09/05/2026
TNSJ & RUC அதிகாரப்பூர்வ கண்டன அறிக்கை
“இந்தியா அனைவருக்கும் சமம்: ஆர்.எஸ்.எஸ் - பிஜேபி-யின் அராஜகப் புல்டோசர் அரசியலைத் தடுத்து.
• பிஜேபி ஆட்சியில் திட்டமிட்டு நடத்தப்படும் அநீதிகள்:
• டெல்லி (மங்கோல்புரி): மே 7, 2026 அன்று பிஜேபி கட்டுப்பாட்டில் உள்ள டி.டி.ஏ (DDA) மூலம் 100 ஆண்டுகள் பழமையான ‘பாஞ்ச் பீரான் தர்கா’ இடிக்கப்பட்டுள்ளது.
• லக்னோ (அஸ்தி கிராமம்): ஏப்ரல் 3, 2026 அன்று யோகி ஆதித்யநாத் தலைமையிலான பிஜேபி அரசு, சுமார் 60 ஆண்டுகள் பழமையான மசூதியை புல்டோசர் கொண்டு தரைமட்டமாக்கியுள்ளது.
• சம்பல் (உபி): மார்ச் 14, 2026 அன்று மசூதி மற்றும் தர்காவை அகற்ற உத்தரவிட்டு, மசூதி நிர்வாகத்திற்கு 6.9 கோடி ரூபாய் அபராதம் விதித்து நிதி ரீதியான ஒடுக்குமுறையை பிஜேபி அரசு ஏவியுள்ளது.
• லக்னோ (அலிஜான் மசூதி): ஏப்ரல் 10, 2026 அன்று ஜும்மா தொழுகையின் போது காவல்துறை புகுந்து மைக் ஒயர்களைத் துண்டித்து மத உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளது.
• மேற்கு வங்காளம்: மே 4, 2026 தேர்தல் முடிவுகளில் பிஜேபி வெற்றி பெற்ற அடுத்த சில மணிநேரங்களிலேயே, இந்துத்துவ அமைப்புகளின் தூண்டுதலால் சிறுபான்மையினரின் கடைகள் மற்றும் குடியிருப்புகள் இடிக்கப்படுவது கண்டிக்கத்தக்கது.
வரலாற்று உண்மையும் எங்களது எச்சரிக்கையும்:
மன்னிப்பு கடிதம் எழுதிய பரம்பரை அல்ல: இந்த நாடு சுதந்திரத்திற்காகப் போராடியபோது, வெள்ளைக்காரர்களிடம் ஆறு முறை மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு, இன்று நாட்டைப் பிரிக்கும் “இந்துத்துவ” சித்தாந்தத்தைப் பேசுபவர்கள் எங்களைக் கேள்வி கேட்க முடியாது! நாங்கள் இந்த மண்ணின் விடுதலைக்காகத் தங்கள் இரத்தத்தைச் சிந்திய தியாகிகளின் வழிவந்தவர்கள்.
அதிகார துஷ்பிரயோகம்: ஆட்சி அதிகாரம் கையில் இருக்கிறது என்பதற்காக ஆர்.எஸ்.எஸ் - பிஜேபி கூட்டணி மேற்கொள்ளும் இந்த “புல்டோசர் கலாச்சாரம்” சட்டத்தின் ஆட்சிக்கு எதிரானது. இந்தியா என்பது இங்கு வாழும் அனைவருக்கும் சரிசமமான நாடு.
ஜனநாயகப் போராட்டம்: சிறுபான்மையினரை இரண்டாம் தரக் குடிமக்களாக மாற்ற நினைக்கும் இந்தச் செயல்கள் நிறுத்தப்படாவிட்டால், தமிழகம் உள்ளிட்ட இந்தியா முழுவதும் மாபெரும் ஜனநாயகப் போராட்டங்கள் வெடிக்கும்.
“புல்டோசர் அரசியல் ஒருபோதும் சட்டத்திற்கு மேலானது அல்ல. மதவாத அரசியலை விடுத்து, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மதித்து நடந்திடுக!”
இப்படிக்கு,
ஜனாப் ஏ. அக்ரம் கான்
மாநில பொதுச்செயலாளர் - தமிழ்நாடு சுன்னத் ஜமாத் (TNSJ)
மாநிலத் தலைவர் - ராஷ்டிரிய உலமா கவுன்சில் (RUC)