TVK ITWing Pallavaram Constituency

TVK ITWing Pallavaram Constituency Official IT Wing Handle of Pallavaram Constituency,
Chengalpattu North District.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.

வருகின்ற மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிஇடைத்தேர்தலுக்கான தேர்தல் பணிக்குழுவில் துணைப்பொறுப்பாளராக என்னை நியமித்த கழகத் தல...
12/09/2026

வருகின்ற மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி
இடைத்தேர்தலுக்கான தேர்தல் பணிக்குழுவில் துணைப்
பொறுப்பாளராக என்னை நியமித்த கழகத் தலைவர்,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. C. ஜோசப்
விஜய் அவர்களுக்கும், கழகப் பொதுச் செயலாளரும்
மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை
அமைச்சருமான திரு. N. ஆனந்த் அவர்களுக்கும் எனது
மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கழகத் தோழர்களுடன் ஒன்றிணைந்து, மதுராந்தகம்
தொகுதியில் கழக வேட்பாளரின் வெற்றிக்காக முழு
அர்ப்பணிப்புடன் களப்பணியாற்றுவேன்.

நமது சின்னம் விசில்! வெற்றிச் சின்னம் விசில்!

- திருமதி. காமாட்சி ஜெயகிருஷ்ணன் MLA,
செங்கல்பட்டு வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர்,
பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர்

📢 சட்டமன்றத்தில் மக்கள் குரலாக நமது சட்டமன்ற உறுப்பினர்!“சொந்த வீடு என்பது வெறும் வசதிக்காக மட்டுமல்ல; ஏழை, எளிய, நடுத்த...
08/09/2026

📢 சட்டமன்றத்தில் மக்கள் குரலாக நமது சட்டமன்ற உறுப்பினர்!

“சொந்த வீடு என்பது வெறும் வசதிக்காக மட்டுமல்ல; ஏழை, எளிய, நடுத்தர மக்களின் கண்ணியமான வாழ்விற்கான அடிப்படைத் தேவையும் உரிமையும்.”

சொந்த வீடு வாங்கும் மக்களின் கனவிற்கு “பதிவுக் கட்டணமே” தடையாக மாறக்கூடாது என்பதை வலியுறுத்திய நமது பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி. ஜெ. காமாட்சி அவர்கள், தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள 7% முத்திரைத் தீர்வை + 2% பதிவுக் கட்டணம் என மொத்தம் 9% உள்ள கட்டணத்தை 7% ஆகக் குறைக்க வேண்டும் என சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்தார்.

மேலும், கட்டணம் குறைக்கப்பட்டால் பத்திரப் பதிவுகள் அதிகரித்து, அதன் மூலம் அரசின் வருவாயும் பெருகும் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

அதோடு, வாழ்வாதாரச் சுமையில் உள்ள முத்திரைத்தாள் விற்பனையாளர்களின் கமிஷனை உயர்த்துவதுடன், அவர்களின் மறைவுக்குப் பிறகு தகுதியுள்ள சட்டப்பூர்வ வாரிசுக்கு உரிமம் வழங்கும் நடைமுறையை அரசு கொண்டு வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

பெண்களின் கண்ணியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையிலும், குழந்தைகளின் பாதுகாப்பிற்காகத் தவிக்கும் ஒவ்வொரு தாயின் மனதிலும் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆற்றிய உரைக்கு ஒட்டுமொத்த பெண்களின் சார்பில் மனமார்ந்த நன்றியையும் சட்டமன்றத்தில் தெரிவித்தார்.

மக்களின் தேவைகளை சட்டமன்றத்தில் தொடர்ந்து ஒலிக்கச் செய்வோம்!

