04/09/2026
ராணிப்பேட்டை மாவட்டம் வானாபடி அருகே காஞ்சனகிரி மலை அடிவாரத்தில் 'ஏ.கே. டயர்ஸ்' என்ற பழைய டயர்களை உருக்கும் ஆலை ஒன்று இயங்கி வருகிறது . இது முகுந்தராயபுரம் தி.மு.க ஊராட்சி மன்றத் தலைவர் ஏ.கே. முருகனுக்குச் சொந்தமான ஆலை. இந்த ஆலையால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாகக் கூறி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதும், பின்னர் அதிகாரிகள் சீல் வைத்துச் சீரமைக்கப்பட்ட பிறகு மீண்டும் இயங்கி வருகிறது. இதனை தான் மூட வேண்டும் என்று ராணிப்பேட்டை எம்எல்ஏ தாஹிரா கூறினார். அப்படி குறிப்பிடும் போது தவறுதலாக ஜேகே டயர்ஸ் என்று கூறிவிட்டார்.