தமிழக சமத்துவ மக்கள் கட்சி tsmk

  • Home
  • India
  • Chennai
  • தமிழக சமத்துவ மக்கள் கட்சி tsmk

தமிழக சமத்துவ மக்கள் கட்சி  tsmk Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from தமிழக சமத்துவ மக்கள் கட்சி tsmk, Political Party, Chennai.

  ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல் போராடிய வ.உ.சிதம்பரனார் தேசத்துரோகக் குற்றம்சாட்டப்பட்டு சிறையில...
05/09/2026

ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல் போராடிய வ.உ.சிதம்பரனார் தேசத்துரோகக் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கோவைச் சிறையில் செக்கிழுத்த கொடுமையை அனுபவித்த போதிலும், அவரது தேசப்பற்று சிறிதும் குலையவில்லை.

செக்கிழுத்த செம்மல்" என்று மக்களால் போற்றப்பட்ட அவர், சிறையிலிருந்து வெளிவந்த பின்னேயும் வறுமையின் பிடியில் தான் வாழ்ந்தார். தன் சொந்த நலனுக்காக எவர் முன்பும் குனிந்து கொடுக்காத அவரது நிமிர்ந்த நடை, தமிழர்களின் அடிமனதில் என்றென்றும் நீங்கா இடம் பிடித்துள்ளது.அவரது பிறந்த நாளில்
தமிழக சமத்துவ மக்கள் கட்சி ​பெருமிதம் கொள்கிறது. Chief Minister of Tamil Nadu தமிழக சமத்துவ மக்கள் கட்சி tsmk #கப்பலோட்டிய #தமிழன் #வரலாறு

  அதிகரித்து வரும் சுங்கக் கட்டணத்தை உடனடியாக குறைக்க வேண்டும்!தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் –தமிழக சமத்துவ...
04/09/2026

அதிகரித்து வரும் சுங்கக் கட்டணத்தை உடனடியாக குறைக்க வேண்டும்!
தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் –
தமிழக சமத்துவ மக்கள் கட்சி

சென்னை செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடி முதல் திருநெல்வேலி வரை சுமார் 625 கிலோமீட்டர் தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்யும் வாகனங்களிடம் வசூலிக்கப்படும் அதிகப்படியான சுங்கக் கட்டணம் பொதுமக்களையும், வாகன உரிமையாளர்களையும், குறிப்பாக கனரக வாகன உரிமையாளர்களையும் கடுமையாக பாதித்து வருகிறது.

சென்னை முதல் திருநெல்வேலி வரையிலான இந்த நீண்ட தூரப் பயணத்தில் சுமார் 12 சுங்கச்சாவடிகள் அமைந்துள்ளன. தற்போதைய சுங்கக் கட்டண முறையில் நான்கு சக்கர வாகனங்களுக்கு 625 கிலோமீட்டர் பயணத்திற்கு சுமார் ₹1,120 வரை சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை இருப்பதாகக் கூறப்படுகிறது. அதேபோல், அதிக அச்சுகள் கொண்ட கனரக வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் மேலும் பல மடங்கு அதிகரித்து, சுமார் ₹3,195 வரை செலுத்த வேண்டிய நிலை உள்ளது.

இவ்வாறு சுங்கக் கட்டணம் தொடர்ந்து அதிகரித்து வருவது வாகன உரிமையாளர்களுக்கு மட்டுமல்லாமல், பொதுமக்களுக்கும் மிகப்பெரிய பொருளாதாரச் சுமையை ஏற்படுத்துகிறது. குறிப்பாக லாரி, கனரக சரக்கு வாகனங்கள் போன்றவை தினசரி பல்வேறு சுங்கச்சாவடிகளை கடந்து செல்ல வேண்டியிருப்பதால், சுங்கக் கட்டணமே அவர்களின் இயக்கச் செலவில் கணிசமான பங்காக மாறியுள்ளது. தமிழக அரசு மத்திய அரசை வழியுறுத்திடவேண்டும. Chief Minister of Tamil Nadu தமிழக சமத்துவ மக்கள் கட்சி tsmk #நெடுச்சாலைதுறை

  இந்தத் தேசிய விளையாட்டு தினத்தில், தமிழகத்தின் ஒவ்வொரு இளைஞரும் தங்களுக்குப் பிடித்தமான விளையாட்டில் கவனம் செலுத்தி, ம...
29/08/2026

இந்தத் தேசிய விளையாட்டு தினத்தில், தமிழகத்தின் ஒவ்வொரு இளைஞரும் தங்களுக்குப் பிடித்தமான விளையாட்டில் கவனம் செலுத்தி, மாநிலத்திற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்க முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். தடகளப் பாதைகளிலும், விளையாட்டு அரங்கங்களிலும் வெற்றிக் கொடி நாட்டும் அனைத்து தமிழக வீரர்களுக்கும் தமிழக சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் உளமார்ந்த வாழ்த்துக்களை உரித்தாக்குகிறோம். உங்கள் சாதனைகள் தொடரட்டும்; வாழ்க நமது வீரர்களின் வைராக்கியம்! Chief Minister of Tamil Nadu. Dinamalar - World's No 1 Tamil News Website

சமத்துவத்தின் கலரும் கொடியும்.
26/08/2026

சமத்துவத்தின் கலரும் கொடியும்.

