அருப்புக்கோட்டை மதிமுக

அருப்புக்கோட்டை மதிமுக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் - அருப்புக்கோட்டை சட்ட மன்ற தொகுதி

03/06/2026

தமிழ்நாட்டின் அரசியலில் ஆளுமைமிக்க அடையாளமாக திகழ்ந்தவர், திராவிட இயக்க வரலாற்றில் தனிப்பெரும் அத்தியாயத்தை தனக்கென தன் அசைக்க முடியாத சாதனைகளால் உருவாக்கியவர், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் சரித்திரப் புகழை நினைவுகூர்ந்து, அவரது பிறந்த நாளான இன்று (03.06.2026) அவருக்கு புகழஞ்சலி செலுத்துகிறேன்.
கலைஞர் அவர்களின் சிந்தனைகளும், சாதனைகளும் என்றென்றும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு வழிகாட்டும்.

அன்புடன்
துரை வைகோ
நாடாளுமன்ற உறுப்பினர் (திருச்சி)
மறுமலர்ச்சி திமுக
03.06.2026


03/06/2026

கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, ஊடக வெளிச்சத்திற்காக தலைவர் வைகோ அவர்களைப் பார்த்து "பெட்டிப் படுக்கையோடு தவெகவுக்குப் போகத் தயாராகிவிட்டார்" என்று மல்லைசத்யா பிதற்றியிருப்பது கண்டிக்கத்தக்கது!

தலைவர் வைகோவின் கால் தூசுக்குக் கூடப் பெறாதவர்கள் எல்லாம் இன்று அவரைப் பற்றி விமர்சிப்பதுதான் கலிகால அரசியல் போலும்

​மல்லலை சத்யா அவர்களே, கொஞ்சம் வரலாற்றைத் திரும்பிப் பாருங்கள்
​அதிகாரத்தை உதைத்தவர் வைகோ நினைத்திருந்தால் மத்திய அமைச்சர் பதவி, மாநில அமைச்சர் பதவி என எத்தனையோ 'பெட்டிகளையும், படுக்கைகளையும்' சுகமாக அநுபவித்திருக்க முடியும். அத்தனையையும் தூக்கி எறிந்துவிட்டு, கொள்கைக்காகவும், தமிழ் இனத்திற்காகவும், ஈழத் தமிழர்களின் உரிமைக்காகவும் தன் வாழ்க்கையையே தியாகம் செய்தவர் சுயநல அரசியல்வாதிகளுக்குத்தான் அடுத்த கட்சி எங்கே, அடுத்த சீட்டு எங்கே என்ற கவலை இருக்கும். ஐம்பதாண்டு கால அரசியல் வரலாறும், தமிழக மக்களின் நெஞ்சில் நீங்கா இடமும் கொண்ட தலைவர் வைகோவுக்கு யாருடைய பெட்டியையும் தூக்க வேண்டிய அவசியம் இல்லை. மாறாக, உங்கள் அரசியல் எதிர்காலம் என்ன ஆகப்போகிறதோ என்ற பயத்தில்தான் நீங்கள் இப்படிப் பேசுகிறீர்கள் என்பது வெட்டவெளிச்சமாகத் தெரிகிறது

​நாகரிகம் காக்கத் தெரியாதா?: தலைவர் கலைஞரின் சிலைக்கு முன்னால் நின்றுகொண்டு, கலைஞரால் பாராட்டப்பட்ட, கலைஞரோடு முரண்பட்ட போதும் கண்ணியத்தைக் கடைப்பிடித்த ஒரு மூத்த தலைவரைப் பற்றி இப்படித் தரக்குறைவாகப் பேசுவதுதான் நீங்கள் கற்றுக் கொண்ட அரசியல் நாகரிகமா?

​"சரித்திரம் படைத்தவர்கள் சலசலப்புகளுக்கு அஞ்சுவதில்லை. அண்ணன் வைகோவின் தியாகப் பயணம் என்பது சுயநலப் பேச்சுகளால் சுருங்கிவிடாது."
​விளம்பரத்திற்காகப் பேசுவதை நிறுத்திவிட்டு உங்கள் வாட்சப் குழுவினை பலப்படுத்தி கடல் வாணிபத்தினை சிறக்க வழிபாருங்கள் ஊடக வெளிச்சத்திற்காக நீங்களும் உங்கள் அல்லைக்கைகளும் விமர்சனம் செய்வதினை நிறுத்துங்கள் ஓடிபோன வெவுசாரி வாக்ப்பட்ட வீட்டே தூற்றிக்கொண்டே அழைவால் அதுபோல் வாட்சப்குழுவில் ஒன்று சில இடங்களில் குறைத்துக்கொண்டே இருக்கிறது நீங்களும் உங்கள் வெளிச்சத்திற்காக கூட்டுக்குடுபத்தினை விட்டு வெளியேறி தனிக்குடித்தனம் நடத்தினாலும் குடும்பத்தின் மூத்தவரே பற்றி பேசியே குழம்பி அழைவார்கள் அதுபோல் ஆகாதிர்கள்

​ #வைகோ #மறுமலர்ச்சி #அரசியல்

பதிவு: ச.ரமேஷ்சங்கரன் தென்காசிநாடாளுமன்ற தொகுதி இணையதள அணி ஒருங்கிணைப்பாளர்
மறுமலர்ச்சி திமுக
03.02.2026

02/06/2026

திருச்சியில் கே.என்.நேரு இல்லை என்றால் அண்ணன் Durai Vaiko டெபாசிட் கூட வாங்கியிருக்க முடியாது என ஒரு சில திமுக இணைய தற்குறிகள் எழுதுகிறார்கள்.

அவர்களுக்கு மட்டுமான பதில்..

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் 1952 ல் இருந்து 2026 வரையிலும் 19 முறை நாடாளுமன்ற தேர்தல் நடந்திருக்கிறது.அதில் 12 பேர்கள் வென்று நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்திருக்கிறார்கள்.அந்த 12 பேர்களில் ஒரே ஒருவர் மட்டும் தான் திமுக.

1980 ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட என்.செல்வராஜ் என்பவர் மட்டும் தான் திருச்சியில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார்.

கம்யூனிஸ்ட் கட்சியின் வசத்தில் 1962 ல் இருந்து 1980 வரையில் இருந்த திருச்சி தொகுதியை,1980 ல் நடந்த தேர்தலில் வென்று திமுக கைப்பற்றியது.

1984 ல் இருந்து 2001 வரையிலும் காங்கிரஸ்,பாஜக,அதிமுக போன்ற கட்சிகள் வென்ற நிலையில்,

மதிமுக தான் 2004 ல் திருச்சியை கைப்பற்றியது.

2004 ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 40 க்கு 40 வெல்ல மக்கள் தலைவர் வைகோ தான் காரணம் என பல நாளிதழ்கள் தலைப்புச் செய்திகளாகவே வெளியிட்டன.

இந்தியா சுதந்திரம் பெற்ற பின் நடந்த 19 நாடாளுமன்றத் தேர்தல்களில்,இது வரையில் ஒரே ஒரு முறை மட்டுமே திருச்சியில் திமுக வென்றுள்ளது.இது தான் வரலாறு.

இப்படி இருக்கும் திருச்சி தொகுதியில் மாண்புமிகு முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வின் செல்வாக்கால் "மட்டும்" தான் இந்த நாடாளுமன்ற தேர்தலில் அண்ணன் துரை வைகோ வென்றார் என்பது ஆஸ்கார் விருது தகுதிக்கான நகைச்சுவை....


01/06/2026

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர், மாமனிதர் வைகோ ❤️🖤❤️ அவர்களையும், கழகத்தின் முதன்மைச் செயலாளர் திரு. துரை வைகோ அவர்களையும் திமுக சார்ந்த சிலர் சமூக வலைதளங்களில் ஒருமையில் விமர்சிப்பது காண நேர்ந்தது.

மாமனிதர் வைகோ அவர்களின் நீண்ட அரசியல் அனுபவமும், மக்கள் நலனுக்காக அவர் ஆற்றிய பணிகளும், அவ்வாறு கருத்து பதிவிடுபவர்களுக்கு முழுமையாக அறியாமல் இருக்கலாம்.

அரசியல் நாகரிகத்தை அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும். 82 வயதை கடந்தும், இன்றும் மக்கள் நலனுக்காக செயல்வீரராக பொதுவாழ்வில் தன்னலமின்றி பங்களித்து வரும் மாமனிதர் வைகோ அவர்கள் உண்மையில் பாராட்டுக்குரியவர்.

தென்மாவட்டங்களில் திமுக வேட்பாளர்களின் வெற்றிக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் மாமனிதர் வைகோ அவர்களின் பிரச்சாரம் முக்கிய பங்காற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

மதிப்பிற்குரிய வாஜ்பாய் அவர்களின் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இடம் பெறும் வாய்ப்பு இருந்தும், அதை தன் சகாக்களுக்கு வழங்கி அவர்களை முன்னிறுத்திய பெருந்தன்மை அவருடையது.

பதவி ஆசையற்றவர் என்றால் மாமனிதர் வைகோ அவர்கள் தான். மக்கள் நலனே பிரதானம் எனக் கருதி, இன்றும் பொதுவாழ்வில் சிம்மக்குரலோனாக அவர் செயல்பட்டு வருகிறார்.

எங்கள் கலிங்கப்பட்டியார் என்றும் மாமனிதரே…

அரசியல் நாகரிகத்தை அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக தோழர்கள் அமைதியுடனும், நாகரிகமான மக்கள் நலன் சார்ந்த அரசியலையும் முன்னெடுத்து செல்கிறோம்.

அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதி
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ❤️🖤❤️

Durai Vaiko

01/06/2026

ஸ்டாலின் தலையில் இடியை இறக்கிய துரை வைகோ..
| | | | | | |

01/06/2026

1999 திமுக+மதிமுக = 26/39 வெற்றி
2004 திமுக+மதிமுக = 39/39 வெற்றி
2019 திமுக+மதிமுக = 38/39 வெற்றி
2021 திமுக+மதிமுக =159/234 வெற்றி
2024 திமுக+மதிமுக = 39/39 வெற்றி

01/06/2026

Address

Aruppukottai
Aruppukottai

Alerts

Be the first to know and let us send you an email when அருப்புக்கோட்டை மதிமுக posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share