BJP VELU

BJP VELU வாழ்க பாரதம்! வளர்க தமிழ்!
பாஜக கடம்பத்தூர் கிழக்கு ஒன்றிய பொது செயலாளர்.
உழைத்திடு உயர்ந்திடு உருவாக்கிடு💪

22/01/2026

சன் செய்தி மற்றும் கலைஞர் செய்தி இந்த காணொளியையும் அன்றும் இன்றும் என பதிவிட தயாரா

23/12/2025
பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் மரியாதைக்குரிய திரு.  அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்த...
02/12/2025

பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் மரியாதைக்குரிய திரு. அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்கள் தீர்க்கமான தலைமைப் பண்பு மூலம் நம் பாரதிய ஜனதா கட்சியை வழிநடத்தி நாடெங்கும் இருக்கும் நம் காரிய கர்த்தாக்களுக்கு நீங்கள் ஊக்கமாய் நிற்கிறீர்கள்.

நம் பாரதத்தின் முன்னேற்றப் பயணத்தில் தொடர்ந்து உங்கள் சேவை அமைய இறைவன் அருள் புரிய வேண்டிக்கொள்கிறேன்.

பயன்படுத்திக்கொள்ளுங்கள்.முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம்:-இத்திட்டத்தில் பயன்பெறத் தேவையான தகுதிகள்இத்தி...
27/11/2025

பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம்:-

இத்திட்டத்தில் பயன்பெறத் தேவையான தகுதிகள்

இத்திட்டத்தில் சேர குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1,20,000/-க்கும் குறைவாக இருத்தல் வேண்டும். கிராம நிர்வாக அலுவலரிடம் வருமானச் சான்று பெற்று குடும்ப அட்டை மற்றும் ஆதார் அடையாள அட்டையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அட்டை வழங்கும் மையத்திற்கு சென்று முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டை பெற்றுக் கொள்ளலாம்.

₹1,20,000 - ஆண்டுக்கு
(அரசாணை(நிலை) எண்.560 மருத்துவம் – மக்கள் நல்வாழ்வுத்துறை (அஉதி1-1) நாள்:16.12.2021)

1. வருமானச் சான்றிதழ் பெறவும்

கிராம நிர்வாக அலுவலரிடம் வருமானச் சான்று பெறவும் (Annual family income must be less than ₹1,20,000/-)

2. தேவையான ஆவணங்களை சேகரிக்கவும்

குடும்ப அட்டை மற்றும் ஆதார் அடையாள அட்டையை சேகரிக்கவும் (Family card and Aadhaar identity card)

3. மாவட்ட அலுவலகத்திற்கு செல்லவும்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அட்டை வழங்கும் மையத்திற்கு செல்லவும் (Visit the card issuing center at District Collector's office)

4. உங்கள் அட்டையைப் பெறவும்

உங்கள் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டையைப் பெற்றுக் கொள்ளவும் (Collect your CMCHIS Card)
குடும்பம் மற்றும் குடும்பத்தினரின் தகுதி விளக்கம்

Family & Family Members Eligibility Explanation கீழே கொடுக்கப்பட்டுள்ளது

1. தகுதியுடைய நபரின் சட்டப்பூர்வமான மனைவி/கணவர்

Legal wife/husband of the eligible person

2. தகுதியுடைய நபரின் குழந்தைகள்

Children of the eligible person

3. தகுதியுடைய நபரை சார்ந்த பெற்றோர்கள்

Parents who are dependent on the eligible person

முக்கிய குறிப்பு:

மேலே கொடுக்கப்பட்டுள்ள நபர்களின் பெயர்கள் குடும்ப அட்டையில் இடம்பெற்றிருத்தல் வேண்டும்.

(Names must be included in the family card)

06/11/2025

விதைத்தது தான் முளைக்குமே தவிர...

விரும்பியதெல்லாம் முளைக்காது ...

பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக பூத்தில் நியமிக்கப்பட்டிருக்கும் BLA - 2 அனைவருக்கும் வணக்கம்...இன்றிலிருந்து உங்கள் பகுதி...
04/11/2025

பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக பூத்தில் நியமிக்கப்பட்டிருக்கும் BLA - 2 அனைவருக்கும் வணக்கம்...

இன்றிலிருந்து உங்கள் பகுதியில் பொது மக்களுக்கு நீங்கள் தான் பாரத பிரதமர் திரு நரேந்திரமோடி அவர்களின் பிரதிநிதி
கட்சியிலும் உங்களுக்கு தான்
அதிக முக்கியத்துவம்...

BLA-2 வாக தேர்தல் ஆணையத்துடன் இணைந்து மக்கள் பணியாற்றும் வாய்ப்பு பாரதிய ஜனதா கட்சிகள் உங்களுக்கு கிடைத்ததில் எங்கள் ஒவ்வொருவரும் பெருமை கொள்ள வேண்டும் ...

