05/02/2021
"விவசாயிகளின் காவலன்" "வேளாண்மை காத்த வேந்தன்"-நம் எடப்பாடியார்.
மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாட்சியில் "விவசாய பெருங்குடி" மக்களின் நலன்களைக் காக்க எண்ணற்ற பல நன்மைகளை செய்து வருகிறது.
டெல்டா மாவட்டங்களை "பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக" அறிவித்து திருச்சி, தஞ்சாவூர்,நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களை விவசாயத்தின் அழிவின் விளிம்பிலிருந்து மீட்டெடுத்தது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான தமிழக அரசு.
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்து,அதனை அரசிதழில் வெளியிட்டு மாபெரும் சாதனையை நிகழ்த்தியது அம்மா தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசு.
முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை உயர்த்தி தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களின் நீர் தேவையைப் பூர்த்தி செய்தது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான அரசு.
"குடிமராமத்து" என்னும் மகத்தான திட்டத்தால் ஏரி, குளங்கள் என அனைத்து நீர்நிலைகளையும் தூர்வாரி நீர் மேலாண்மையில் சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வு செய்யப்பட காரணமாக இருந்தது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான அரசு.
அந்த வரிசையில் வரலாற்று சிறப்புமிக்க ஒரு நிகழ்வாக இன்று சட்டப்பேரவையில் மாண்புமிகு தமிழகத்தின் முதலமைச்சர், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் இணை ஒருங்கிணைப்பாளர், "வேளாண்மை காத்த வேந்தன்" அண்ணன் திருமிகு.எடப்பாடி.கே.பழனிச்சாமி அவர்கள் கூட்டுறவு வங்கிகளில் பயிர் கடனாக பெற்றுள்ள 16.26 லட்சம் விவசாயிகளின் ரூ.12,510 கோடி மதிப்பிலான கடன்களை தள்ளுபடி செய்து மாபெரும் சாதனை நிகழ்த்தியுள்ள அரசு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் அரசு என்பதை இங்கே மிகுந்த மகிழ்ச்சியோடும், அடுத்த ஆட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சிதான் என்கின்ற எழுச்சியோடும் இங்கே பதிவிடுகிறேன்.
என்றுமே அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த உதவும் ஒரே அரசு நமது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் அரசு என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளது. எனவே மக்கள் அனைவரும் பொய்களை சொல்லி ஆட்சிக்கு வர நினைக்கும் திமுகவை நம்பாமல், செயலில் செய்து காட்டி அடுத்த ஆட்சியும் நமது ஆட்சியே என்ற நிலைக்கு மக்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு இங்கே உங்களை வேண்டி விரும்பி கேட்டுக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
என்றும் மக்களுடன் நான்
சேவூர்.எஸ்.இராமச்சந்திரன்
கழக அமைப்பு செயலாளர்
இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர்
தி.மலை மாவட்டம்.