11/04/2026
தமிழகத்தின் வளர்ச்சி, அனைத்துத் தரப்பு மக்களின் முன்னேற்றம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, 'திராவிட மாடல் அரசு 2.0'-வின் தொலைநோக்குப் பார்வையோடு, நன்னிலம் சட்டமன்றத் தொகுதியை அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு முன்மாதிரித் தொகுதியாக மாற்ற, திமுக வேட்பாளர் திரு. முகம்மது முபாரக் அவர்கள் வழங்கும் 5 அம்சச் சிறப்பு வாக்குறுதிகள்:
🌾 1. விவசாயிகளின் அரணாக...
வேளாண்மையை உயிர்நாடியாகக் கொண்ட நன்னிலம் தொகுதியில், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த:
-மாணவர்களின் நலன் கருதி புதிய அரசு வேளாண் கல்லூரி நிறுவப்படும்.
-விவசாயிகளின் உழைப்பிற்கு உரிய பலன் கிடைக்க, நவீன வசதிகளுடன் கூடிய நிரந்தர நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்படும்.
-பாசன வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு, கடைமடை வரை நீர் சென்றடைய வழிவகை செய்யப்படும்.
✨ 2. ஆன்மீகமும் சுற்றுலாவும் மேம்பட...
-நன்னிலத்தின் பெருமைமிகு திருத்தலங்களின் மாண்பைப் போற்றிப் பாதுகாக்கவும், உள்ளூர் பொருளாதாரத்தை உயர்த்தவும்:
-தொகுதியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க வழிபாட்டுத் தலங்கள் புனரமைக்கப்பட்டு, ஆன்மீகச் சுற்றுலாத் திட்டத்தின் கீழ் பக்தர்களுக்கான தங்கும் விடுதி மற்றும் அடிப்படை வசதிகள் தரம் உயர்த்தப்படும்.
🎓 3. இளைய தலைமுறையின் கல்விக்காக...
மாணவ, மாணவிகளின் உயர்கல்விக் கனவை நனவாக்க:
-பெண் கல்வியை ஊக்குவிக்கப் புதிய அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கொண்டு வரப்படும்.
-மருத்துவத் துறையில் வேலைவாய்ப்புகளை உருவாக்கப் புதிய செவிலியர் பயற்சி கல்லூரி அமைக்கப்படும்.
🏥 4. தரமான மருத்துவ வசதி அனைவருக்கும்...
உயிர்காக்கும் மருத்துவச் சிகிச்சை உள்ளூரிலேயே கிடைக்க:
-தொகுதியில் உள்ள அரசு மருத்துவமனைகள் நவீன மருத்துவக் கருவிகளுடன் தரம் உயர்த்தப்பட்டு, 24 மணி நேர அவசரச் சிகிச்சை வசதிகள் உறுதி செய்யப்படும்.
-கிராமப்புறங்களில் உள்ள ஆரம்பச் சுகாதார நிலையங்கள் வலுப்படுத்தப்படும்.
🛣️ 5. கட்டமைப்பு மற்றும் அடிப்படைத் தேவைகள்...
ஒவ்வொரு கிராமமும் தன்னிறைவு பெற:
-கிராமப்புற சாலைகள் சீரமைக்கப்படும், முக்கிய ஊர்களை இணைக்கும் புதிய சாலைகள், பாலங்கள் அமைக்கப்படும்.
-அனைத்து இல்லங்களுக்கும் தூய்மையான குடிநீர் வசதி மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய சமுதாய நலக் கூடங்கள் அமைத்துத் தரப்படும்.
மக்களின் நலன் காக்க...
நன்னிலம் தொகுதி வளம் பெற...
உதயசூரியன் சின்னத்தில் வாக்களிப்பீர்!
| | #திராவிட_மாடல் | #முகம்மது_முபாரக் | #உதயசூரியன் | #நன்னிலம் | #வெல்வோம்_ஒன்றாக | #ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும்