03/03/2026
தமிழ்நாட்டின் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களிலிருந்து ஆன்மீகப் பயணம் மேற்கொண்ட சுமார் 22 பேர் கொண்ட குழுவின் வாகனமானது உத்திரபிரதேச மாநிலம் வாரணாசியிலிருந்து புறப்பட்டு பீகார் மாநிலம் கயாவிற்கு செல்லும் வழியில் ஜமுஹர் இடத்திற்கு அருகே 26.02.2026 அன்று அதிகாலை 3.00 மணியளவில் சரக்கு வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளாகியது.
இவ்விபத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த திரு. ராமோ (வயது 83) என்ற நபர் நிகழ்விடத்திலே உயிரிழந்த நிலையில், காயமடைந்த மற்றவர்கள் அருகில் உள்ள "நாராயண் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்" அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.
மேலும், உயிரிழந்தவரின் உடலானது அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பெற்ற 14 நபர்கள், இரயில் (12389 / Gaya Mas Express) மூலம் சென்னை, சென்ட்ரல் இரயில் நிலையத்திற்கு இன்று (02.03.2026) மாலை வந்தடைந்தனர்.
இவர்களின் மருத்துவ வசதி தேவைப்பட்ட நான்கு நபர்களுக்கு (கோபு, ரத்னா, சுவாமிநாதன், சம்பத்) அரசின் சார்பில், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை வாயிலாக அவசர ஊர்தி (Ambulance) ஏற்பாடு செய்யப்பட்டு, அவர்கள் தேர்வு செய்த மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.