07/07/2017
அசாம் : வெள்ளப் பாதிப்பால் 19 பேர் பலி
கவுகாத்தி, ஜூலை 07 (டி.என்.எஸ்) அசாமில் பலத்த மழை காரணமாக, பெரும்பாலான இடங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அசாம் முதல்வர் சர்பானந்த சோனாவால் வெள்ளம் பாதித்த இடங்களை பார்வையிட்டார். பாதிக்கப்பட்டவர்களுக்காக 128 முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன.