DMK Student Wing

DMK Student Wing தி.மு.க மாணவர் அணி (Official Page) தமிழர்களால் தமிழர்களுக்காக தமிழர்களாலேயே நடத்தப்படுகிற ஒரே அரசியல் சமுதாய இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம்!

12/11/2015

இன்று இரவு 9 மணிக்கு புதிய தலைமுறை தொலைக்காட்சியில் 'நேர்பட பேசு' நேரடி விவாத நிகழ்ச்சியில் கழக மாணவரணி செயலாளர் அண்ணன் கடலூர் இள.புகழேந்தி அவர்கள் கலந்துகொண்டு பேசுகிறார்.

தமிழக மாணவ, மாணவியர்களின் எதிர்காலம் குறித்த தனது தொலைநோக்கு சிந்தனையை மிக நேர்த்தியாக எடுத்துரைத்திருக்கிறார் ஆருயிர் அ...
03/03/2014

தமிழக மாணவ, மாணவியர்களின் எதிர்காலம் குறித்த தனது தொலைநோக்கு சிந்தனையை மிக நேர்த்தியாக எடுத்துரைத்திருக்கிறார் ஆருயிர் அண்ணன் தளபதி அவர்கள்!

*** தனிப்பட்ட முறையில் நான் எப்போதும் நம்புவது,
பல லட்சக்கணக்கானவர்களின் எதிர்காலத்தை நிர்ணயம் செய்யக் கூடியது கல்வி. அதைப் பெறுவது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை. கல்வியைப் பெற போராடும் நிலை எப்போதுமே இருக்கக் கூடாது
- ஆருயிர் அண்ணன் தளபதி அவர்கள் ***

தலைவர் ஆணையிடுவார்! தளபதி வழிகாட்டுவார்! மாணவரணி செயல்படும்!

http://mkstamil.mkstalin.in/students-the-future-of-tamil-nadu

தமிழகம் இந்தியாவிலேயே கல்வியறிவு அதிகம் பெற்ற மாநிலங்களில் ஒன்று என்பது உங்களுக்குத் தெரியுமா ? தமிழகத்தில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 80% க்கும் மேற்பட்டோர் கல்வியறிவு பெற்றவர்கள். ஆரம்பக் கல்வி முதல் உயர் கல்வி வரை நாட்டிலேயே அதிகமான எண்ணிக்கையில் கல்வி வசதி பெற்றுள்ள மாணவ, மாணவியர் வசிக்கும் மா...

உழைப்பால் உயர்வுதியாகத்தால் மேன்மைபெற்றுள்ளதேதளபதியின் தனிப் பெருமை!அண்ணனே! அன்பின் சிகரமே!இதயத்தால் பாசமாலை அணிவித்து ம...
01/03/2014

உழைப்பால் உயர்வு
தியாகத்தால் மேன்மை
பெற்றுள்ளதே
தளபதியின் தனிப் பெருமை!

அண்ணனே! அன்பின் சிகரமே!
இதயத்தால் பாசமாலை அணிவித்து மகிழ்கிறேன். வாழ்க!
நீண்ட நெடுநாட்கள் மகிழ்வுடன் வாழ்க! வாழ்க!

புழல் ஒன்றிய தி.மு.க சார்பில் ஒன்றிய செயலாளர் புழல் நாராயணன் அவர்களின் ஏற்பாட்டில் புழல், கிராண்ட் லைனில் மாலை 6 மணி முத...
28/02/2014

புழல் ஒன்றிய தி.மு.க சார்பில் ஒன்றிய செயலாளர் புழல் நாராயணன் அவர்களின் ஏற்பாட்டில் புழல், கிராண்ட் லைனில் மாலை 6 மணி முதல் இரவு வரை தொடர் நிகழ்ச்சிகள்.

ஜீவஜோதி முதியோர்கள் -
அன்பு இல்ல மாணவர்களுக்கு நல உதவிகள் வழங்கும் விழா - தெருமுனை பிரசாரம்

நான்(கடலூர் இள. புகழேந்தி) கலந்துகொண்டு நல உதவிகள் வழங்கி உரையாற்றுகிறேன். உடன் மாணவரணி துணை செயலாளர் தம்பி பூவை ஜெரால்டு கலந்துகொள்கிறார்.

சிவகாசியில் தனியார் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் மீது காவல்துறை தடியடி!காட்டுமிராண்டித் தனமான செயலை செய்த ஜெயலலிதா அர...
27/02/2014

சிவகாசியில் தனியார் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் மீது காவல்துறை தடியடி!
காட்டுமிராண்டித் தனமான செயலை செய்த ஜெயலலிதா அரசை தி.மு.க மாணவர் அணி வன்மையாக கண்டிக்கிறது.

காயமடைந்த மாணவர்களை சந்தித்து ஆறுதல் கூறினேன். கூடுதல் பேருந்துகளை இயக்காவிட்டால் கழக மாணவரணி சார்பில் போராட்டம் நடத்தப்படும்.

