10/03/2022
⬛🟥⬛🟥⬛🟥⬛🟥⬛🟥
அன்பார்ந்த கழகத் தோழர்களுக்கு வணக்கம்🙏 11-03-2022 வெள்ளிக்கிழமை நமது கழக தலைவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான நம் அன்பு தளபதி அவர்களுடைய 69-வது பிறந்த நாள் நலத்திட்டங்கள் வழங்கும் விழா மதுராந்தகம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் சரவம்பாக்கம் கூட்ரோட்டில் காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது. விழாவில் நம்மையெல்லாம் வழிநடத்தும் அன்பின் சிகரம், நமது காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் அண்ணன் கா.சுந்தர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அண்ணன் G.செல்வம் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். எனவே மாவட்ட துணை அமைப்பாளர்கள், ஒன்றிய நிர்வாகிகள், மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர்கள், கிளை கழக செயலாளர்கள் மற்றும் பிரதிநிதிகள், இளைஞர் அணி, மாணவர் அணி, மகளிரணி மற்றும் அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் துணை தலைவர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக முன்னோடிகள், கூட்டணி கட்சி தோழர்கள் கழக உடன்பிறப்புகள் என அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்கும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
கழக பணியில் என்றும்
பொன்.சிவக்குமார், CT B.A.,PGDBA.,
ஒன்றிய கழக பொறுப்பாளர்,
மதுராந்தகம் தெற்கு ஒன்றியம்.
🌄🌄🌅🌅🌅🌅🌄