அறிவையும், ஒழுக்கத்தையும், மனிதநேயத்தையும் மாணவர்களின் உள்ளங்களில் விதைத்து, அவர்களின் எதிர்காலத்தை சிறப்பாக வடிவமைக்கும...
05/09/2026

அறிவையும், ஒழுக்கத்தையும், மனிதநேயத்தையும் மாணவர்களின் உள்ளங்களில் விதைத்து, அவர்களின் எதிர்காலத்தை சிறப்பாக வடிவமைக்கும் அனைத்து ஆசிரியர் பெருமக்களுக்கும் எனது உளமார்ந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

மாணவர்களின் திறமைகளை அடையாளம் கண்டு, அவர்களின் கனவுகளுக்கு வழிகாட்டி, நம்பிக்கையுடனும் தன்னம்பிக்கையுடனும் வாழ்வதற்கான அடித்தளத்தை அமைத்துத் தரும் ஆசிரியர்களின் பணி அளப்பரியது.

ஒரு தலைமுறையை உருவாக்கும் உன்னதப் பணியில் அர்ப்பணிப்புடன் செயல்படும் ஆசிரியர் பெருமக்களின் சேவைக்கு எனது மனமார்ந்த நன்றியையும், மரியாதையையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாணவர்களின் அறிவொளி என்றும் பெருகவும், அவர்களின் எதிர்காலம் வளமும் வெற்றியும் நிறைந்ததாக அமையவும் வாழ்த்துகிறேன்.

அனைத்து ஆசிரியர் பெருமக்களுக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்!

— பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர்
தமிழக வெற்றிக் கழகம்

🦚 ஸ்ரீ கிருஷ்ணர் அருளால் வாழ்வில் அன்பும், அமைதியும், மகிழ்ச்சியும் பெருகட்டும்!🌸 தர்மத்தின் பாதையில் நடந்து, நல்ல எண்ணங...
04/09/2026

🦚 ஸ்ரீ கிருஷ்ணர் அருளால் வாழ்வில் அன்பும், அமைதியும், மகிழ்ச்சியும் பெருகட்டும்!
🌸 தர்மத்தின் பாதையில் நடந்து, நல்ல எண்ணங்களுடன் வாழ்வோம்.
🙏 இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகள்! 🦚✨

“கடமையைச் செய்; பலனை எதிர்பார்க்காதே.”
— ஸ்ரீ கிருஷ்ணர்

தமிழினத் தலைவன் ❤️❤️‍🔥
03/09/2026

தமிழினத் தலைவன் ❤️❤️‍🔥

தமிழினத் தலைவன் ❤️🙏🏻
03/09/2026

தமிழினத் தலைவன் ❤️🙏🏻

01/09/2026
31/08/2026

பல்லாவரத்தின் குரல்... அரசின் உடனடி செயல்! 💯🔥

பல்லாவரத்தில் உள்ள தமிழறிஞர் மறைமலை அடிகளார் இல்லத்தை "தமிழ் பண்பாட்டு மையமாக" உருவாக்க சட்டமன்றத்தில் வலுவாகக் குரல் எழுப்பிய நமது சட்டமன்ற உறுப்பினர் திருமதி. காமாட்சி ஜெயகிருஷ்ணன் அவர்களுக்கும்,

அக்கோரிக்கையை ஏற்று உடனே நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்! 🙏

PallavaramMLA SuccessMoments TNGovt

Our heartfelt prayers are with the people of Nepal facing catastrophic floods. We are working closely with the Tamil Nad...
29/08/2026

Our heartfelt prayers are with the people of Nepal facing catastrophic floods. We are working closely with the Tamil Nadu Government, under the leadership of Hon'ble CM C. Joseph Vijay, who is taking all necessary steps to safely evacuate Tamil people stranded in Nepal. The TVK party prays for their swift return.

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். மாண்புமிகு முதலமைச்சர் திரு. C. ஜோசப் விஜய் அவர்களின் தலைமையிலான தமிழக அரசு, அங்கு சிக்கியுள்ள தமிழர்களை பாதுகாப்பாக மீட்கும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அனைவரும் நலமுடன் திரும்ப பிரார்த்திக்கிறோம்.

Pallavaram

Address

Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when TVK ITWing Pallavaram Constituency posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share