- கடலூர் இள. புகழேந்தி M.A.,B.L
கழக மாணவரணி செயலாளர்

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா அரசு என் மீது தொடர்ந்துள்ள அவதூறு வழக்கை எதிர்கொள்ள நாளை...
25/02/2014

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா அரசு என் மீது தொடர்ந்துள்ள அவதூறு வழக்கை எதிர்கொள்ள நாளை காலை நீதிமன்றம் செல்லவிருக்கிறேன்.

அதை தொடர்ந்து நாளை மாலை 6 மணியளவில் விருதுநகர் மாவட்ட தி.மு.க மாணவரணி சார்பில் தம்பி கே.ஜி.ராஜகுரு ஏற்பாட்டில் நடைபெறும் ஆருயிர் அண்ணன் தளபதி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்டங்கள் வழங்கும் விழா மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சார மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு நலத்திட்டங்கள் வழங்கி சிறப்புரையாற்ற இருக்கிறேன்.

- கடலூர் இள. புகழேந்தி M.A.,B.L
கழக மாணவரணி செயலாளர்

தி.மு.க 10-வது மாநில மாநாட்டில் " மாணவரை உயர்த்தும் இனமானக் கொடி" எனும் தலைப்பில் நான்(கடலூர் இள. புகழேந்தி) ஆற்றிய உரை!...
20/02/2014

தி.மு.க 10-வது மாநில மாநாட்டில் " மாணவரை உயர்த்தும் இனமானக் கொடி" எனும் தலைப்பில் நான்(கடலூர் இள. புகழேந்தி) ஆற்றிய உரை!

https://www.youtube.com/watch?v=HAsbCnY7m7E

பிப்.15,16 - திருச்சியில் நடைபெறும் தி.மு.க 10-வது மாநில மாநாட்டில் "மாணவரை உயர்த்தும் இனமானக் கொடி" எனும் தலைப்பில் உரை...
12/02/2014

பிப்.15,16 - திருச்சியில் நடைபெறும் தி.மு.க 10-வது மாநில மாநாட்டில் "மாணவரை உயர்த்தும் இனமானக் கொடி" எனும் தலைப்பில் உரையாற்ற இருக்கிறேன்.

- கடலூர் இள. புகழேந்தி M.A.,B.L
கழக மாணவரணி செயலாளர்

நம் உயிரனைய தலைவர் கலைஞர் அழைக்கின்றார்! “இனமானவராய்!   கழக மாணவராய்!  திரண்டெழுந்து  வருக திருச்சிக்கு!”  *************...
12/02/2014

நம் உயிரனைய தலைவர் கலைஞர் அழைக்கின்றார்!
“இனமானவராய்! கழக மாணவராய்!
திரண்டெழுந்து வருக திருச்சிக்கு!”
****************************************************

திருச்சியில் பிப்ரவரி 15, 16 ஆகிய நாட்கள் நடை பெற உள்ள வரலாற்று பெருமைமிக்க திராவிடரியக்கத்தின் கல்வெட்டுப் பதிவு நிகழ்வான கழகத்தின் 10வது மாநில மாநாட்டிற்கு நம் உயிருக்கு நிகரான உத்தமத் தலைவர் கலைஞர் அழைத்துள்ளார்.

உயிருக்கும் மேலாக கடமை, கண்ணியம், கட்டுப்பாடு காத்திடுக என அறிவுறுத்தியுள்ளார்.

திராவிட இயக்கத்தைப் புதுப்பித்து வலுக்கூட்டி உறுதியுடன் நடத்திச் செல்லத்தான் திருச்சியில் கூடுகிறோம் என்றும் எங்கனும் எழுச்சி! இதுவே இன்றைய திருச்சி! நாளை காணுவோம்; தமிழகத்தின் மலர்ச்சி! என்றும் தாயின் பரிவுடன் படைத் தலைவனின் ஊக்கம் தரும் உற்சாகத்துடனும் நம்மை தலைவர் கலைஞர் மடல்கள் மூலம் அழைத்துள்ளார்.

இதுநாள்வரை அவர் மடல் தீட்டி அழைத்து என்றும் பல இலட்சத்திற்கும் குறைவாய் உடன்பிறப்புகள் வந்ததில்லை. அதிலும் திருச்சியில் இன்று திராவிடத் தமிழர்கள் தலைவரின் உடன்பிறப்புகள் ஐம்பது இலட்சத்திற்கும் மேலானோர் வருகின்ற வாய்ப்புகள் உள்ளதாக கொடநாடு தூங்கு மூஞ்சிகள் சத்தமில்லாமல் அலறிக்கிடப்பதாகவும், எப்படியாவது கெடுத்திட வேண்டும் என்று விருப்பத்துடன் இருப்பதாகவும் காவல்துறையில் பேசப்பட்டு வருவதை தவிர்த்துவிட முடியாது.

