நம்ம அறந்தாங்கி - Namma Aranthangi

நம்ம அறந்தாங்கி - Namma Aranthangi நம்ம அறந்தாங்கி

இனிமேல் செய்தித்தாள் போன்ற அச்சிட்ட காகிதங்களில் நேரடியாக படும் வகையில் உணவு பொருட்களை விநியோகிக்க கூடாது, பஜ்ஜி, சிக்கன...
15/06/2025

இனிமேல் செய்தித்தாள் போன்ற அச்சிட்ட காகிதங்களில் நேரடியாக படும் வகையில் உணவு பொருட்களை விநியோகிக்க கூடாது, பஜ்ஜி, சிக்கன் 65 போன்ற உணவுகளில் செயற்கை நிறமிகளை சேர்க்கக் கூடாது என உணவு வணிகர்களுக்கு, உணவு பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.

உணவு வணிகர்களின் கவனத்துக்காக 14 புதிய வழிகாட்டு நெறிமுறைகளை உணவு பாதுகாப்புத் துறை வழங்கியுள்ளது. இந்த அறிவிப்புகளை உணவு வணிகர்கள் பின்பற்றாமல் உணவு விற்பனை செய்தாலோ அல்லது தயாரித்தாலோ கடையின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உணவு பாதுகாப்புத் துறை எச்சரித்துள்ளது.

இதுதொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளில் கூறியிருப்பதாவது: அனைத்து உணவு வணிகர்களும் https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து, உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழை பெற்றிருக்க வேண்டும்.

* உணவு வணிக நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் டைஃபாய்டு, மஞ்சள் காமாலை உள்ளிட்ட நோய்களுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தி, மருத்துவத் தகுதி சான்றிதழை வைத்திருக்க வேண்டும்.

* தண்ணீரை பகுப்பாய்வு செய்து பகுப்பாய்வறிக்கை வைத்திருக்க வேண்டும்.

* உணவு பொருட்களை ஈக்கள், பூச்சிகள் மொய்க்காத வண்ணம் கண்ணாடி பெட்டியில் மூடி வைத்து காட்சிப்படுத்த வேண்டும்.

* அதேபோல் உணவு எண்ணெயை ஒருமுறை மட்டுமே சமைக்கப் பயன்படுத்த வேண்டும். பயன்படுத்திய எண்ணெயை உணவு பாதுகாப்புத் துறை அங்கீகரித்த கொள்முதலாளருக்கு மட்டுமே விற்க வேண்டும்.

* விற்பனையாகாமல் மீதமான உணவை பொதுமக்களுக்கு வழங்காமல் அப்புறப்படுத்திவிட வேண்டும்.


* செய்தித்தாள்கள் போன்ற அச்சிட்ட காகிதங்களில் உணவுப் பொருட்கள் நேரடியாகபடும் வகையில் பரிமாறவோ அல்லது பொட்டலமிடவோ கூடாது.
குறிப்பாக உணவு பொருட்களை அனுமதிக்கப்படாத பிளாஸ்டிக் பைகளில் சூடாக பொட்டலமிடக்கூடாது.

* உணவகங்களில் உணவு பரிமாற வாழை இலை, அனுமதிக்கப்பட்ட பார்ச்மெண்ட் பேப்பர், அலுமினியம் ஃபாயில் ஆகியவற்றை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் பயன்படுத்தக் கூடாது. லேபிள் விவரங்களின்றி பொதுமக்களுக்கு விற்பனை செய்யக்கூடாது.

* உணவு பாதுகாப்புத் துறையின் உரிம எண்ணுடன் கூடிய லேபிள் விவரங்கள் அதில் இடம்பெற்றிருக்க வேண்டும்.

* உணவு மற்றும் நொறுக்குத் தீனிகள் தயாரிக்க அயோடின் கலந்த உப்பு மட்டுமே பயன்படுத்த வேண்டும். உணவகங்கள், பேக்கரி, இனிப்பகங்களில் அயோடின் கலக்காத உப்பு இருக்கக்கூடாது. முக்கியமாக சிக்கன் 65, பஜ்ஜி, கோபி 65 போன்றவற்றில் செயற்கை நிறமிகளை சேர்க்கக் கூடாது.

