிழா.
இந்த இரு ஒன்றியங்களுக்கும் உட்பட்ட கிராமங்களில் வெகு விமரிசையாக நடைபெற்ற இந்தச் சிறப்புமிக்க ஆன்மீக விழாக்களில் செய்யூர் சட்டமன்ற உறுப்பினராக கலந்துகொண்டதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்

செழிக்கட்டும் செய்யூர்.

என்றும் மக்கள் பணியில்,
பெரும்பாக்கம் எ. ராஜசேகர்
செய்யூர் சட்டமன்ற உறுப்பினர்
கழக அம்மா பேரவை துணை செயலாளர்
பரங்கிமலை தெற்கு ஒன்றிய கழக செயலாளர்

இலத்தூர் மேற்கு ஒன்றியம் - பரமண்கேணி ஊராட்சி மற்றும் திருக்கழுக்குன்றம் தெற்கு ஒன்றியம் - ஆயப்பாக்கம் ஊராட்சி ஆகிய இரு ப...
24/05/2026

இலத்தூர் மேற்கு ஒன்றியம் - பரமண்கேணி ஊராட்சி மற்றும் திருக்கழுக்குன்றம் தெற்கு ஒன்றியம் - ஆயப்பாக்கம் ஊராட்சி ஆகிய இரு பகுதிகளில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிகளில், வெற்றி வாகை சூடிய வீரர்களுக்குக் கோப்பைகளையும், பரிசுகளையும் வழங்கி கௌரவித்ததில் பெருமகிழ்ச்சி.
களத்தில் துடிப்புடன் விளையாடிய அனைத்து இளைஞர்களுக்கும், எனது மனமார்ந்த வாழ்த்துகள்! உங்கள் விளையாட்டுப் பயணம் மென்மேலும் சிறப்பாகத் தொடர வாழ்த்துகிறேன்

செழிக்கட்டும் செய்யூர்.

என்றும் மக்கள் பணியில்,
பெரும்பாக்கம் எ. ராஜசேகர்
செய்யூர் சட்டமன்ற உறுப்பினர்
கழக அம்மா பேரவை துணை செயலாளர்
பரங்கிமலை கிழக்கு ஒன்றிய கழக செயலாளர்

ேற்று (21-05-2026, வியாழக்கிழமை) அரசூர் கிராமத்தில் கோலாகலமாக நடைபெற்ற ஸ்ரீ பொன்னியம்மன் மற்றும் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆ...
22/05/2026

ேற்று (21-05-2026, வியாழக்கிழமை) அரசூர் கிராமத்தில் கோலாகலமாக நடைபெற்ற ஸ்ரீ பொன்னியம்மன் மற்றும் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய 66-ஆம் ஆண்டு ரத உற்சவத்தில் கலந்து கொண்டதில் நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.
காலை 10.00 மணியளவில், அம்மன் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளிய திருத்தேரின் வடம் பிடித்து இழுத்து, ஊர் பொதுமக்களோடு இணைந்து வழிபட்டது மனதிற்கு மிகுந்த நிறைவையும் அமைதியையும் அளித்தது.

செழிக்கட்டும் செய்யூர்.

என்றும் மக்கள் பணியில்,
பெரும்பாக்கம் எ. ராஜசேகர்
செய்யூர் சட்டமன்ற உறுப்பினர்
கழக அம்மா பேரவை துணை செயலாளர்
பரங்கிமலை கிழக்கு ஒன்றிய கழக செயலாளர்

இதயதெய்வம் பொன்மனச்செம்மல் மற்றும் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடனும், இருபெரும் தலைவர்கள் உருவாக்...
18/05/2026

இதயதெய்வம் பொன்மனச்செம்மல் மற்றும் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடனும், இருபெரும் தலைவர்கள் உருவாக்கிய மாபெரும் மக்கள் இயக்கமான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் அண்ணன் எடப்பாடியார் அவர்களின் ஆசியுடனும், இலத்தூர் கிழக்கு ஒன்றியம், செய்யூரில் நடைபெற்ற நன்றி அறிவிப்பு நிகழ்வில் கழக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுடன் கலந்து கொண்ட தருணங்கள்.

தேர்தல் காலம் முழுவதும் இரவு பகல் பாராமல் உழைத்த அனைத்து கழக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் மக்கள் பெருமக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்கள் அளித்த அன்பும் ஆதரவும் என்றும் மறக்க முடியாத ஒன்று.

உங்கள் நலனுக்காக என்றும் உண்மையுடன், உங்களில் ஒருவனாக நன்றியுடன் இருப்பேன் என உறுதியளிக்கிறேன்.

செழிக்கட்டும் செய்யூர்.

என்றும் மக்கள் பணியில்,
பெரும்பாக்கம் எ. ராஜசேகர்
செய்யூர் சட்டமன்ற உறுப்பினர்
கழக அம்மா பேரவை துணை செயலாளர்
பரங்கிமலை கிழக்கு ஒன்றிய கழக செயலாளர்

இதயதெய்வம் பொன்மனச்செம்மல் மற்றும் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடனும், இருபெரும் தலைவர்கள் உருவாக்...
15/05/2026

இதயதெய்வம் பொன்மனச்செம்மல் மற்றும் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அருளாசியுடனும், இருபெரும் தலைவர்கள் உருவாக்கிய மாபெரும் மக்கள் இயக்கமான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் அண்ணன் எடப்பாடியார் அவர்களின் ஆசியுடனும், லத்தூர் மேற்கு ஒன்றியம், செய்யூரில் நடைபெற்ற நன்றி அறிவிப்பு நிகழ்வில் கழக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுடன் கலந்து கொண்ட தருணங்கள்.

தேர்தல் காலம் முழுவதும் இரவு பகல் பாராமல் உழைத்த அனைத்து கழக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் மக்கள் பெருமக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்கள் அளித்த அன்பும் ஆதரவும் என்றும் மறக்க முடியாத ஒன்று.

உங்கள் நலனுக்காக என்றும் உண்மையுடன், உங்களில் ஒருவனாக நன்றியுடன் இருப்பேன் என உறுதியளிக்கிறேன்.

செழிக்கட்டும் செய்யூர்.

என்றும் மக்கள் பணியில்,
பெரும்பாக்கம் ஈ. ராஜசேகர்
செய்யூர் சட்டமன்ற உறுப்பினர்
கழக அம்மா பேரவை துணை செயலாளர்
பரங்கிமலை கிழக்கு ஒன்றிய கழக செயலாளர்

11/05/2026

உங்களில் ஒருவனாக மக்கள் பணி ஆற்றுவேன் என உறுதியளிக்கிறேன்

Address

Cheyyar
604407

Website

Alerts

Be the first to know and let us send you an email when Perumbakkam E Rajasekar MLA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share