04/09/2026
அதிகரித்து வரும் சுங்கக் கட்டணத்தை உடனடியாக குறைக்க வேண்டும்!
தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் –
தமிழக சமத்துவ மக்கள் கட்சி
சென்னை செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடி முதல் திருநெல்வேலி வரை சுமார் 625 கிலோமீட்டர் தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்யும் வாகனங்களிடம் வசூலிக்கப்படும் அதிகப்படியான சுங்கக் கட்டணம் பொதுமக்களையும், வாகன உரிமையாளர்களையும், குறிப்பாக கனரக வாகன உரிமையாளர்களையும் கடுமையாக பாதித்து வருகிறது.
சென்னை முதல் திருநெல்வேலி வரையிலான இந்த நீண்ட தூரப் பயணத்தில் சுமார் 12 சுங்கச்சாவடிகள் அமைந்துள்ளன. தற்போதைய சுங்கக் கட்டண முறையில் நான்கு சக்கர வாகனங்களுக்கு 625 கிலோமீட்டர் பயணத்திற்கு சுமார் ₹1,120 வரை சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை இருப்பதாகக் கூறப்படுகிறது. அதேபோல், அதிக அச்சுகள் கொண்ட கனரக வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் மேலும் பல மடங்கு அதிகரித்து, சுமார் ₹3,195 வரை செலுத்த வேண்டிய நிலை உள்ளது.
இவ்வாறு சுங்கக் கட்டணம் தொடர்ந்து அதிகரித்து வருவது வாகன உரிமையாளர்களுக்கு மட்டுமல்லாமல், பொதுமக்களுக்கும் மிகப்பெரிய பொருளாதாரச் சுமையை ஏற்படுத்துகிறது. குறிப்பாக லாரி, கனரக சரக்கு வாகனங்கள் போன்றவை தினசரி பல்வேறு சுங்கச்சாவடிகளை கடந்து செல்ல வேண்டியிருப்பதால், சுங்கக் கட்டணமே அவர்களின் இயக்கச் செலவில் கணிசமான பங்காக மாறியுள்ளது. தமிழக அரசு மத்திய அரசை வழியுறுத்திடவேண்டும. Chief Minister of Tamil Nadu