சிறப்பு வாக்காளர் திருத்தம் என்பது பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவது என்பது வழக்கமான ஒன்றுதான் என்றாலும் சிலர் அதனை எதிர்க்கத்தான் செய்கிறார்கள் ...
மக்கள் பணி செய்யும் தாங்கள் சிறப்பு வாக்காளர் திருத்தம் சம்பந்தமாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கொடுத்த விளக்கத்தினை முழுமையாக தெரிந்து கொண்டோமானால் பொதுமக்கள் தங்களிடம் கேட்கும் கேள்விகளுக்கு தங்களால் உரிய விளக்கத்தினை சரியாக கூற முடியும்...

ஆகவே....

தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப்பணி குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், அவர்கள் அளித்த விளக்கத்தை முழுமையாக படிக்கவும்....

கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு

கேள்வி- சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப்பணி எதற்கு செய்யபடுகிறது?

பதில்: இரண்டு விஷயங்கள் தான்.
ஒன்று தகுதியான எந்த வாக்காளரும் பட்டியலில் இருந்து விடுபடக்கூடாது. இரண்டாவது தகுதியற்றவர்கள் யாரும் பட்டியலில் இருக்கக்கூடாது. தகுதியற்றவர்கள் என்றால் இறந்தவர்கள், நிரந்தரமாக தமிழகத்தை விட்டு வெளியே சென்றவர்கள். இரட்டை பதிவு இருப்பவர்கள்.

கேள்வி:- இந்த பணியின் தொடக்கம் என்ன?

பதில்:- சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப்பணிக்காக வாக்காளர் பெயர். வாக்காளர் அடையாள அட்டை எண், புகைப்படம் அச்சடிக்கப்பட்ட வாக்காளர் கணக்கெடுப்பு படிவத்தை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்கள் வீடு, வீடாக 4-ந் தேதி முதல் வந்து கொடுப்பார்கள். இதுதான் தொடக்கப் பணி. அந்த படிவத்தில் கேட்கப்பட்டு இருக்கும் தகவலை பொது மக்கள் நிரப்பி தரவேண்டும். அதனுடன் எந்த ஆவணமும் இணைத்து தர தேவையில்லை.

ஆய்வு

கேள்வி: அந்த படிவத்தில் என்ன கேட்கப்பட்டு இருக்கும்?

அந்த படிவம் தற்போதைய வாக்காளர் பட்டியலில் உள்ள தகவல்கள் அடிப்படையில் வழங்கப்பட்டு இருக்கும். வாக்காளர் பெற்றோர் வாக்காளர் எண் ஆகியவற்றை நிரப்ப வேண்டும். தேவைப்படுபவர்கள் தங்களது புதிய புகைப்படத்தை ஒட்டி தரலாம்.

கேள்வி:- அந்த படிவத்தை பெறும் வாக்குச்சாவடி அலுவலர்கள் என்ன செய்வார்கள்?.

பதில்- அந்த படிவத்தை பெற்றுக் கொண்டு அதில் உள்ள தகவலை சரி பார்த்து, அதற்காக வடிவமைக்கப்பட்டு உள்ள செயலியில் அவர்கள் பதிவேற்றம் செய்வார்கள் எளிதாக இந்த பணியை செய்ய 'கியூ.ஆர். கோடு வசதியும் உள்ளது. அந்த வாக்காளரின் பெயர், அடையாள அட்டை எண் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு 2002 மற்றும் 2005 வாக்காளர் பட்டியலில் சரி பார்க்கப்படும். அந்தாண்டுகளுக்கு பிறகு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தவர்கள், தங்களது பெற்றோரின் வாக்காளர் பட்டியலின் எண் மூலம் ஆய்வு செய்து இணைக்கப்படும்.

ஆவணங்கள்:

கேள்வி: ஒருவேளை 2002, 2005 ஆண்டு பட்டியலில் அவர்கள் பெயர்கள் இல்லாவிட்டால் என்ன நடக்கும்?

பதில்: அவர்கள் பெயர் வேறு எந்த தொகுதியில் அதற்கு முன்பு இருந்தது என்பதை ஆய்வு செய்து, அதனுடன் ஒப்பிட்டு இணைக்கப்படும். ஒருவேளை அவர்கள் பெயர் இல்லாவிட்டால் அவர்களது பெற்றோர் அடையாள அட்டை, அவர்கள் வசித்த தொகுதி, அவர்களது வாக்காளர் அடையாள அட்டை எண் குறித்தும் முழுமையாக ஆய்வு செய்யப்படும். எதிலுமே அவர்கள் பெயர் இல்லாவிட்டால் வரைவு பட்டியலில் அவர்கள் பெயர் இடம் பெறாது. மீண்டும் அவர்கள் ஆவணங்களை கொடுத்து மனு செய்ய வேண்டும்.

கேள்வி:- கணக்கெடுப்பு படிவம் கொண்டு செல்லும் போது வீடு பூட்டப்பட்டு இருந்தால் என்ன நடக்கும்?.

பதில்:- ஒவ்வொரு வீட்டுக்கும் 3 முறை அலுவலர்கள் வருவார் கள்.