22/08/2026
21/08/2026

தமிழகம் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினரின் ஆடியோ பதிவாக உள்ளது.

பெரும்பான்மையான {தவேக} சட்டமன்ற உறுப்பினர்களுடைய மனநிலை இதுவே முதலில் தங்களுடைய மனநிலைகளை மாற்றி மக்களுக்கான பணிகளை செய்வதை மட்டுமே குறிகளாக கொண்டு உருவாக்கிட தமிழக முதல்வர் தனக்கு கீழ் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களை தனியாக ஒழுங்கினங்களை கற்றுகொடுக்க வகுப்பு எடுக்க வேண்டும்@. Chief Minister of Tamil Nadu. தமிழக சமத்துவ மக்கள் கட்சி. Tamil Nadu Police. K.A Sengottaiyan. Thol.Thirumavalavan

18/08/2026

தஞ்சையில் நேற்று சாலை மறியலில் ஈடுபட்ட விசிக நபர்களால் தன்னுடைய பணிக்கு செல்வதில் தாமதம் ஏற்படுவதை தட்டி கேட்டதால் அங்கே பாதுகாப்பு நின்ற காவலருக்கும் ஆகாஷ் அவருக்கும் மேற்பட்ட வாக்குவாதத்தில் காவலர்கள் தனி ஒரு மனிதரை மிகவும் அபாயகரமான முறையில் கையாள்வதும் கண்டிக்கத்தக்கது அவரின் மேல் போட்டு உள்ள வழக்குகளை தமிழக அரசு மிகவும் கருணை அடிப்படையில் கையாள வேண்டுமென கேட்டுக்கொள்ளபடுகின்றது. Chief Minister of Tamil Nadu Tamil Nadu Police. தமிழக சமத்துவ மக்கள் கட்சி tsmk

  இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் தனது இறுதி மூச்சு வரை சமரசம் செய்து கொள்ளாமல் போராடிய உன்னதத் தலைவர், தியாகத்தின் ...
18/08/2026

இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் தனது இறுதி மூச்சு வரை சமரசம் செய்து கொள்ளாமல் போராடிய உன்னதத் தலைவர், தியாகத்தின் திருவுருவம், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் நினைவு நாளில், தமிழக சமத்துவ மக்கள் கட்சியின் சார்பாக எமது வீரவணக்கத்தைச் சமர்ப்பிக்கிறோம். தமிழக சமத்துவ மக்கள் கட்சி tsmk. Chief Minister of Tamil Nadu

  சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இந்தியா சுதந்திரத்தின் 80 ஆண்டு விழாவை கொண்டாடும் விதமாக தேசிய கொடியை ஏற்றி மரியாதை செ...
15/08/2026

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இந்தியா சுதந்திரத்தின் 80 ஆண்டு விழாவை கொண்டாடும் விதமாக தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்திய பொழுது. தமிழக சமத்துவ மக்கள் கட்சி tsmk

  இந்திய திருநாடு தனது 80-வது சுதந்திர தினத்தை  கோலாகலமாகக் கொண்டாடிவரும் இந்த இனிய வேளையில், தியாகத் தழும்புகளையும், சு...
15/08/2026

இந்திய திருநாடு தனது 80-வது சுதந்திர தினத்தை கோலாகலமாகக் கொண்டாடிவரும் இந்த இனிய வேளையில், தியாகத் தழும்புகளையும், சுதந்திரப் போராட்ட வீரர்களின் உத்வேகத்தையும் நாம் நெஞ்சில் ஏந்திப் போற்றுவோம்.

தேசத்தின் பன்முகத்தன்மையையும், ஜனநாயகக் கோட்பாடுகளையும் நிலைநிறுத்தும் இத்தருணத்தில்,

தமிழக சமத்துவ மக்கள் கட்சி சார்பில் நாட்டு மக்கள் அனைவருக்கும் எமது நெஞ்சம் நிறைந்த சுதந்திர தினம் நல்வாழ்த்துக்களை உரித்தாக்குகிறோம்.

இசிஆர்.ராஜ் மாநிலதலைவர் தமிழக சமத்துவ மக்கள் கட்சி tsmk. Chief Minister of Tamil Nadu.

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when தமிழக சமத்துவ மக்கள் கட்சி tsmk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share