* உணவு வணிகர்கள் அனைவரும் இந்த அறிவிப்புகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். தவறும் பட்சத்தில் எவ்வித முன்னறிவுப்பும் இன்றி உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

*மாதவனையும் ஈசனையும் வணங்கிய மார்கழி முடிந்தது**ஆதவனை வணங்கிட* *தைப்பொங்கல் வருகுது**போகட்டும் துன்பமென போகியோடு* *துவங்...
15/01/2024

*மாதவனையும் ஈசனையும் வணங்கிய மார்கழி முடிந்தது*
*ஆதவனை வணங்கிட* *தைப்பொங்கல் வருகுது*
*போகட்டும் துன்பமென போகியோடு* *துவங்குது*
*பொங்கட்டும்* *இன்பமென பொங்கல் தொடருது* *இனிய பொங்கல் நாளில்*
*மகிழ்ச்சியும் மன அமைதியும்*
*பெருகட்டும் ஆரோக்கியமும்*
*செல்வமும் பொங்கட்டும்*
*எங்கும் சாந்தி நிலவட்டும்*

*எண்ணியது ஈடேற*
*தமிழர் திருநாள்*
*தைப்பொங்கல் வாழ்த்துக்கள்* 🙏

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.
15/08/2023

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

ஈகை திருநாள் வாழ்த்துக்கள்..!ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியைமாற்றுவார் ஆற்றலின் பின்பொருள் :தவ வலிமை உடையவரின் வலிமை...
21/04/2023

ஈகை திருநாள் வாழ்த்துக்கள்..!

ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்

பொருள் :

தவ வலிமை உடையவரின் வலிமை ;
பசியை பொறுத்துக் கொள்ளுதலாகும்,
அதுவும் அப்பசியை உணவு கொடுத்து
மாற்றுகின்றவரின் ஆற்றலுக்குப்
பிற்பட்டதாகும்,

இக்குறள் ரமலான் மாதத்தில்
மாசற்ற நோன்பு இருந்து
இயலாதோருக்கு கொடுத்து வந்து
இறைவனின் நாட்டம் கொண்டு
சக உயிரின் பசியை போக்கும்
ஒவ்வோரு‌வருக்கும் பொருந்தும்,

சாதி மத வேறுபாடின்றி சமத்துவம்,
சகோதரத்துவம் நிலைக்க
இதயம் கனிந்த ஈகை
திருநாள் வாழ்த்துக்கள்..!!

14/04/2023
அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகள்.
26/01/2023

அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகள்.

அன்பை மட்டுமே விதைத்து சென்ற இயேசு பிரான் பிறந்த தினம் இன்று. நாமும் அன்பை விதைப்போம்; அன்பால் உலகை ஆள்வோம்.. அன்புடன் க...
25/12/2022

அன்பை மட்டுமே விதைத்து சென்ற இயேசு பிரான் பிறந்த தினம் இன்று. நாமும் அன்பை விதைப்போம்; அன்பால் உலகை ஆள்வோம்.. அன்புடன் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்,.

சித்திரை வாழ்த்து !சித்திரையே வருகசெழுமையான வாழ்வை தருக!சாதிமத மோதலில்லாசமத்துவத்தை தருக !நோய்நொடி இல்லாதவாழ்க்கையை தருக...
14/04/2022

சித்திரை வாழ்த்து !

சித்திரையே வருக
செழுமையான வாழ்வை தருக!

சாதிமத மோதலில்லா
சமத்துவத்தை தருக !

நோய்நொடி இல்லாத
வாழ்க்கையை தருக!

கொரானா இல்லாத
தமிழகத்தை தருக!
வளமான இந்தியாவை தருக!

தரணியெல்லாம்- நல்
மழைப்பொழிய வைத்து தருக!

நித்தம் நித்தம் யுத்தமில்லா
நித்திரையை தருக !

சித்திரை தமிழ்தாயே வருக -மக்களுக்கு
செழுமையான வாழ்வை தருக!

Address

கிருஷ்ணா பஜாஜ்
Aranthangi

Website

Alerts

Be the first to know and let us send you an email when நம்ம அறந்தாங்கி - Namma Aranthangi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share