கணக்கெடுப்பு

கேள்வி:- வாக்காளர்கள் முகவரி மாறி இருந்தால் என்ன செய்வது?
பதில்:- அதே பாகத்தில் மாறி இருந்தால் அவர்கள் அதிகாரியிடம் தெரிவிக்கலாம். தொகுதி மாறி இருந்தால் அவர்கள் பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறாது. மீண்டும் ஆட்சேபனை காலமான டிசம்பர் 9-ந் தேதி முதல் ஜனவரிமாதம் 8-ந் தேதிக்குள் முகவரி மாற்றத்திற்கான மனு மற்றும் அதற்கான ஆவணங்களை இணைத்து தரவேண்டும்.

கேள்வி: பெற்றோர்கள் சொந்த ஊரில் இருப்பார்கள். பிள்ளைகள் நகரங்களில் பணியாற்றுவார்கள். ஆனால் சொந்த ஊரில்தான் வாக்காளர் அடையாள அட்டை எண் இருக்கும். அவர்கள் என்ன செய்ய வேண்டும்.?

பதில்:- அதில் எந்த பிரச்சினையும் இல்லை. வீட்டில் கொடுக்கப்படும். அந்த கணக்கெடுப்பு படிவத்தை பிள்ளைகளுக்கு பதில் அவர்கள் பெற்றாேர்களே பூர்த்தி செய்து கொடுத்தால் போதும். நகரத்தில் உள்ள வாக்காளர் பட்டியலில் பிள்ளைகள் பெயர் இருக்கக்கூடாது. அப்படி இரட்டை பதிவு இருந்தால் ஒரு இடத்தில் மட்டுமே கணக்கெடுப்பு படிவத்தை கொடுக்க வேண்டும்.

பெயர் சேராது:

கேள்வி- தகுதியுள்ள ஒரு வாக்காளரை பட்டியலில் இருந்து நீக்கிவிட முடியுமா?.

பதில்: இந்த வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணியில் மாநில அரசுகள் மற்றும் அரசியல் கட்சி முகவர்கள் இணைந்து பணியாற்ற உள்ளனர். தகுதியுள்ள எந்த வாக்காளர் பெயரையும் யாரும் நீக்க முடியாது. ஒருவர் பெயரை நீக்கினால் அதற்கான காரணம், இறப்பு அல்லது முகவரியில் இல்லை என்பதனை தெளிவாக சொல்ல வேண்டும். இந்த விவரங்கள் ஊர் பலகைகளில் மக்களுக்கு அறிவிக்கப்படும்.

கேள்வி:- இந்த பணி குறித்து மக்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?

பதில்: வாக்காளர் கணக்கெடுப்பு படிவத்தை மக்கள் பெற்றுக்கொண்டு அதனை நிரப்பி திருப்பித் தரவேண்டும். ஒருவேளை தராவிட்டால் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து அவர் முகவரி மாறப்பட்டது அதேபோல இருந்தாலும் அவர்கள் பெயரும் பட்டியலில் இடம் பெறாது. அவர்கள் அதற்கான காலத்தில் மனு கொடுத்து பட்டியலில் சேர்த்து கொள்ளலாம். தகுதியான யார் பெயரும் விடுபடாது. இவ்வாறு அவர் கூறினார்.

புதிதாக சேர முடியுமா?

கேள்வி:- புதிய வாக்காளர்கள் இப்போது சேர முடியுமா?
தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் பதில்: கணக்கெடுப்பு படிவம் கொடுத்து பெறும் பணியின் போது 18 வயது ஆன புதிய வாக்காளர்கள் சேர்க்கை மட்டும் நடக்கும். அதற்காக வாக்காளர்கள் தங்கள் பெற்றோர் வாக்காளர் எண்ணை கொடுத்து உறுதிமொழி ஆவணம் மற்றும் படிவம்-6 கொடுத்தால் போதும். எந்த ஆவணமும் தர தேவையில்லை. ஆனால் இவர்கள் பெயர் வரைவு பட்டியலில் இடம் பெறாது. ஆட்சேபனை காலத்தில் இந்த படிவம் செய்யப்பட்டு தகுதி இருந்தால் இறுதி வாக்காளர் பட்டியலில் சேர முடியும்.

ஆகவே தங்களிடம் பொதுமக்கள் கேட்கும் கேள்விகளுக்கு உரிய விளக்கத்தினை அளிக்க மேற்கண்ட விளக்கம் போதுமானதாக இருக்கும் என்று நம்புகிறோம்..

நன்றி வணக்கம்...

...தேசப் பணியில்...
ச. வேலுச்சாமி DEEE,BBA.

எங்களின் அரசியலின் ஆரம்பமே..இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா
04/06/2025

எங்களின் அரசியலின் ஆரம்பமே..

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா

28/05/2025

பிணையில்லா விவசாய கடனின் வரம்பு ₹1.6 லட்சத்தில் இருந்து ₹2.0 லட்சமாக அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

Address

Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when BJP VELU posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share