02/03/2026
Suvadugal Foundation Trust சார்பாக, Chengalpattu பகுதியில் உள்ள Hawishkar Happy High School பள்ளியில் படிக்கும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்கப்பட்டது.
Board Exam எழுத தயாராகும் 50 மாணவர்களுக்கு தேர்விற்கு தேவையான tiffen box, pen, pencil மற்றும் முக்கியமான எழுதுபொருட்கள் அன்புடன் வழங்கப்பட்டன.
இந்த முயற்சியின் நோக்கம் மாணவர்களுக்கு பொருள் உதவி அளிப்பதற்கு மட்டும் அல்ல; அவர்களின் கல்விப் பயணத்தில் நம்பிக்கை மற்றும் ஊக்கம் அளிப்பதே ஆகும்.
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு என்பது ஒரு முக்கியமான கட்டம். அந்த கட்டத்தில் மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் முன்னேற Suvadugal Foundation தனது சிறிய பங்கினை வழங்கியுள்ளது.
கல்வியே வாழ்க்கையை மாற்றும் சக்தி என்பதை நம்பும் எங்கள் நிறுவனம், தொடர்ந்து சமூக நல நடவடிக்கைகளில் ஈடுபட்டு, பல மாணவர்களின் கனவுகளை நனவாக்க உறுதிபூண்டுள்ளது.