Greater Chennai Corporation

Greater Chennai Corporation பெருநகர சென்னை மாநகராட்சி | மாவட்ட தேர்தல் ஆணையம் சென்னை
📞 1913

This is the Official page of Greater Chennai Corporation.
(2)

05/09/2026

மண்டலம் 6, 70 அடி சாலையில் உள்ள பல்வேறு பேருந்து நிழற்குடைகளை (Bus Shelters) தண்ணீர் கொண்டு சுத்தம் செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன! பொதுமக்கள் பயன்படும் பொது இடங்களைச் சுத்தமாக வைத்திருப்போம்.

வழிகாட்டும் ஒவ்வொரு ஆசிரியருக்கும் எங்களின் இதயப்பூர்வமான ஆசிரியர் தின வாழ்த்துகள்! ஆசிரியர்கள் சிந்தனைகளைச் செதுக்கி, க...
05/09/2026

வழிகாட்டும் ஒவ்வொரு ஆசிரியருக்கும் எங்களின் இதயப்பூர்வமான ஆசிரியர் தின வாழ்த்துகள்!

ஆசிரியர்கள் சிந்தனைகளைச் செதுக்கி, கனவுகளுக்கு ஊக்கமளித்து, நமது எதிர்காலத்தை வடிவமைக்கிறார்கள். பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் அனைத்து ஆசிரியர்களுக்கும் நன்றி!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.என்....
04/09/2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.என். ஆனந்த் அவர்கள், மாண்புமிகு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜுனா அவர்கள், மாண்புமிகு எரிசக்தி, வளங்கள் மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு.சி. டி. ஆர். நிர்மல்குமார் அவர்கள், மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள் முன்னிலையில், பெருநகர சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுடன் அவர்களது கோரிக்கைகள் குறித்து பேச்சு வார்த்தை இன்று (04.09.2026) ரிப்பன் கட்டட அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி. எஸ்.சமீரன், இ.ஆ.ப., இணை ஆணையாளர் (சுகாதாரம்) திருமதி ஸ்ரேயா பி. சிங், இ.ஆ.ப., மத்திய வட்டார துணை ஆணையாளர் திரு. எச்.ஆர். கௌஷிக், இ.ஆ.ப., உழைப்போர் உரிமை இயக்க நிர்வாகிகள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

| |

04/09/2026

கொசு ஒழிப்புப் புகைபரப்பும் பணி!

மண்டலம் – 13 | வார்டு – 171 | சண்முகபுரம் பகுதியில், பொதுமக்களின் நலன் மற்றும் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு கொசு ஒழிப்புப் புகைபரப்பும் பணி மேற்கொள்ளப்பட்டது.

“கொசுவை ஒழிப்போம் – நோய்களைத் தடுப்போம்!”

#தூய்மையானசென்னை #கொசுஒழிப்பு

கொடுங்கையூர் கால்வாய் தூய்மைப் பணி!கொடுங்கையூர் கால்வாயில் தொடர்ந்து ஆகாயத் தாமரைகள் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வர...
04/09/2026

கொடுங்கையூர் கால்வாய் தூய்மைப் பணி!

கொடுங்கையூர் கால்வாயில் தொடர்ந்து ஆகாயத் தாமரைகள் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

📍 மண்டலம் – 04 | வார்டு – 37

#தூய்மையானசென்னை #தூய்மைப்பணி

04/09/2026

ஒழுங்கான தொடக்கம் – சிறப்பான தூய்மைப் பணி!

ஒவ்வொரு நாளும் பணியின் தொடக்கத்திலேயே மண்டலம் – 12, தூய்மைப் பணிகள் மேற்கொள்ளும் பணிமனை (Depot) பகுதியில் தூய்மைப் பணியாளர்களுக்கான பணியாளர் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு, அன்றைய பணித்திட்டம், பணிப் பிரிவுகள், பணிப் பங்குகள், விதிமுறைகள் மற்றும் பொறுப்புகள் ஆகியவை தெளிவாக விளக்கப்படுகின்றன.

மேலும், பணியாளர்களின் வருகை மின்னணு முறையில் பதிவு செய்யப்பட்டு, நாளின் தொடக்கத்திலிருந்தே அனைத்து பணியாளர்களும் ஒழுங்குபடுத்தப்பட்டு, திட்டமிட்ட முறையில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

“ஒவ்வொரு நாளும் திட்டமிட்டு செயல்படுவோம்; தூய்மையான சென்னையை உருவாக்குவோம்!”

#தூய்மையானசென்னை #தூய்மைப்பணி

04/09/2026

இரவில் தூய்மை… காலையில் புதுப்பொலிவு!

பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம் – 06, வார்டு – 74 & 75-க்குட்பட்ட கொன்னூர் நெடுஞ்சாலையில், இரவு நேரத்தில் தீவிர தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

தூய்மையான நாளை உருவாக்கும் நம் தூய்மைப் பணியாளர்கள்!

| | |

03/09/2026

இன்று (03.09.2026) மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பொது இடங்கள் மற்றும் பொதுப் போக்குவரத்தில் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்வது குறித்த கல்லூரி பிரதிநிதிகளுடனான ஒருங்கிணைப்புக் கூட்டம் ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், இணை ஆணையாளர் (பணிகள்) திரு.செ.சரவணன், இ.ஆ.ப., பாலினம் மற்றும் கொள்கை ஆய்வகக் குழுத் தலைவர் முனைவர் லெஜிஸ் மற்றும் அலுவலர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள், கல்லூரி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

| | |

Address

Chennai

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Alerts

Be the first to know and let us send you an email when Greater Chennai Corporation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share