தி.மு.க. மாணவர் அணி நண்பர்கள் ஏற்கனவே ஒவ்வொரு மாவட்ட அமைப்புக் கூட்டங்களில் போடப்பட்ட தீர்மானங்களின்படி தவறாமல் அனைவரும் திருச்சி வரவேண்டும். அமைப்பாளர் - துணை அமைப்பாளர்கள் அதற்குரிய பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு சொன்னதைச் செய்து வெல்லுங்கள். தவறாமல் கறுப்பு பேண்ட் - வெள்ளைச் சட்டையுடன் கழக வீரர் கடலில் கப்பல் போல் காட்சி தருவீர்; அழைத்து மகிழ்ந்த தலைவர் அகங்குளிர வேண்டும்.

தலைவர் கலைஞர் அவர்களின் அழைப்பு மடல் ஏழில் குறிப்பாக, “வரலாறு படித்துத் தமிழகத்தில் புதிய வரலாறு படைத்திட தலைநிமிர்ந்து வந்து கலந்து கொள்ளும் மாணவச் செல்வங்களையும்” என்று நமது மாணவர் அணி பெருமையாய் சொல்லிக் கொள்ளும் வண்ணம் அழைத்துள்ளார். எனவே, கழக மாணவர்கள் ஒவ்வொரு வரும் கழக மாணாக்கர்கள் என்கிற விதமாக பூரிப்புடன் கலந்து கொள்ள வேண்டும்.

“இங்குள்ள நாட்டுக்கு இழிகழுதை ஆட்சியா?
கைவிரித்து வந்த கயவர் - நம்மிடை
பொய்விரித்து புலன்கள் மறைத்து - நமக்குள்ள
உரிமையெல்லாம் தமக்கென்பார் எனில்
வழிவழி வந்த உன் மறத்தன்மை எங்கே?
மொழிப் பற்றெங்கே? விழிப்புற்றெழுக”

என்ற புரட்சிக் கவி பாவேந்தர் பாடலுக்கு பொருளறிந்து பொங்கியெழுந்து இனமானவனே, கழக மாணவனே, திருச்சிக்கு வா! திரண்டெழுந்து வா!

'தலைவர் ஆணையிடுவார்
தளபதி வழிகாட்டுவார்
மாணவர் அணி செயல்படும்’

என்ற நமது இலட்சிய முழக்கத்திற்கு உயிரூட்டி அலைகடலென அணி திரண்டு வாரீர்!

- கடலூர் இள. புகழேந்தி M.A.,B.L
கழக மாணவரணி செயலாளர்

இன்று திருச்சியில் நடைபெற்ற கழக மாணவர் அணி மாவட்ட அமைப்பாளர் - துணை அமைப்பாளர்கள் கூட்டத்தில் பிப்.15,16 தேதிகளில் திருச...
31/01/2014

இன்று திருச்சியில் நடைபெற்ற கழக மாணவர் அணி மாவட்ட அமைப்பாளர் - துணை அமைப்பாளர்கள் கூட்டத்தில் பிப்.15,16 தேதிகளில் திருச்சி அண்ணா திடலில் நடைபெறும் தி.மு.க மாநில மாநாட்டில் 25,000(இருபத்தி ஐயாயிரம்)-கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொள்வதென தீர்மானிக்கப்பட்டது.

- கடலூர் இள. புகழேந்தி M.A.,B.L
கழக மாணவரணி செயலாளர்

இன்பத் தமிழ் மொழி காத்திட, மொழிப் போர்க்களத்தில் தங்களது இன்னுயிரையே ஈத்த தியாக மறவர்களின் நினைவு போற்றி அவர்களுக்கு வீர...
11/01/2014

இன்பத் தமிழ் மொழி காத்திட, மொழிப் போர்க்களத்தில் தங்களது இன்னுயிரையே ஈத்த தியாக மறவர்களின் நினைவு போற்றி அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்திடும் நாள் ஜனவரி 25.

இந்நாளில் கழகத்தின் சார்பில் தமிழகமெங்கும் "மொழிப்போர்த் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள்" நடைபெறுகின்றன.

சேலத்தில் கழகப் பொருளாளர் ஆருயிர் அண்ணன் தளபதி அவர்கள் சிறப்புரையாற்றுகிறார்.

நாமக்கல்லில் கழக துணை பொதுச் செயலாளர் அண்ணன் துரைமுருகன், கும்மிடிப்பூடியில் கழக துணை பொதுச் செயலாளர் திருமதி. எஸ்.பி. சற்குணபாண்டியன், தருமபுரியில் கழக துணை பொதுச் செயலாளர் வி.பி.துரைசாமி ஆகியோர் பேசுகின்றனர்.

-கடலூர் இள. புகழேந்தி M.A., B.L
செயலாளர், தி.மு.க மாணவர் அணி

சமூக நீதி காக்க கழக மாணவரணி தோழர்களே அணிதிரண்டு வாரீர்!
06/01/2014

சமூக நீதி காக்க கழக மாணவரணி தோழர்களே அணிதிரண்டு வாரீர்!

Address

அண்ணா அறிவாலயம்
Chennai
600018

Alerts

Be the first to know and let us send you an email when DMK Student Wing posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to DMK Student Wing:

Share